உணவை உண்ணுதல் அன்றாடம் மனிதர்களும், விலங்குகளும் செய்யும் ஒரு செயல் ஆகும். இதை சாப்பிடுதல், தின்றல் என்றும் குறிக்கலாம்.

  • நான் உயிர் வாழ்வதற்காகச் சாப்பிடுகிறேன். மற்றவர்கள் சாப்பிடுவதற்காக உயிர் வாழ்கிறார்கள். சாக்கிரட்டீசு[1]
இங்கலாந்தில் உண்ணும் பெண்கள்
  • உண்பதன் இன்பம் மதிப்புயர்ந்த பொருள்களைத் தாளிப்பதிலோ நறுமணத்திலோ இல்லை. அது உன்னிடமேயுள்ளது. உன் உழைப்பே உருசியளிக்கின்றது. - ஹொரேஸ்[2]
  • விருந்துக்குச் செல்லலாம்; ஆனால், கொஞ்சம் பசியிருக்கும் போதே எழுந்துவிட வேண்டும். - ஹெர்ரிக்[2]
  • ஆரோக்கியத்திற்காக மருந்துகளை நிறுத்தோ அளந்தோ உட்கொள்கிறோம்; அதே போல, உணவையும் அளவோடு புசிக்க வேண்டும். - ஸ்கெல்டன்[2]
  • பணக்காரனுக்கும் ஏழைக்கும் இதுதான் வேற்றுமை, முன்னவன் தான் விரும்பிய பொழுது உண்பான். பின்னவன் உணவு கிடைத்த பொழுதுதான் உண்பான். -ஸர் வால்டர் ராலே[2]
  • ஒருவன் வாழ்வதற்காக உண்ண வேண்டும்; உண்பதற்காக வாழக்கூடாது. - ஃபிராங்க்லிகள்[2]

குறிப்புகள் தொகு

  1. சுரதா (பிப்ரவரி, 1977). சொன்னார்கள். நூல் 121-128. சுரதா பதிப்பகம். Retrieved on 17 ஆகத்து 2019.
  2. 2.0 2.1 2.2 2.3 2.4 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 122. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
 
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:
"https://ta.wikiquote.org/w/index.php?title=உண்ணுதல்&oldid=20391" இலிருந்து மீள்விக்கப்பட்டது