மசானபு புகோகா

மசானபு புகோகா ஜப்பான் நாட்டைச் சேர்ந்த இயற்கை விஞ்ஞானியும் சுற்றுச்சூழல் வாதியும் ஆவார். இயற்கை வேளாண்மை மற்றும் சுற்றுச்சூழல் தொடர்பான பல கட்டுரைகள், புத்தகங்கள் சொற்பொழிவுகளைப் படைத்திருக்கிறார். ஒற்றை வைக்கோல் புரட்சி (The One-Straw Revolution) என்ற புத்தகம் மிகப் பிரபலாமனது. பூவுலகின் நண்பர்கள், இந்தப் புத்தகத்தைத் தமிழில் மொழிபெயர்த்திருக்கிறார்கள்.

உணவு பற்றாக்குறை ஏற்பட்டால், அது இயற்கையின் உற்பத்தி சக்தி பற்றாக்குறையினால் ஏற்பட்டதாக இருக்காது. மனிதனின் அபரிமிதமான ஆசையின் விளைவாகவே அது ஏற்பட்டிருக்கும்.

மேற்கோள்கள் தொகு

  • மனித அறிவாற்றல் என்பது எவ்வளவு சிறியது என்பதைக் காட்டும் பணியைத்தான் அறிவியல் செய்துள்ளது.
  • அறிவியல் புரிந்து வைத்துள்ள இயற்கை என்பது முழுமையாக நாசம் செய்யப்பட்ட இயற்கை. அது எலும்புக்கூட்டுடன் உலாவும் பிசாசு. அதற்கு ஆத்மா கிடையாது. வேளாண்மையின் இறுதி லட்சியம் பயிர்களை வளர்த்து அதிக உற்பத்தி செய்வதல்ல. மனிதர்களை முழுமைப் பெறச் செய்வதே.
  • இயற்கை வேளாண்மை மென்மையானது; எளிமையானது; அது வேளாண்மையின் ஆதாரத்தை நோக்கி மீண்டும் செல்வதைக் குறிப்பது. ஆதாரத்தை விட்டு ஒரு அடி விலகி நடந்தாலும் அது மயானத்திற்கான நேர்வழிதான்!
  • இயற்கை ஒரு போதும் மாறுவதில்லை. அதை நோக்கும் நமது பார்வைதான் காலத்திற்குக் காலம் மாறுபடுகிறது. காலம் எவ்வளவுதான் மாறினாலும், வேளாண்மையின் பாதுகாவலனாக இயற்கை வேளாண்மை விளங்கும்.
  • ஒரு விஞ்ஞானி இரவு பகலாகக் கண்களைக் கெடுத்துக் கொண்டு புத்தகங்களில் மூழ்கியிருப்பான். கடைசியில் கிட்டப்பார்வையும் வந்துவிடும். இதுவரை அவன் என்ன ஆராய்ச்சி செய்து கொண்டிருந்தான் என்று உங்களுக்கு ஆச்சரியமாக இருக்கும். கடைசியில் பார்த்தால் கிட்டப்பார்வைக்கு மூக்குக் கண்ணாடி கண்டுபிடிக்கும் ஆராய்ச்சிதான்.
  • இயற்கை உணவை அதிக விலைக்கு ஒரு வியாபாரி விற்றால், அவன் கொள்ளை லாபம் அடிக்கிறான் என்று பொருள். மேலும் இயற்கை உணவு, அதிக விலையுடையதாக இருந்தால், அவை ஆடம்பர பொருட்களாகி, வசதி படைத்தவர்களால் மட்டுமே வாங்கக் கூடியதாக மாறிவிடும்.
  • உணவு பற்றாக்குறை ஏற்பட்டால், அது இயற்கையின் உற்பத்தி சக்தி பற்றாக்குறையினால் ஏற்பட்டதாக இருக்காது. மனிதனின் அபரிமிதமான ஆசையின் விளைவாகவே அது ஏற்பட்டிருக்கும்.
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=மசானபு_புகோகா&oldid=14823" இலிருந்து மீள்விக்கப்பட்டது