அரங்கு என்பது ஒரு குறிப்பிட்ட இடத்தில், நேரடியாக பார்வையாளர்கள் காணும் வகையில் மேடையில் கலைஞர்கள், பொதுவாக நடிகர்களால் கலை நிகழ்ச்சிகள் நடத்தும் இடம்மாகும்.

மேற்கோள்கள் தொகு

  • நாடகங்கள் ஒழுக்கத்தைப் போதிக்கின்றன என்றும். நாடக அரங்கு வாழ்க்கையைப் பிரதிபலித்துக் காட்டும் கண்ணாடி என்றும் கூறப்பட்ட போதிலும், இந்தக் கூற்றுகளுக்கு உண்மையிலும் அனுபவத்திலும் ஆதாரம் இல்லை. -ஸர் ஜான் ஹாகின்ஸ்[1]
  • நாடகத்தில் ஒவ்வொருவரும் எவ்வளவு நேர்மையாகவும் தாராளமாகவும் நடந்துகொள்கின்றனர் என்பது ஆச்சரியமாயிருக்கிறது. நியாயமான கட்டத்தில் நாம் அனைவரும் ஏகோபித்துக் கைகளைத் தட்டுகிறோம். தீயதை அனைவரும் கண்டிக்கிறோம். இவற்றில் நமக்கு மன உணர்ச்சியைத் தவிர வேறு எதுவும் செலவில்லை. -ஹாஸ்லிட்[1]
  • நாடக அரங்கில் வாழ்க்கையின் இன்ப ஒளியும், துக்கமும் காணப்பெறும் பொழுது என்னுள் ஆழ்ந்த தீவிரமான சிந்தனைகள் நிறைந்துவிடுகின்றன. - ஹென்றி சைல்ஸ்[1]
  • இயற்கை, பரம்பொருளின் செயல்களை நடித்துக் காட்டும். கலை கண்யமான உள்ளங்களுக்கு மட்டுமே ஒப்படைக்கப்பெற்றிருக்க வேண்டும் என்பது விரும்பத்தக்கது. -கதே[1]

குறிப்புகள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 234-135. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
"https://ta.wikiquote.org/w/index.php?title=அரங்கு&oldid=21840" இலிருந்து மீள்விக்கப்பட்டது