அன்னை

பெற்றவள்; ஈன்றவள்;அம்மா, அன்னை

அன்னை அல்லது தாய் அல்லது அம்மா (Mother).

மேற்கோள்கள் தொகு

  • ஈன்ற தாயிற்கு ஒப்பாக இவ்வுலகில் எதுவுமே இல்லை. - நான்மணிக்கடிகை
  • உயர்ந்த பதவிகளையும் மேலான அந்தஸ்தினையும் ஒருவன் வகிக்க முடியும் ஆனால் தாயின் இடத்தை மட்டும் யாராலும் வகிக்க முடியாது. - மெர்சாப்
  • தாயார் எவ்வளவு உற்சாகமாக அறிவு புகட்ட விரும்புகிறாளோ அவ்வளவு உற்சாகமாக குழந்தையும் அதை ஏற்கவிருக்கும். - எமெர்சன்
  • தாயின் அன்பை வெளியிட உலகத்தில் எந்த மொழியிலும் போதிய வார்த்தைகள் இல்லை. - கோபீன்
  • நீ எப்படி இருக்கவேண்டும் என்று தான் உன் அப்பா சொல்வார்; நீ எப்படி இருக்கிறாய் என்று சொல்வது உன் அம்மாதான். - பீட்டர் டேவிசன்
  • மிகவும் மரியாதைக்குரியவர் அன்னையே; மிகவும் கசப்பானது தனிமையே; மிகவும் துயரமானது மரணமே. - வில்ப்ரெட் பங்க்
  • நீ மேன்மையடைய விரும்பினால் உன் தாய் தந்தையர்கள் சொல்கேட்டு நடப்பதுடன் அவர்களையும் காப்பாற்றவேண்டும். -திருவள்ளுவர்
  • உலகம் அனைத்தையும் ஒரு தட்டிலும், என் தாயை மறு தட்டிலும் வைத்து நிறுததால், உலகின் தட்டுத்தான் மேலேயிருக்கும். - லாங்டேல் பிரபு[1]
  • அன்னையின் இதயமே குழந்தையின் பள்ளிக்கூடம். -பீச்சர்[1]
  • அன்னையின் மடியிலிருந்துகொண்டு முதல் முறையாகக் கேட்ட கதைகள் முழுதும் மறக்கப்பெறுவதில்லை. வாழ்க்கைப் பாதையில் கொடுமையான வெப்பத்தால் வெந்து தவிக்கும் நமக்கு இது ஒன்றே வற்றாத நீரூற்று. - ரஃபீனி[1]
  • தாயின் நற்குணங்களும். தந்தையின் பாவங்களும் குழந்தைக்கு வந்து சேரும் என்று எங்காவது எழுதி வைத்தல் நலம். - டிக்கன்ஸ்[1]
  • குழந்தையின் எதிர்காலக் கதி எப்பொழுதும் தாயில் வேலையால் அமைகின்றது. - நெப்போலியன்[1]
  • ஃபிரான்ஸ் நல்ல தாய்மார்களைப் பெற்றிருந்தால் அவள் நல்ல பிள்ளைாளையும் அடைவாள். -நெப்போலியன்[1]
  • நான் இப்பொழுதுள்ள நிலைமைக்கும். இனி அடைய நம்பிக் கொண்டிருப்பதற்கும், நான் என் தெய்விகத் தாய்க்கே கடமைப்பட்டிருக்கிறேன். - லிங்கன் [1]
  • சமூகத்தின் எதிர்காலம் தாய்மார்களின் கைகளில் இருக்கின்றது. -டிபூஃபோர்ட்[1]
  • "ஃபிரான்ஸ் தேசத்து இளைஞர்கள் நல்ல முறையில் கல்விப் பயிற்சி பெறுவதற்கு என்ன தேவை? என்று நெப்போலியன் ஒரு சமயம் வினவினார். "நல்ல தாய்மார்கள் என்று பதில் வந்தது. சக்கரவர்த்தி அதை ஆர்வத்துடன் மனத்தில் வாங்கிக் கொண்டு ஒரே வார்த்தையில் இதோ ஒரு கல்வித் திட்டமே அமைந்திருக்கின்றது' என்று கூறினார். - ஆபட்[1]
  • தாய்மார்கள் உருவாக்கிய முறையிலேதான் மனிதர்கள் இருப்பார்கள். முரட்டுத் துணிகளை நெய்யும் தறியில் காஷ்மீரப் பட்டை எதிர்பார்ப்பதும், பொறியியல் நிபுணரிடம் கவிதையை எதிர்பார்ப்பதும், தரகுக்காரனிடம் புதிய விஞ்ஞானக் கண்டுபிடிப்பை எதிர்பார்ப்பதும் வீணாகும். - எமர்ஸன்[1]
  • மாதாவை ஒரு நாளும் மறக்க வேண்டாம். - உலக நீதி[1]

பழமொழிகள் தொகு

  • அன்னையும் பிதாவும் முன்னறி தெய்வம். - தமிழ் பழமொழி
  • தாயிற் சிறந்த கோயிலுமில்லை, தந்தை சொல் மிக்க மந்திரமில்லை. - தமிழ் பழமொழி
  • உங்களது அன்பை மனைவியிடம் காட்டுங்கள்; உங்களது ரகசியங்களை தாயிடம் கூறுங்கள். - அயர்லாந்து பழமொழி

குறிப்புகள் தொகு

  1. 1.00 1.01 1.02 1.03 1.04 1.05 1.06 1.07 1.08 1.09 1.10 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் 81-82. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.

வெளியிணைப்புக்கள் தொகு

http://www.ponmozhigal.com/search/label/அம்மா%20amma

 
Wiktionary
விக்சனரியில் இருக்கும் அன்னை என்ற சொல்லையும் பார்க்க.
"https://ta.wikiquote.org/w/index.php?title=அன்னை&oldid=19750" இலிருந்து மீள்விக்கப்பட்டது