சிறுகதை

இலக்கியத்தின் ஒருவகை

சிறுகதை என்பது சுருக்கமான, கதைகூறும் புனைவுவகை உரைநடை இலக்கியமாகும். பெரும்பாலும் ஒரு மையக் கருவினை அல்லது நிகழ்ச்சியின் அனுபவத்தை விவரிக்கும் இலக்கிய வகையாகும். சிறுகதை பொதுவாக குறும் புதினம் மற்றும் நாவலை விடச் சுருக்கமானதாகும்.

மேற்கோள்கள் தொகு

  • சிறுகதை என்றால் அளவில் சிறியதாக இருப்பது என்பதல்ல; எடுத்தாளப்படும் சம்பவம் தனி நிகழ்ச்சியாக இருக்க வேண்டும். -புதுமைப்பித்தன்[1]
  • சிறுகதை, வாழ்க்கையின் சாளரங்கள். வாழ்க்கையின் ஒரு பகுதியை அல்லது ஒருவரின் தனி உணர்ச்சியை அல்லது ஒரு குண சம்பவத்தை எடுத்துச் சித்திரிப்பது. -புதுமைப்பித்தன்[1]
  • ‘சிறு கதை வாழ்க்கையின் சிறிய சாளரம்’ -புதுமைப்பித்தன்[1]
  • வாழ்வுக்குப் பொருள் கொடுப்பதுதான் கலை சிறுகதை வாழ்வின் பல சூட்சுமங்களையும் எழுத்தில் நிர்மானித்துக் காண்பித்தது. சிறுகதைகள் வாழ்வை, உண்மையை நேர் நின்று நோக்க ஆரம்பித்தன.-புதுமைப்பித்தன்[1]

தமிழிற்கே விமோசனம் கிடையாது என்று தினைத்துக் கொண்டிருக்கும் சமயத்தில் வெள்ளி முளைத்தாற்போல் சிறுகதை எழுதுகிறவர்கள் தோன்றி இருக்கிறார்கள். அவர்களுடைய எழுத்துக்கள், கற்பனைகள் எல்லாம் தமிழுக்குப் புதியவை. -புதுமைப்பித்தன்[1]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 முல்லை பிஎல். முத்தையா (1998). புதுமைப்பித்தன் உதிர்த்த முத்துக்கள். நூல் 50. முல்லை பதிப்பகம். Retrieved on 22 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=சிறுகதை&oldid=19883" இலிருந்து மீள்விக்கப்பட்டது