சிற்றிதழ் என்பது மொழியில் மறுமலர்ச்சி ஏற்படுத்தவும், இலக்கியத்தில் புதுமையும் வளமும் சேர்க்கவும் விரும்பும் படைப்பாளிகள், தங்கள் சோதனை முயற்சிகளை எல்லாம் பிரசுரிப்பதற்குத் தங்களுக்கென்று தனிப் பத்திரிகை தேவை என்று கருதி வெளியிடும் இதழ் ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  • நான் ஒரு சிற்றிதழ் ஆரம்பித்தால் அதற்கு சோதனை என்று பெயர் வைப்பேன் … சோதனை என்றால் சோதித்துப் பார்த்தல் என்று பொருள், தொல்லை என்ற பொருளும் அதற்கு உண்டு. - புதுமைப்பித்தன்
  • சிறுபத்திரிகைக்காரங்க – இப்படி ஒண்ணு நடந்ததாவே அவங்களுக்குத் தெரியாது. அவங்களுக்குனு சொந்தமா ஒரு உலகம் இருக்கு. சின்ன குட்டி உலகம். ஒரு டாய்லெட் அளவு இருக்கும். அந்த உலகத்துக்குள்ளே அவன் சின்ன சின்ன சண்டைகள் போட்டுக் கொண்டிருப்பானே ஒழிய – இந்த டாய்லெட்டைவிட – ஒரு பெரிய உலகம் இருக்கு. அங்க பல காரியங்கள் நடக்குது. அந்தக் காரியங்கள் நம்ம வாழ்க்கையைப் பாதிக்குது – நீங்க டாய்லெட்ல போய் ஒளிஞ்சிண்டாலும் உங்க வாழ்க்கையை அது பாதிக்காம இருக்காது. So, அப்படிங்கற ஒரு consciousness நம்ம சிறுபத்திரிகைக்காரங்களுக்கு என்னிக்குமே இருந்ததில்லை. சுந்தர இராமசாமி
  • ஒரு பத்திரிகை தொடர்ந்து இயங்கினால், அது சிறு பத்திரிகையே இல்லை. -க. ந. சு.
  • கருத்துச் செறிவிற்காகவும், தொடர்பிற்காகவும், ஒரு குழுவினரிடமோ, அல்லது மக்களிடமோ, வணிக நோக்கமற்று, ஒன்றிரண்டு இதழ்களே வந்தாலும், தரமான, உண்மையான – மொழி, இனம், நாடு தொடர்பான வரலாற்றுக் கருத்துகளையும், நடப்பியல் நிகழ்வுகளையும் – நுட்பமாகப் பதிவு செய்கிற அச்சு வடிவங்களையே சிற்றிதழ்கள் என்ற வகைக்குள் அடக்கலாம். -பொள்ளாச்சி நசன் என்கிற நடேசன்
  • பூடக மொழியில் வெகுசில பிரதிகளே அச்சிட்டு நாலுபேர் கண்ணில் படாமலேயே வினியோகிக்கப்பட்டு வரும் இதழ்கள். சாதாரண’ மக்கள் அறியாமல், அறிந்தாலும் வாங்க முடியாமல், வாங்கினாலும் படிக்க முடியாமல் இவற்றை நடத்த ஆரம்பித்தார்கள். சாதாரண இதழ்களுக்கு நேர் மாறாக இவை இருக்கவேண்டுமென்பதே விதி. -ஜெயமோகன்
"https://ta.wikiquote.org/w/index.php?title=சிற்றிதழ்&oldid=36954" இலிருந்து மீள்விக்கப்பட்டது