குற்றம்

சட்டபூர்வ நடவடிக்குத் தகுந்த சட்டத்திற்குப் புறம்பான செய்கை.

குற்றம் என்பது விதிகளையோ அல்லது சட்டத்தையோ மீறி செய்யப்படும் செயலாகும். இத்தகைய செயல் அதிகாரத்தில் உள்ளவர்களால் தண்டனைக்கு (சட்ட மன்றம் போன்ற அமைப்புகளால்) உட்படுத்தப்படலாம். அல்லது எச்சரிக்கை விடுக்கப்படலாம்.

மேற்கோள்கள் தொகு

  • குற்றம் செய்தவன், அதற்குள்ள தண்டனையடைதல் வேண்டும், கருணை காட்டுவது எளியோரிடமன்றிக் குற்றவாளியிடமன்று. குற்றஞ் செய்தவர்களை மன்னித்துக் கொண்டேயிருந்தால் உலகம் ஒழுங்காக நடைபெறாது. எமன் எப்போதும் தண்டித்துக் கொண்டேயிருப்பினும் தருமன் என்று அழைக்கப்படுகிறான். காரணமென்னை? நடு நிலைமையோடு சிக்‌ஷித்தலால் அன்றோ ஆகவே, இறந்தவர்கள் பெயரால், மூட நம்பிக்கையால் பார்ப்பனருக்கோ, சைவருக்கோ பணங்களைக் கொடுக்க வேண்டாம். இவ்வாறு கூறுவதால் என்னை நாத்திகன் என்று சிலர் கூறலாம். பிறரால் ஏமாற்றப் படுவதைத் தடுக்கும் பொருட்டே நான் சொல்லுகிறேன்.—வ. உ. சிதம்பரம்பிள்ளை (3-3-1928)[1]
  • கருணையற்ற அதிகாரமும், பக்தியற்ற ஆசாரமும், துன்ப உணர்வற்ற வருத்தமும் எனக்கு அறவே பிடிக்காத விஷயமாகும். மனிதன் ஒவ்வொருவனும் அவரவர் குற்றங்களை முதலில் திருத்திக் கொள்ள வேண்டும். அதைவிட்டு விட்டு பிறருடைய குற்றங்களைத் திருத்தும் முயற்சியில் ஈடுபடக்கூடாது. —கான்பூசியசு[2]
  • சமூகம் குற்றத்தைத் தயாரிக்கின்றது. குற்றம் புரிபவன் அதைச் செய்துவிடுகிறான்.[3]
  • சிறு குற்றங்கள் எப்பொழுதும் பெரிடி குற்றங்களுக்கு முன்னால் வரும் கூச்சமுள்ள கபடமற்ற தன்மை திடீரென்று. எதையும் செய்யத் துணிந்துவிடுவதை நாம் ஒரு போதும் கண்டதில்லை. - ராஹீன்[3]
  • குற்றத்தைத் தொடர்ந்து அச்சம் வரும். அதுவே தண்டனையாகும். - வால்டேர்[3]

மேற்கோள்கள் தொகு

  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 71-80. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  2. என். வி. கலைமணி (2000). கன்பூசியஸின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள். நூல் 7-25. சாந்தி நிலையம். Retrieved on 7 ஏப்ரல் 2020.
  3. 3.0 3.1 3.2 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 164. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=குற்றம்&oldid=21029" இலிருந்து மீள்விக்கப்பட்டது