சாதியை ஒழிக்கும் வழி (நூல்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 1:
[[File:First edition of Annihilation of Caste.jpg|thumb|சாதியை ஒழிக்கும் வழி நூலின் ஆங்கில மூலத்தின் முதற்பதிப்பின் அட்டைப்படம்]]
'''சாதியை ஒழிக்கும் வழி''' ''([[w:en:Annihilation of Caste|Annihilation of Caste]])'' என்ற நூல் 1936ஆம் ஆண்டு லாகூரில் நடக்க இருந்த ஜாத்-பட்-தோடக் மண்டல் மாநாட்டுக்காக [[அம்பேத்கர்|அம்பேத்கரால்]] எழுதப்பட்டது. உரையின் கருத்துக்களோடு மண்டலுக்கு சில முரண்பாடுகள் இருந்ததால் இந்த மாநாடு நடத்தப்படவில்லை. அந்த உரையை பின்னர் புத்தகமாக அம்பேத்கர் வெளியிட்டார். அடுத்த ஆண்டே இப்புத்தகத்தின் தமிழ் மொழிபெயர்ப்பு [[பெரியார்|பெரியாரின்]] முயற்சியால் குடி அரசு இதழில் தொடர்ச்சியாக வெளியிடப்பட்டது. தலித் முரசு இதழில் சில ஆண்டுகளுக்கு முன்பு முழு உரையும் வெளியிடப்பட்டது. மத்திய அரசின் நலவாழ்வு அமைச்சகத்திற்காக செய்தி, ஒலிபரப்பு அமைச்சகத்தின் புத்தக வெளியீட்டுப் பிரிவால் வெளியிடப்பட்ட ''பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பின் முதல் தொகுதியில்'' இந்த உரை உள்ளது. இந்நூலுக்கு [[மோகன்தாசு கரம்சந்த் காந்தி|மகாத்மா காந்தி]] ஆற்றிய எதிர்வினையும், அதற்கு அம்பேத்கரின் மறுப்பும் இணைந்தே உள்ளது.
 
[[அம்பேத்கர்|அம்பேத்கரது]] பிற மேற்கோள்கள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.
 
==மேற்கோள்கள்==
 
* நான் இந்துக்களை விமர்சித்து இருக்கின்றேன்; அவர்கள் போற்றிடும் மகாத்மாவுக்கு இந்துக்கள் பெயரால் பேசுவதற்கு என்ன அதிகார உரிமை உள்ளது எனக் கேட்டிருக்கின்றேன். அவர்கள் என்னை வெறுக்கின்றனர். அவர்களுடையத் தோட்டத்தில் என்னையொரு நச்சுப் பாம்பாகவே அவர்கள் பார்க்கின்றனர். <ref name='AOC51'>பாபா சாகேப் டாக்டர் அம்பேத்கர் நூல் தொகுப்பு தொகுதி 1, பக்கம் 51</ref>
 
"https://ta.wikiquote.org/wiki/சாதியை_ஒழிக்கும்_வழி_(நூல்)" இலிருந்து மீள்விக்கப்பட்டது