மலையாளப் பழமொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
துவக்கம்
(வேறுபாடு ஏதுமில்லை)

09:02, 10 ஏப்பிரல் 2014 இல் நிலவும் திருத்தம்

அகரவரிசையில் மலையாளப் பழமொழிகள் தரப்பட்டுள்ளன.

அ| அ

  • அகப்பட்டால் பன்றி சுரைக்காயும் தின்னும்.
  • அகம் நன்றானால் புறம் நன்றாகும்
    • மனது தூய்மையுடன் விளங்கினால், அதன் வெளிப்பாடும் சிறப்பாக இருக்கும்
  • அக்கரை நின்றால் இக்கரை பச்சை, இக்கரை நின்றால் அக்கரை பச்சை.
  • அஞ்சில் வளையாதது அம்பதில் வளையுமோ?
    • குட்டிக்காலத்த் மனஸ்ஸ் ஏதுவழிக்கும் திரிக்காம். ப்ராயமாயால் ப்ரயாஸமாண்.
  • அஞ்சு விரலும் ஒருபோலயோ?
    • ஐந்து விரல்களில் வேறுபாடு உள்ளதைப் போன்றே குடும்ப உறுப்பினர்களுக்குள்ளும் வேறுபாடு இருக்கும்.
  • அடி கொள்ளா பிள்ளை படிக்காது.
    • அடித்து வளர்க்காத பிள்ளைகள் படிக்க மாட்டார்கள்
  • அட்டையைப் பிடித்து மெத்தையில் கிடத்தினால் அது கிடக்குமோ?
    • மனதிற்கு விருப்பம் இல்லாத ஒன்று, உயர்வானதாக இருந்தாலும் அதை மனது ஏற்றுக்கொள்ளாது.
  • அம்மா வேலி போல இருந்தால் மகள் மதில் போல் இருப்பாள்
    • அம்மாவின் குணம், மகளிடத்திலும் இருக்கும்.

  • ஆளுகூடினால் பாம்பிற்கு சாவில்லை.
    • பலர் கூடி உடிவெடுக்கும் போது பல்வேறு எண்ணங்கள் இருக்கும். ஆதரவாகவும், எதிராகவும் கருத்துகள் வரும். ஒரே முடிவை எடுப்பது கடினம் என்பது இதன் பொருள்.

  • உடுதுணிக்கு மறுதுணியில்லை.
    • உடுத்தியிருக்கும் துணிக்கு வேறு துணியில்லாதவர் ஏழை.
  • உண்ட சோற்றிற்கு நன்றியுடன் இருக்க வேண்டும்.
  • உண்ணியை கண்டால் ஊரையே அறியலாம்.
    • ஒராளைக் கண்டாலே, அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களைப் பற்றி அறியலாம்.

  • ஏட்டில் உள்ள புல்லை பசு தின்னாது.
    • நூலறிவால் விளைவது எதுவுமில்லை. உலக அறிவே முதன்மையானது

  • கஞ்சி தராமல் கொன்றுவிட்டு, இறந்தபின்னர் பால்பாயசம் படைத்தல்
    • வாழும் வரை மதிக்காமல் இருந்துவிட்டு இறந்தபின்னர், படையல் இட்டு வழிபடுதல்
  • கரைகின்ற குஞ்சே பால் குடிக்கும்
    • தேவை இருக்கும் போது கேட்டுப் பெறுபவனே அறிவாளி.
  • காற்றுள்ளப்போதே தூற்றிக் கொள்ள வேண்டும்.
  • குருடர்கள் யானையைக் கண்டதைப் போல்
    • ஒன்றைப் பற்றி அறியாமலேயே பல கருத்துகளைக் கூறுவதைக் குறிக்கிறது.

  • தாழ்ந்த நிலத்தில் நீரோடும்.
    • பணிவுடன் இருப்பவர்க்கே உயர்வும் நன்மையும் வரும்.
  • தொடருக, தொட்டால் விடாதே.
    • ஏதாவது ஒரு செயலை தொடங்கினால் முடியும் வரை கவனம் இருக்க வேண்டும்.
  • தானம் கிட்டிய பசுவின் வாயைப் பார்க்காதே

  • நாயின் வால் பன்னிராண்டு காலம் நிமிர்த்தினாலும் வளைந்தே இருக்கும்.

  • பெண்புத்தி பின்புத்தி.
  • பொன்முட்டையிடும் வாத்தைக் கொல்லாதே

  • வந்த வழியை மறக்காதே
    • செல்வ வளம் பெருகிய பின்னர், பழைய கால வாழ்க்கையை மறக்கக் கூடாது.
  • வேலி தாண்டிய பசுவிற்கு கோலால் மரணம்
    • தவறான வழியில் சென்றால் ஆபத்து நேரிடும்.

சான்றுகள்

"https://ta.wikiquote.org/w/index.php?title=மலையாளப்_பழமொழிகள்&oldid=8480" இலிருந்து மீள்விக்கப்பட்டது