எஸ்தோனிய பழமொழிகள்

இப்பக்கத்தில் எஸ்தோனிய மொழி பழமொழிகள் தொகுக்கபட்டுள்ளன.

  • அதிகாலையில் எழுந்தவனும், இளமையில் மணந்தவனும் வருந்தியதில்லை.
  • அருமையான குழந்தைக்குப் பிரம்பு தேவை.
  • அழகான பெண் கண்ணுக்குத்தான் சுவர்க்கம், ஆனால் பணப்பைக்குச் சனியன், ஆன்மாவுக்கு நரகம்.
  • எல்லாப் பெண்களும் நல்லவர்களா யிருக்கும் பொழுது, கெட்ட மனைவியர் எங்கிருந்து வருகின்றனர்?
  • ஒரு பெண் மற்றொருத்தியைப் புகழ்ந்து ஒரு போதும் பேசமாட்டாள்.
  • ஒரு பெண்ணின் பாவு ஒன்பது பெண்களின் ஊடு.
  • உதிரம் நீரைவிடச் சூடுள்ளது.
  • உலகத்திற்கெல்லாம் தெரிய வேண்டிய விஷயத்தை உன் மனைவியிடம் சொன்னால் போதும்.
  • ஊசியில்லாத பெண் நகமில்லாத பூனை. (தையல் வேலை பெண்ணுக்கு அவசியம்.)
  • கணவன் தலை, மனைவி இதயம்- இப்படியுள்ள திருமணம். இன்பமானது.
  • கப்பல், குதிரை, அல்லது மனைவியை மற்றவரை நம்பி ஒப்படைக்காதே.
  • கன்னியா யிருக்கும் பொழுது மாடப்புறாவா யிருந்தவள் மனைவியான பின் தண்டாயுதமாகி விட்டாள்.
  • காதலில் துரு ஏறாது.
  • கிழட்டுப் பசுவுக்குத் தான் கன்றாயிருந்தது நினை விராது.
  • கிழவருக்கு மரணம் கண் முன்னால் நிற்கும், இளைஞருக்குப் பின்புறம் நிற்கும்.
  • கிழவிகளையும், ஓநாய்களையும் படைத்து, இறைவன். உலகைப் பாழாக்கி விட்டான்.
  • குதிரையையும் மனைவியையும் இலகானில்லாமல் உபயோகிக்க வேண்டாம்.
  • குருட்டுக் கோழிக்கும் ஒரு தானியம் கிடைக்கின்றது, குடிகாரனுக்கும் ஒரு மனைவி கிடைக்கிறாள்.
  • குழந்தையின் அருமை அடுத்த குழந்தை வரும்வரை.
  • குழந்தையின் ரொட்டியில் மணல் கலந்திருக்கும்.
  • கைம்பெண் கூரையில்லாத கட்டடம்.
    (மனைவியில்லாதவனுக்கும் இது பொருந்தும்.)
  • சட்டை உடம்போடு ஒட்டியிருக்கும், அதைவிட ஒட்டியுள்ளது மரணம்.
  • சமையல் மோசமானால், ஒரு நாள் நஷ்டம்; அறுவடை. மோசமானால், ஒரு வருட நஷ்டம்; விவாகம் மோசமானால் ஆயுள் முழுவதும் நஷ்டம்.
  • செழிப்பான பண்ணையிலிருந்து குதிரையை வாங்கு; ஏழைப் பண்ணையிலிருந்து பெண்ணை வாங்கு.
  • தந்தையின் அன்பு கல்லறை வரை; தாயின் அன்பு உலகுள்ள வரை.
  • தாடி ஒரு மனிதனுக்குக் கௌரவம்; மனைவி அவன் கருவி.
  • தாயில்லாத மறியை எல்லாக் குட்டிகளும் முட்டும்.
  • திருமணப் பெண்ணுக்கு இசையும் அழகும்; விவாகமான பின் பசியும் தாகமும்.
  • தொட்டிலைத் தாங்குபவள் கிழவி, அவளே குழந்தையின் கைதி.
  • தொடக்கத்தில் இருவரும் ஒரே சட்டைக்குள் ஒண்டியிருக்க முடிந்தது; பின்னால் அவர்கள் ஒரே குடிசையில் சேர்ந்திருக்க முடியவில்லை.
  • நாலு மரக்கால் நிலக்கரி கொடுத்தால், ஒரு நாயகன் கிடைப்பான்; ஆனால் ஒரு 'டன்' கோதுமை கொடுத்தால் தான் ஒரு பெண் கிடைப்பாள்.
  • பயமில்லாமல் வளரும் குழந்தை பெருமையில்லாமல் மரிக்கும்.
  • பழைய துணி-புதிய கிழிசல்.
  • பிறக்கும் பொழுது அழுதுகொண்டு வந்தோம், போகும் பொழுதாவது சிரித்துக்கொண்டு செல்லும்படி வாழ வேண்டும்.
  • பிறர் புகழும் குதிரையை வாங்கு, பிறர் குறை பேசும் பெண்ணை மணந்துகொள்.
  • புதர்களெல்லாம் பெண் இனம். [பெருகக் கூடியவை.]
  • பெண் குழந்தை வீட்டிலிருப்பதைக் கொண்டு செல்லும், ஆண் குழந்தை (வெளியிலிருந்து) கொண்டுவரும்.
  • பெண் குழந்தைகள் வீட்டுக்கு அலங்காரம், அவர்கள் விற்பனைக்குரிய பொருள்கள்.
  • மகள் உன் முட்டளவு வளர்ந்து விட்டால், அவளுடைய சீதனப்பெட்டி அவள் மார்பளவு உயரம் இருக்க வேண்டும்.
  • மனிதன் மரணத்தின் குழந்தை.
  • மனிதன் இருமுறை குழந்தை.
  • மனிதனுக்கு மனைவி வாய்த்தே தீருவாள்.
  • மனிதனின் பூட்டு மனைவி.
  • மனிதன் முதுமையடைகிறான், ஆனால் பிணி இளமையடைகின்றது.
  • மனைவி ஒருமுழம் தள்ளி யிருந்தாலும், அந்த அளவுக்கு மனிதன் சுதந்திரமுள்ளவன்.
  • மனிதன் வாழ்க்கையை மனைவியே பாழாக்குகிறாள்.
  • மாதாகோயிலுக்குச் செல்லும் பாதையிலிருந்து கொண்டு உனக்கு மனைவியைத் தேர்ந்தெடுக்காதே.
  • வசந்த காலம் வந்து குழந்தையை முத்தமிடுகிறது, மாரிக் காலம் வந்து அதை வதைக்கிறது.
  • வயது முதிர்ந்தவன் நெடு நாளைக்குக் குழந்தையாயிருப்பான்.
  • வாழ்க்கை ஒரு போராட்டம்.
  • வானத்தில் பறவையின் பாதையைக் காணமுடியாது, கன்னியை நாடும் காதலன் பாதையையும் காண முடியாது.
  • வீட்டைக் கட்டிப் பாராதவன் மண்ணிலிருந்து சுவர்கள் முளைத்திருப்பதாக எண்ணுவான்.
  • வீடு இல்லாளின் உலகம், உலகம் மனிதனின் வீடு.
"https://ta.wikiquote.org/w/index.php?title=எஸ்தோனிய_பழமொழிகள்&oldid=38029" இலிருந்து மீள்விக்கப்பட்டது