ஈ. வெ. இராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 419:
===பல்துறை===
* என்றைக்கும் வரவுக்கு மிஞ்சிய செலவு செய்துவிட்டு கடனாளியாக மாறிப் பிறரை ஏமற்றுவது இழுக்கு; இதைவிட விபச்சாரம் என்பது இழிவானதல்ல. விபச்சாரத்தைவிட மோசமான பண்பு – அதிகச் செலவு செய்து அதற்காகக் கடன் வாங்கித் திண்டாடுவதுதான். 30 ரூபாய் சம்பாதிக்கிறவனும் கடனாளி; 1,000 ரூபாய் சம்பாதிக்கிறவனும் கடனாளி என்றால் என்ன அர்த்தம்? தன்னை அடக்காதவனுக்குத்தான் தரித்திரம் உண்டாகும். தன்னை அடக்காதவள்தான் விபச்சாரி. நம் மக்கள் அறிவு பெறவேண்டுமானால் உண்மைக்கு மாறான செய்திகளை வெளியிடும் பத்திரிகைகளை வெறுத்து ஒதுக்க வேண்டும். உலகில் பத்திரிகைகள் இரண்டு விதமானவை. தமது வாழ்க்கைக்கு ஒரு வழி வேண்டுமென்று சுயநலம் கருதுபவர்களால், மக்களைப் பின்பற்றி நடத்தப்படும் பத்திரிகை ஒன்று. மக்கள் சமூகத்தில் சில கொள்கைகளைப் பரப்பவேண்டுமே என்று பொதுநலம் கருதுபவர்களால், ஒரு குறிப்பிட்ட லட்சியத்தையே பின்பற்றி நடத்தப்படும் பத்திரிகை மற்றொன்று. ஒவ்வொரு மனிதனின் இலட்சியமும், தான் மனிதனாகப் பிறந்தது மனித சமுதாயத்திற்குத் தொண்டாற்றுவதற்காக என்றிருக்க வேண்டும். புதுமைக்கு மக்களை திருப்ப வேண்டும் புதுமைகளை மக்கள் உணரும் படிச் செய்யவேண்டும். ஒவ்வொருவரும் பழமையை விட்டுக் காலத்திற்கேற்ப முன்னோக்கிச் செல்லவேண்டும். அப்போது தான் நாமும் மற்ற உலக மக்களைப்போல் சிறப்பாக வாழமுடியும்.<ref name="periyar_arivurai" />
 
===தொழிகள் குறித்து===
* விவசாயம் யார் செய்வது, யார் பூமியைப் பயிர் செய்வது என்று கேட்கப்படலாம். இது, கக்கூசு எடுக்கும் சக்கிலி, பறையர், ஒட்டர் என்பவர்களுக்குப் படிப்புக் கொடுத்து மேன்மக்களாக ஆக்கிவிட்டால், கக்கூசு எடுப்பவர்கள் யார் என்று கேட்கப்படுவது போலக் கேட்கப்படுவதாகும். அதற்கு எனது பதில், 'அந்தத் தொழில்களை நாம் எல்லோரும் (எல்லா இடத்தில் உள்ளவர்களும்) விகிதாச்சாரம் பங்கு போட்டுக் கொண்டு செய்ய வேண்டும் என்பதுதான்.
 
கீழான தொழில், ஈனமான தொழில், கஷ்டமான தொழில், சரீர உழைப்பு அதிகமாகவும், பயன்மிக்க அற்பமாகவும், வாழ்வில் இழிவாகவும் இருக்கும்படியான தொழில் முறைகளை நாட்டில் இல்லாமல் செய்ய வேண்டும். அதுதான் நாட்டின் முன்னேற்றமாகும். <ref>பெரியார் ஈ.வெ.ரா சிந்தனைகள், தொகுப்பாசிரியர் வே.ஆனைமுத்து, முதல் பதிப்பு, பக்கம் 898</ref>
 
==சான்றுகள்==
"https://ta.wikiquote.org/wiki/ஈ._வெ._இராமசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது