அதிருப்தி

திருபதியற்ற மனநிலை

அதிருப்தி என்பது மன நிறைவு இல்லாத மன நிலையைக் குறிக்கிறது.

மேற்கோள்கள் தொகு

  • தன்னம்பிக்கையின் குறைவே அதிருப்தி, அது நெஞ்சுறுதியின் குறைபாடு - எமர்ஸன்[1]
  • நம் நிலை நமக்கு ஒருபோதும் திருப்தியளிப்பதில்லை. நிகழ்காலம் எப்பொழுதும் ஆகக் கழிவானதாகத் தோன்றும் - ஃபோன்டெயின்[1]
  • இறைவன் ஒவ்வொருவருக்கும் தேவையானதை அளித்த போதிலும், நாம் பின்னும் குறையிரந்து நின்றுகொண்டிருப் போம். - ஃபான்டெயின்[1]
  • அதிருப்திகளுக்கெல்லாம் வேர், சுயநலமே. - கிளார்க்[1]
  • நம்முடைய அதிருப்திக்குச் சிறந்த மருந்து நமக்குக் கிடைத்துள்ள பேறுகளை எண்ணிப்பார்த்தல், - குவிவர்[1]
  • நம்மிடம் இல்லாதவை மற்றவர்களிடம் இருந்தால், அவைகளுக்காக அவர்களை நாம் நேசிக்கிறோம். நாம் நாமாக இருக்க மட்டும் விரும்புவதில்லை. - ஸ்டாடர்டு[1]
  • மற்றவர்களுடைய மகிழ்ச்சியைப்பற்றி மக்கள் கற்பனையாக எண்ணமிடுவதே அவர்களுடைய நிலைமையில் அதிருப்தி உண்டாகக் காரணம். - தாம்ஸன்[1]
  • நல்ல மனிதனும் அறிவாளியும் சில சமயங்களில் உலகத்தின் மேல் கோபம் கொள்ளக்கூடும்; உலகத்திற்காக இரங்கவும் கூடும். ஆனால், தன் கடமையை நிறைவேற்றும், எந்த மனிதனும் உலகத்தின்மீது அதிருப்தி கொள்ள மாட்டான். - ஸதே[1]
  • அதிருப்தி உள்ளவர்கள், நாட்டில் நிலவுகின்ற தீமைகளையும் அநீதிகளையும் சகித்துக்கொள்ள மறுப்பவர்கள்தான் உலகத்தை மாற்றுகிறார்கள், முன்னேற்றுகிறார்கள். -ஜவகர்லால் நேரு
    • (1928 திசம்பர் 12ஆம் நாள் பூனாவில் நடைபெற்ற பம்பாய் மாகாண இளைஞர் மாநாட்டுத் தலைமை உரையிலிருந்து.)[2]

மேற்கோள்கள் தொகு

  1. 1.0 1.1 1.2 1.3 1.4 1.5 1.6 1.7 ப. ராமசாமி (2004). உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம். நூல் -20-21. நாதன் பதிப்பகம். Retrieved on 14 ஏப்ரல் 2020.
  2. அர்ஜுன் தேவ், தமிழில் நா. தர்மராஜன், (2010). ஜவகர்லால் நேரு போராட்டகாலச் சிந்தனைகள். புதுதில்லி: நேஷனல் புக்டிரஸ்ட், இந்தியா,. pp. 83-91. ISBN ISBN 978-81-237-3332-6. 
"https://ta.wikiquote.org/w/index.php?title=அதிருப்தி&oldid=19096" இலிருந்து மீள்விக்கப்பட்டது