புகழ்

சமூகத்தில் நன்கு தெரிந்த நிலை

புகழ் (Fame) என்பது மற்றவர்களால் நன்கு அறியப்பட்ட பேசப்படும் நிலை ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  • உலகில் வேகமாக உயர்ந்து வருகிறவர்களை மனிதர்கள் மேலாக எண்ணுகிறார்கள். ஆனால், புழுதி வைக்கோல் கண்டு. இறகு முதலியவைகளைப் போல் எதுவும் அவ்வளவு வேகத்தில் மேலே எழுவதில்லை. - ஹேர்[1]
  • உலகத்தின் புகழ், காற்றைப் போன்றது. ஒரு சமயம் இந்தப் புறமாக வீசும், பிறகு, அந்தப் புறமாக வீகம், திசை மாறும் பொழுதெல்லாம் அதன் பெயரும் மாறிவிடும். - தாந்தே[1]
  • ஆசையுள்ளவர்களுக்குப் புகழ், தாகமுள்ளவர்களுக்கு உப்புநீர் போன்றது -குடிக்கக் குடிக்கத் தாகம் அதிகமாகும். - பெர்ஸ்[1]
  • புகழை வைத்துத் தகுதியை அளக்க முடியாது. தகுதியை ஓரளவு அறிய முயலலாம். அவ்வளவுதான். அது தற்செயலாக ஏற்படுவது. மனிதனின் குணத்தை வைத்தல்ல. - கார்லைல்[1]
  • புகழ் என்பது என்ன? ஜனங்கள் உன்னைத் தெரிந்துகொள்ளும் நன்மை; ஆனால், அவர்களைப்பற்றி உனக்கு ஒன்றும் தெரியாது. அவர்களைப்பற்றி உனக்குக் கவலையும் கிடையாது. - ஸ்டானிஸ்லாஸ்[1]
  • புகழைத் தேடி அலைவதைப் போன்ற சிரமமான வேலை உலகில் வேறில்லை. நீ திட்டம் தயாரிப்பதற்குள்ளேயே வாழ்க்கை முடிந்துவிடுகின்றது. - புரூயெர்[1]
  • நல்ல சீலமுள்ள பெரிய மனிதனுக்கு உலகில் புகழ் உரியது. அவன் நினைவைச் சரித்திரம் போற்றுகின்றது. அது மக்களின் ஒழுக்கத்தை நெறிப்படுத்துகின்றது. அவனுடைய சொற்களும் செயல்களும் மக்களின் வாழ்க்கையில் கலந்து விளங்குகின்றன. - இ. எவரெட்[1]
  • விரைவிலே புகழ் பெற்றுவிட்டவன் தன் பெயரைக் காப்பாற்றிக் கொள்வது பெரிய பாரந்தான். - வால்டேர்[1]
  • புகழின் கோயிலில் செல்வம் மிகுந்த மூடர்களுக்கும். கெஞ்சிக் கேட்கும் போக்கிரிகளுக்கும். மனித சமூகத்தை அரிந்து தள்ளும் கொலைகாரர்களுக்கும் இடம் கிடைத்துவிடுகின்றது. - ஸிம்மெர்மன்[1]
  • இறந்துபோன மனிதனின் இதயத்தின் மேல் வைக்கப்பெறும் மலர், புகழ். - மதர்வெல்[1]
  • செத்த பிறகுதான் புகழ் வருமென்றால், எனக்கு அதைப்பற்றிய அவசரம் எதுவுமில்லை. - மார்ஷியன்[1]
  • புகழ் நெருப்பைப் போன்றது. அதை மூட்டிவிட்டால் பிறகு காப்பது எளிது. ஆனால், அதை மூட்டுவது கடினம். - பேக்கன்[1]
  • இந்த வாழ்க்கையில் அடையும் பேறுகளுள் புகழே முதன்மையானது உடல் மண்ணுக்குள் போன பின்பு பெருமையுள்ள பெயர் மட்டும் உயிருடன் வாழ்ந்து வருகின்றது. - ஷில்லர்[1]
  • மனித சமூகத்தின் நன்மையை நாடி உழைப்பதன் மூலமே உண்மையான, நிலையான புகழை நிறுவ முடியும். - சார்லஸ் ஸம்மர்[1]
  • புகழுக்குச் சுருக்குவழி மனச்சான்றின்படி நடத்தல்.[1]
  • ஒரு சமூகத்தின் புகழும், ஒரு சகாப்தத்தின் புகழும் ஒருசில பெரிய மனிதர்களின் வேலையைப் பொறுத்தவை.அவர்களோடு அவைகளும் மறைந்துவிடுகின்றன. - கிரிம்[1]
  • நமது புகழ் என்பது. ஆண்களும் பெண்களும் நம்மைப்பற்றி என்ன நினைக்கின்றனர் என்பது நம் பண்பு, இறைவனும் தேவர்களும் நம்மைப்பற்றி என்ன நினைக்கின்றனர் என்பது. - பெயின்[1]
  • உனது குணம் சரியாயிருந்தால், உன் புகழும் சரியாயிருக்கும்.[1]
  • நல்லெண்ணமும் பெயரும் பற்பல செயல்களை வைத்து உண்டாவது. ஆனால், இரண்டும் ஒரே செயலில் போய்விடவும் கூடும். - ஜெய்ப்ரே[1]

குறிப்புகள் தொகு

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 1.11 1.12 1.13 1.14 1.15 1.16 1.17 1.18 1.19 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 271-273. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=புகழ்&oldid=34689" இலிருந்து மீள்விக்கப்பட்டது