உயிர்த் தியாகம்

உயிர்த் தியாகம் (Martyrdom) என்பது ஒரு உயர்ந்த இலட்சியத்துக்காக, கொண்ட கொள்கைக்காக/பிறர் நலத்துக்காக செய்யும் உயிர்த் தியாகம்; உயிர்த்துறவு

மேற்கோள்கள் தொகு

  • உண்மைக்காக உயிரைத் தியாகம் செய்தல் ஒருவர் தம் சமயத்திற்காகவோ, நாட்டிற்காகவோ மரிப்பதன்று உலகத் திற்காக மரிப்பதாகும்.[1]
  • உயிரை விடும் தியாகியைவிட உயிர்த் தியாகியாக வாழ்வது அதிகக் கஷ்டம், அதற்கு அதிக வல்லமை தேவை. - ஹொரேஸ்மான்[1]
  • உலகின் இயல்பு. இறந்துபோன திருத்தொண்டர்களைப் புகழ்தலும், உயிரோடிருப்பவர்களைத் துன்புறுத்தலும். - என். ஹேர்[1]
  • உயிர்த் தியாகிகளைப்பற்றிப் படிக்கும் பொழுது. நாமும் தியாகிகளாகிவிடலாம் என்று தோன்றுகிறது. ஆனால், செயலில் இறங்கும்பொழுது, ஒரு கடுஞ்சொல்லைக்கூட நம்மால் தாங்க முடிவதில்லை. - ஹன்னா மூர்[1]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 124-125. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=உயிர்த்_தியாகம்&oldid=20416" இலிருந்து மீள்விக்கப்பட்டது