சிவாஜி கணேசன்

நாடக ,திரைப்பட நடிகர் மற்றும் முன்னாள் அரசியல்வாதி

சிவாஜி கணேசன் (அக்டோபர் 1, 1927 - ஜூலை 21, 2001) புகழ் பெற்ற தமிழ் திரைப்பட நடிகர் ஆவார். விழுப்புரம் சின்னையாப்பிள்ளை கணேசன் என்பது இவரது இயற்பெயர். இவர், பராசக்தி என்ற திரைப்படத்தின் மூலம் தமிழ்த் திரையுலகில் அறிமுகமானார்.

மேற்கோள்கள்

தொகு
  • அத்தந்த இனத்தவர்களை அந்தந்த இனத்தவர்கள் பாராட்ட வேண்டும். நடிகரை நடிகர் பாராட்ட வேண்டும். இசையமைப்பாளரை இசையமைப்பாளர் பாராட்ட வேண்டும். அதுதான் முறை.[1]
  • மனிதன் வளர வளர குனிய வேண்டும் என்பதுபோல், பாராட்டுக்களை எச்சரிக்கைகளாகக் கொள்ள வேண்டும். என்னைப் பொறுத்தவரையில் பாராட்டை எச்சரிக்கையாகவே கருதுகிறேன். — (30.4-1960)[2]

நபர் குறித்த மேற்கோள்கள்

தொகு
  • "சிவாஜியின் மிகப்பெரிய சொத்து அவருடைய ஒளிமிக்க, உயிர்ப்புள்ள கண்கள்தான். அந்தக் கண்களை வைத்துத்தான் பரிவை, பாசத்தை, பயத்தை, கோபத்தை, அழுகையை, ஆச்சர்யத்தை, அப்பாவித்தனத்தை, ஏக்கத்தை, ஏமாற்றத்தை, வீரத்தை, விவேகத்தை - அவர் அதிகமாக வெளிப்படுத்தினார்" - சிவாஜியைப் பற்றி சிவகுமார் கூறியது.[3]
  • "தமிழை அவரைப்போல் உச்சரித்த நடிகர்கள் இதுவரை பிறக்கவில்லை." - சிவாஜியைப் பற்றி சிவகுமார் கூறியது.[3]
  • "ஒரு நடிகன் வேஷம் கட்டுவதிலேயே 50% மார்க் வாங்கிவிட வேண்டும் என்று சொல்வார். விதவிதமான வேடம் அணிந்து பார்ப்பதில் அவருக்கு அடங்காத வெறி உண்டு." - சிவாஜியைப் பற்றி சிவகுமார் கூறியது.[3]
  • "கவிதைகளில் ஒரு தாளம் இருப்பதுபோல, பேசும் வசனங்ளில் ஒரு ரிதம், நடக்கும் நடையிள் ஒரு தாளம் இருக்கிறது என்பதை அடிக்கடி சொல்வார்." - சிவாஜியைப் பற்றி சிவகுமார் கூறியது.[3]
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


சான்றுகள்

தொகு
  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 31-40. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  2. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 91-100. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  3. 3.0 3.1 3.2 3.3 சிவகுமார் (2010). இது ராஜபாட்டை அல்ல. அல்லயன்ஸ். pp. 484-492. 
"https://ta.wikiquote.org/w/index.php?title=சிவாஜி_கணேசன்&oldid=18563" இலிருந்து மீள்விக்கப்பட்டது