ஈ. வெ. இராமசாமி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 400:
===பொருளாதாரம்===
* செல்வம்(பணம்) தேட வேண்டும் என்று கருதி, அதில் இறங்கியவனுடைய வேலை அவனது வாழ்நாள் முழுவதையும் கொள்ளை கொண்டு விடுகிறது. பணம் சம்பாதிப்பதில் போட்டி, பணக்காரன் என்று காட்டிக்கொள்வதில் போட்டி, அதற்கேற்ற புகழ் சம்பாதிப்பதில் போட்டி. இத்தியாதி போட்டிகள் அவனது ஊக்கத்தையெல்லாம் கொள்ளை கொண்டு விடுகின்றன. வரவுக்கும் மேலாக வாழ்க்கைத் திட்டம் ஏற்படுத்திக்கொண்டு துன்பப்படுபவர்கள் நாணயமாய் வாழ முடியாமல் நாட்டுக்குத் தொல்லை விளைவிப்பார்கள். இன்றைய அமைப்பில் கையில் காசில்லா விட்டால் மனிதன் பெரிதும் யோக்கியனாகக் கூட நடந்து கொள்ளமுடியாது. மனிதன் துரோகி, நம்பிக்கை மோசக்காரன், அயோக்கியன் ஆவதற்குக் காசில்லாக் கொடுமையும், காசு ஆசையும்தான் காரணம். ஆசையால், நல்ல முறையில் கொஞ்சம் காசு சம்பாதித்தாலும் அதைப் பத்திரப்படுத்தி வைத்தால் சிரமப்படவோ தவறாக நடந்து கொள்ளவோ வேண்டியதில்லை.
===திருமணம்===
* மணமக்கள், உயிர் நண்பர்கள் ஒருவருக்கொருவர் பழகும் முறையைப் போல் நடந்து கொள்ளவேண்டும். எதிலும் தான் கணவன் என்ற ஆணவத்தை மணமகன் கொள்ளக்கூடாது. மணமகளும் தான் கணவனுக்கு அடிமைப் பொருள், அடுப்பூதுவதற்கு என்றே வந்தவள் என்ற என்னமில்லாது பழக வேண்டும். மணமக்கள், வாழ்க்கையில் மற்றவர்களுக்கு உதவும் மனப்பான்மை உடையராக இருக்க வேண்டும். நம்மால் நன்மை செய்ய இயலாவிட்டாலும், கேடாவது ஏற்படாத மாதிரி நடந்துகொள்ள வேண்டும். நல்வாழ்வும், நாணயமான வாழ்வும் பெறக் குழந்தைப் பேற்றைக் குறைத்துக் கொண்டு, வாழ்க்கை வசதிகளை நல்லவண்ணம் அமைத்துக் கொள்ளவேண்டும். கல்யாணம், திருமணம் என்கிற பெயர்களைக்கூட நான் ஒப்புக்கொள்வதில்லை. வாழ்க்கை துணை ஒப்பந்தம் என்றுதான் நான் சொல்வது. ஆகையால், ஒப்பந்தத்துக்கு உறுதிமொழியும், அவசியப்பட்டால் பதிவு ஆதாரமும் தவிர வேறு காரியங்கள் எதற்கு? அதன் மூலம் அறிவு, காலம், பணம், ஊக்கம், சக்தி இவை ஏன் வீணாக வேண்டும்?
==சான்றுகள்==
<references />
"https://ta.wikiquote.org/wiki/ஈ._வெ._இராமசாமி" இலிருந்து மீள்விக்கப்பட்டது