சில்வியா பிளாத்
அமெரிக்க கவிஞர் மற்றும் எழுத்தாளர் (1932-1963)
சில்வியா பிளாத் (Sylvia Plath, அக்டோபர் 27, 1932 - பிப்ரவரி 11, 1963) ஒரு அமெரிக்கப் பெண் கவிஞரும், புதின, சிறுகதை எழுத்தாளரும் ஆவார். குறிப்பாக, அவரது கவிதைகளுக்காக அறியப்படுகின்றார்.
மேற்கோள்கள்
தொகு- மரணித்தல் ஒரு கலை. மற்ற அனைத்தையும் போலவே நான் அதை மிகச் சிறப்பாக செய்கிறேன்.
- அன்பால் அல்லது வெறுப்பால் மறைக்கப் படாமல் நான் பார்க்கும் எல்லாவற்றையும் அப்படியே உடனே விழுங்குகிறேன்.[1]
- ஓய்வெடுத்தால், ஆழ்ந்த சிந்தனையில் மூழ்கினால் நான் பைத்தியம் ஆகிவிடுகிறேன்.
- தன்னை அழிப்பதன் மூலமாக இந்த உலகத்தை அழிக்க நினைக்கும் அதீத அகங்காரத்தினால் என்னை நானே ஏமாற்றிக்கொண்டிருந்தேன். உண்மையில், என்னுடைய பொறுப்பிலிருந்து தப்பித்து மீண்டும் கர்ப்பப்பையினுள் சென்று ஒளிந்துகொள்ளவே தற்கொலை செய்துகொள்ள விரும்பினேன்.[2]
- அவர் தந்தையின் மரண செய்தியைச் சொன்னபோது,
- இனி நான் ஒருபோதும் கடவுளோடு பேசமாட்டேன்.
- எந்த மகத்துவமும் இறங்கி அருளவில்லை.