ஈ. வெ. இராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 399:
 
===சுயமரியாதை===
* தெரியாத-புரியாத கடவுளை மனிதன் நம்பித்தான் ஆகவேண்டும் என்பதான கட்டாயம் ஏற்பட்டு, மனிதன் நம்ப ஆரம்பித்ததன் பயனே இவ்வளவு பொய்களையும் நம்பவேண்டியவனாகிவிட்டான். ஒரு மனிதனின் சுயமரியாதை உணர்ச்சிக்கு எது எது பாதகமாய்க் காணப்படுகிறதோ, அவைகளையெல்லாம் மாற்றுவதுதான் உண்மையான சுயமரியாதை இயக்கத்தின் நோக்கம். மனிதனுக்கு எல்லாவற்றையும்விட முக்கியமான உணர்ச்சியான மான – அவமானம் என்னும் தன்மானமாகிய சுயமரியாதையைத் தான் பிறப்புரிமையாகக் கொள்ள வேண்டியிருக்கின்றது. ஏனெனில், “மனிதன்”, “மானுடன்” என்ற பதங்களே மானத்தை அடிப்படையாகக் கொண்டு ஏற்பட்ட மொழிகள். ஆதலின் மனிதன் என்பவன் மானமுடையோன். எனவே, மனிதனுக்கு மனிதத் தன்மையைக் காட்டும் உரிமையுடையது மானம்தான். அத் தன்மானமாகிய சுயமறியாதையைதான் மனிதன் பிறப்புரிமையாகக் கொண்டிருக்கின்றான். சீர்திருத்தமும், சுயமரியாதையும் சட்டம் கொண்டு வந்து, வாக்கு வாங்கி நிறைவேற்றப் பெற்றுவிடலாம் என்று நினைப்பது ஒரு நாளும் முடியாத காரியம். தற்போது நம் மக்களுக்கு வேண்டியது படிப்புமட்டும் அல்ல, அறிவும் வேண்டும், சுயமரியாதையும் வேண்டும், தன்மான உணர்ச்சியும்,எதையும் பகுத்துணரும் திறனும், ஆராய்ந்து அறியும் அறிவும் தான் மிகவும் தேவை. மனிதன் உலகில் தன் சுயமரியாதையை தன்மானத்தை உயிருக்குச் சமமாகக் கொள்ள வேண்டும்.<ref name="periyar_arivurai" />
 
===சமுதாயச் சீர்திருத்தம்===
* சமூகச் சீர்திருத்தம் என்ற பெயரால் இங்கும் அங்கும் ஏதோ மாறுதல்களைச் செய்வதோ, ஒட்டு வேலை-மேல்பூச்சு வேலை செய்வதோ பயன்தராது. இன்றையச் சமுதாய அமைப்பையே அடியோடு ஒழித்து விட்டுப் புதியதொரு சமுதாய அமைப்பை சாதியற்ற உயர்வு தாழ்வு அற்ற சமுதாய அமைப்பை உருவாக்கவேண்டும். நம்முடைய சமுதாயம் குரங்குப்பிடிச் சமுதாயம்; உலகம் முக்காலே அரைக்கால்வாசி முன்னேற்றம் அடைந்த பிறகும், இது முன்னோர் சொன்னபடி நீண்ட நாளாக நடந்து வந்த பழக்கம் என்றுகூறி, முதுகுப் பக்கம் பார்த்துக்கொண்டு பிடிவாதமாக நடந்து, இன்னும் காட்டுமிரண்டித் தன்மையிலேயே இருக்கிறது. நீ ஒரு ஊரிலே இருக்கிறாய். அந்த ஊரிலே 50 பேருக்கு நரம்புச் சிலந்தி வந்திருக்கிறது. அது எதனால் வந்தது என்று பார்க்கிறாய். அந்த ஊரில் உள்ள கேணியில் நரம்புச் சிலந்தி பூச்சி இருக்கிறது. அந்த தண்ணீரைக் குடிப்பதால்தான் அவர்களுக்கு நரம்புச் சிலந்தி வந்திருக்கிறதென்றால் அந்தக் கேணியிலிருக்கிற நீரையெல்லாம் இறைத்து விட்டுச் சுத்தப்படுத்த வேண்டும். ஊற்றே நரம்புச் சிலந்தியை உண்டாக்கக் கூடியதாக இருந்தால், அந்த ஊற்றையே அடைத்துவிட்டு, வேறு புதுக்கேணி வெட்ட வேண்டும். இல்லை, நான் அந்த தண்ணீரைத்தான் குடிப்பேன் என்றால் அந்த நோய்க்கு ஆட்பட்டாக வேண்டுமே தவிர, அதிலிருந்து தப்ப வழியில்லை. நான் அந்த ஊற்றை அழிக்கும் வேலையில்தான் ஈடுபட்டிருக்கின்றேன். சமூகக் கொடுமைக்கு அடிப்படையான மதம், சாதி, பழக்க வழக்கம், சாத்திரங்கள், கடவுள், கட்டளைகள் என்பவை தகர்க்கப்படாமல் - எப்படிப்பட்ட அரசியல் சீர்திருத்த மேற்பட்டாலும் ஒரு காதொடிந்த ஊசியளவுப் பயனும் பாமர மக்களுக்கு ஏற்படாது. சமுதாயத்தில் பார்ப்பனர் என்றும், பஞ்சமர் என்றும் பிரிவுகள் இருக்க வேண்டியது அவசியம்தானா? அதற்கு கடவுள் பொறுப்பாளி என்று கூறப்படுமானால், அக்கடவுளைப் பஞ்சமனும், சூத்திரனும் தொழலாமா?
"https://ta.wikiquote.org/wiki/ஈ._வெ._இராமசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது