இரக்கம் (pity) என்பது வேறொருவர் சோகத்தில் ஆழ்ந்திருக்கும் போது அவர்பால் காட்டும் உணர்வாகும். இரக்க உணர்வு இல்லாத வேளைகளிலும் தன் ஆளுமையினை காட்ட இவ்வுணர்வினை உபயோகப்படுத்துவர்.

மேற்கோள்கள் தொகு

  • இரக்கத்தின் பனித்துளி கண்ணீர். - பைரன்[1]
  • மனிதன் கருணையைக் கைவிட்டாலும், கடவுள் ஒருகாலும் கைவிடுவதில்லை. - கௌப்பர்[1]
  • இரக்கம் கொள்வது நம்மைத் தேவர்களுக்கு நிகராகச் செய்யும்.
  • நற்பண்புகள் என்ற நட்சத்திரங்களிடையே இரக்கம் சந்திரனைப் போன்றது. -சேப்பின்[1]
  • கடவுளுடைய சக்திகள் யாவும் ஒன்றுபோல் சமமாக இருந்த போதிலும், அவருடைய நீதியைப் பார்க்கினும் இரக்கம் அதிகப் பிரகாசமாக விளங்குகின்றது. -செர்வான்டிஸ்[1]
  • மக்கள் இறைவனிடம் இரக்கம் பெற நாம் அனுப்பிவிடுகிறோமே அன்றி. நாமாக இரக்கம் காட்டுவதில்லை. - ஜியார்ஜ் எலியட்[1]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 105. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=இரக்கம்&oldid=35312" இலிருந்து மீள்விக்கப்பட்டது