ஜான் ஸ்டூவர்ட் மில்

பிரித்தானிய மெய்யியலாளர், அரசியல் பொருளாதவியலாளர்

ஜான் ஸ்டூவர்ட் மில் (20, மே 1806 – 8 மே 1873) ஜே.எஸ். மில் என்றும் அறியப்பட்ட இவர், ஒரு ஆங்கில அரசியல் தத்துவஞானி மற்றும் பொருளாதார நிபுணர் ஆவார்.

மேற்கோள்கள் தொகு

அடக்கம் தொகு

  • மனித ஜாதியின் திறமைக்குள் அடங்கும் நன்மைகள் எல்லாம், 'கீழ்ப்படிதல்' என்பதில் அடங்கும்.[1]

அதிர்ஷ்டம் தொகு

  • 'வினைப்பயன்' என்பதை நாம் பிறர் விஷயத்தில் நம்பியும், நம் விஷயத்தில் நம்பாமலும் இருக்கக் கூடுமானால் அது ஒரு பெரும் பாக்கியமாகும்.[2]

இராஜதந்திரி தொகு

  • அரசாங்கத்தின் மதிப்பு நாளடைவில், அதில் அங்கம் வகிக்கும் தனி நபர்களின் தகுதியேயாகும். -ஜான் ஸ்டுவர்ட் மில்[3]

கல்வி தொகு

  • மாணவனிடம் செய்ய முடியாததைச் செய்யச் சொல்லாதவரை, அவன் செய்ய முடிந்ததையெல்லாம் ஒரு பொழுதும் செய்யப் போவதில்லை.[4]

மன நிறைவு தொகு

  • திருப்தியுள்ள பன்றியாயிருப்பதினும் திருப்தியில்லா மனிதனாயிருப்பதே நலம். திருப்தியுள்ள மூடனாயிருப்பதினும் திருப்தியில்லா ஞானியாயிருப்பதே நலம். பன்றியும் மூடனும் வேறாக நினைத்தால் அதற்குக் காரணம் அவர்களுக்குத் தங்கள் கட்சி மட்டுமே தெரியும்; இரண்டு கட்சியையும் பிறரே அறிவர்.[5]

குறிப்புகள் தொகு

  1. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அடக்கம். நூல் 111- 112. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. என். வி. கலைமணி (திசம்பர் 2000). உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/அதிர்ஷ்டம். நூல் 109- 110. மெய்யம்மை நிலையம். Retrieved on 13 மே 2019.
  3. ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 48-49. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  4. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கல்வி. நூல் 150-157. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  5. பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/திருப்தி. நூல் 143-146. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=ஜான்_ஸ்டூவர்ட்_மில்&oldid=19400" இலிருந்து மீள்விக்கப்பட்டது