டேல் கார்னெகி

டேல் ஆர்பைசான் கார்னெகி (Dale Harbison Carnegie)[1] என்பவர் (நவம்பர் 24, 1888 - நவம்பர் 1, 1955) ஒரு அமெரிக்க எழுத்தாளர் ஆவார். மிசௌரியில் ஒரு ஏழ்மையான விவசாயக் குடும்பத்தில் பிறந்த இவர், நண்பர்களை வெல்வது எப்படி?(How to Win Friends and Influence People 1936), லிங்கன் - அறியப்படாதவை (Lincoln the Unknown 1932) போன்ற பல புகழ்பெற்ற நூல்களை எழுதியுள்ளார்.

இவரது பொன்மொழிகள்[2] தொகு

  • வெற்றிகரமான மனிதன் தனது தவறுகளிலிருந்து பலன்பெறுகிறான் மற்றும் மாறுபட்ட வழியில் மீண்டும் முயற்சி செய்கிறான்.
  • பயத்தை வெல்ல வேண்டுமென்றால், வீட்டில் உட்கார்ந்து கொண்டு அதைப்பற்றி நினைத்துக் கொண்டிருக்காமல், வெளியில் சென்று செயல்படுங்கள்.
  • தோல்விகளிலிருந்து வெற்றியை உருவாக்குங்கள். ஊக்கமின்மை மற்றும் தோல்வி ஆகியன வெற்றிக்கான இரண்டு உறுதியான படிக்கற்கள்.
  • செய்ய அஞ்சுகிற செயலை தொடர்ந்து செய்யுங்கள். அதுவே எப்போதும் பயத்தை கைப்பற்றுவதற்கான வேகமான மற்றும் எளிய வழி.
  • என்ன மோசமான விளைவுகள் ஏற்படும் என்பதை உங்களிடம் முதலில் கேட்டுக்கொள்ளுங்கள். பிறகு அதை ஏற்றுக்கொள்ள தயாராகுங்கள். பின்னர் அதை மேம்படுத்த செயல்படுங்கள்.
  • சிறிய பணிகளை நன்றாக செய்தால், பெரிய பணிகள் தங்களை தாங்களே கவனித்துக்கொள்ள முனையும்.
  • பெரும்பாலும் உலகின் சிறந்த பணிகள் இயலாமைகளுக்கு எதிராகவே செய்து முடிக்கப் பட்டுள்ளன.
  • மகிழ்ச்சி என்பது எந்த வெளிப்புற நிலைமைகளையும் சார்ந்ததல்ல. அது நமது மனதின் அணுகுமுறையால் ஆளப்படுகிறது.
  • செயலின்மை, சந்தேகம் மற்றும் அச்சத்தை தரும்; செயல்பாடு, நம்பிக்கை மற்றும் தைரியத்தை தரும்.
  • நீங்கள் என்ன செய்கிறீர்களோ அதை விரும்பாதவரை உங்களால் ஒருபோதும் வெற்றியடைய முடியாது.
  • வாக்குவாதத்தில் சிறந்ததைப் பெறுவதற்கான ஒரே வழி, அதைத் தவிர்ப்பதே.
  • மனதை தவிர பயம் வேறு எங்கும் இல்லை.

வெளி இணைப்புக்கள் தொகு

 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


குறிப்புகள் தொகு

"https://ta.wikiquote.org/w/index.php?title=டேல்_கார்னெகி&oldid=14449" இலிருந்து மீள்விக்கப்பட்டது