வெற்றி குறித்து அறிஞர்கள் சொன்ன பொன்மொழிகள்

  • வெற்றியின் வாசல்படி உழைப்பு மட்டுமே. - கார்லைல்[1]
  • துணிச்சல் + உழைப்பு = வெற்றி -பெர்னாட்ஷா[1]
  • உள்ளத்தின் உறுதியே வெற்றியின் வித்தாகும். -நெப்போலியன்[1]
  • நல்ல தொடக்கம் பாதி வெற்றிக்கு சமம். -ஹில்[1]
  • வெற்றி உழைப்பவர்களின் பரிசாகும். -ஆர்தர்[1]
  • முயற்சிக்கேற்ப வெற்றி அமையும். -டிரைடன்[1]
  • எதையும் தாங்குபவனே வெற்றி அடைவான். -பெரிசியஸ்[1]
  • வெற்றியின் ரகசியம் நோக்கத்தைக் கைவிடாமல் இருப்பதுதான். -டிஸ்ரேலி[1]
  • ஒரு மதிப்பு வாய்ந்த இலக்கைப் படிப்படியாக அடைதலே வெற்றி. -நைட்டிங்கேல்[1]
  • வெற்றி பெற முடியுமென்று நம்புவோரே வெல்வார்கள். -வெர்ஜில்[1]
  • ஒவ்வொரு மனிதனும் தனக்குத் தானே தேர்ந்தேடுத்துகொள்ளும் ஒவ்வொரு செயலின் குணங்களைப் பொறுத்துதான் அவனுடைய எதிர்கால வெற்றி தோல்விகள் கணிக்கப்படும். - டார்வின் [2]
  • வெற்றி என்னைத் தேடிவரவில்லை; நான் என் இடையறா முயற்சியால் வெற்றியைத் தேடிப் பிடித்துக் கொண்டேன். முதலில் சிறு பாவங்களாகச் செய்யத் தொடங்குவோம் என்று தீர்மானித்துக் கொண்டு, நான் எனது நாடகங்களை எழுதத் தொடங்கினேன். ஜோர்ஜ் பெர்னாட் ஷா[3]
  • எதையும் சிர்தூக்கி ஆராய்ந்து அளவிட்டு, ஆற அமர ஆலோசித்து செய்வதால்தான் பலர் தங்கள் திட்டங்களில் வெற்றியடைகிறார்கள். -நிக்கோலோ மாக்கியவெல்லி[4]
  • எளிதாயுள்ள வெற்றிகள் மதிப்பற்றவை. கடுமையான போராட்டத்தினால் வருபவைகளே மதிப்புயர்ந்த வெற்றிகள். - பீச்செர்[5]
  • கடவுளின் புன்னகையே வெற்றி. - விட்டியர்[5]
  • வெற்றியை வெகுதூரம் தொடர்ந்து செல்ல வேண்டாம் எதிரியைப் புறமுதுகு காட்டி ஓடும்படி செய்ததே சிறந்த வெற்றிதான். ஓடுகிறவனை இறுதியான உறுதியுடன் திரும்பி நின்று எதிர்க்கும்படி விரட்ட வேண்டாம். அதனால் உனக்குத் தீங்கு நேரிடும். - ஹெர்பெர்ட்[5]

குறிப்புகள் தொகு

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 தினமனி 2016 சூலை 30
  2. http://www.ponmozhigal.com/2016/08/blog-post_87.html
  3. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 101-110. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  4. நாரா. நாச்சியப்பன் (1993). சிந்தனையாளன் மாக்கியவெல்லி. நூல் 149-162. பிரேமா பிரசுரம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  5. 5.0 5.1 5.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 317-318. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=வெற்றி&oldid=36254" இலிருந்து மீள்விக்கப்பட்டது