கேட்டல் அல்லது செவிமடுத்தல் என்பது ஒருவர் கூறுவதை கவனித்து உள்வாங்குதல் ஆகும்.

மேற்கோள்கள் தொகு

  • பிறர் கூறுவதற்குச் செவி சாய்க்கக் கற்றுக் கொள். தவறாய்ப் பேசுவோரிடமிருந்து கூட அறிவு பெறுவாய். -ப்ளூட்டார்க்[1]
  • பிறர் மூளையோடு நம் மூளையைத் தேய்த்து ஒளி பெறச் செய்தல் நலம். -மாண்டேய்ன்[1]
  • காது நல்லதைத் தவிர வேறெதையும் அறிவிற் சேர்க்கா வண்ணம் எல்லாவித விஷயங்களையும் கேட்கப் பழகிக் கொள்ளல் நலம். -ஏராஸ்மஸ்[1]
  • நமக்கு இரண்டு காதுகளும் ஒரே ஒரு நாவும் இருப்பதற்குக் காரணம், கேள்வி அதிகமாகவும், பேச்சு குறைவாகவும் இருக்க வேண்டும் என்பதற்காகத்தான். —டயோஜனீஸ்[2]

பழமொழிகள் தொகு

  • ஒருமுறை அறிவாளியுடன் சம்பாஷிப்பது ஒரு மாதம் நூல்களைப் படிப்பதைவிட அதிக நன்மை தருவதாகும். -சீனப் பழமொழி[1]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 பொ. திருகூடசுந்தரம் (1959). அறிவுக் கனிகள்/கேட்டல். நூல் 157-157. காந்தி நிலையம். Retrieved on 13 மே 2019.
  2. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 51-60. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
"https://ta.wikiquote.org/w/index.php?title=கேட்டல்&oldid=19652" இலிருந்து மீள்விக்கப்பட்டது