கி. வீரமணி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
வரிசை 12:
*அடக்கத்தின் சிறப்பே, நாம் உயர உயரப் பணிவும், அடங்கலும் அதிகமாகிக் கொண்டே வருதலில்தான் இருக்கிறது.<ref name="rationalist_diary" />
*உரமிடாத பயிரும், படித்து கூர்மையாக்கப்படாத அறிவும் வளர்ச்சி குன்றியவையே.<ref name="rationalist_diary" />
*எல்லோருக்கும் தேவையானது சிறந்த அறிவும், திறந்த இதயமும் ஆகும்.<ref name="rationalist_diary" />
*தொண்டால் உயரும் அறிவே உண்மை அறிவு; அது கற்பதால் வரும் அறிவு; வெறும் படிப்பால் பெறும் அறிவு அல்ல; இரண்டும் வெவ்வேறானவை. காரணம் கற்பது வேறு; படிப்பது வேறு.<ref name="rationalist_diary" />
*புத்தகங்களைப் படிப்பதை விட, மனிதர்களைப் படிப்பதே மிக மிக முக்கியம்.<ref name="rationalist_diary" />
*வாழ்க்கையில் தவறுகள் என்று ஒன்றுமில்லை; எல்லாம் பாடங்கள், அனுபவங்கள், அவைதான் நன்மையைத் தருபவை.<ref name="rationalist_diary" />
*எதிலும் துணிந்து பங்கேற்று பல்வேறு அனுபவங்களையும் சுவைக்கத் தவறாதீர்.<ref name="rationalist_diary" />
*தனக்கு நேர்ந்த அனுபவங்களை ஒவ்வொருவரும் மறு ஆய்வு செய்து, அசை போட்டு, சிந்தித்துப் பார்க்க தவறக் கூடாது.<ref name="rationalist_diary" />
*சிலருக்கு வாழ்க்கைக் கடலில் லட்சியக் கரை சேர அவரது அனுபவம் என்ற நீச்சல் பயன்படுகிறது.<ref name="rationalist_diary" />
*அன்றாடம் அனுபவம் என்ற பக்கங்களைக் கொண்டது நமது வாழ்க்கை; அதைத் திறந்த புத்தகமாக வைத்துக்கொள்வோம்.<ref name="rationalist_diary" />
*நோயைக் குணப்படுத்துவது டாக்டர்கள் கடமை, நோயாளியின் மனதைச் சரிப்படுத்துவது பார்வையாளரின் பொறுப்பு என்பதை மறவாதீர்.<ref name="rationalist_diary" />
*பகலும் இரவும் எப்போதும் ஒன்றையொன்று துரத்துவது போலத்தான், மகிழ்ச்சியும் சோகமும் ஒன்றையொன்று முந்தப் பார்க்கும்.<ref name="rationalist_diary" />
*நாம் மூச்சை இழுத்து வெளியே விடுவதுபோல, அன்பையும் இருவழிப்பாதை ஆக்கினால் உலகமே நம் கைக்குள் வரும்.<ref name="rationalist_diary" />
*மகிழ்ச்சி என்பது நமது சுற்றுச் சூழல் தருகின்ற கொடை அல்ல; உள்ளத்திலிருந்து கிளம்ப வேண்டிய ஊற்று.<ref name="rationalist_diary" />
*உடல் நலம் பெரிதும் மனநலத்தைப் பொறுத்தது.<ref name="rationalist_diary" />
*உடலை அழகுபடுத்திக் கொள்வதை விட மிகமிக முக்கியம் நம் மனதை, உள்ளத்தை அழகுபடுத்திக் கொண்டு, பிறர் மனதை மதித்து வாழ்வது.<ref name="rationalist_diary" />
*உள்ளத்தில் அறிவை நட்டுக் கொண்டு, மனத்தை அழகுபடுத்திக் கொள்வது மிகவும் தேவை.<ref name="rationalist_diary" />
*உணர்ச்சிகள் என்பன, நமது புலன்கள் மூலம் நாம் அறிவதையொட்டி நமக்குள் ஏற்படுத்தும் அலைகள்.<ref name="rationalist_diary" />
*அடிக்கடி உணர்ச்சி வயப்படாதீர்கள், உணர்ச்சிகளை நீங்கள் ஆளுங்கள், உணர்ச்சிகள் உங்களை ஆள விட்டுவிடாதீர்கள்.<ref name="rationalist_diary" />
*எதையும் பதற்றமின்றிச் சலனமில்லாமல் ஓடும் சிற்றோடை போல வாழ்க்கையைப் பார்க்கப் பழகியவரை, துன்ப அலைகள் அலைக்கழிக்கவே முடியாது.<ref name="rationalist_diary" />
*பிழைபட உணர்தலைப் போக்க வேண்டுமே தவிர, காக்கவோ பெருக்கவோ கூடாது.<ref name="rationalist_diary" />
*எதையும் நயம்பட உரைத்தலில்தான் நம் வாழ்வின் வெற்றி அமைந்துள்ளது.<ref name="rationalist_diary" />
*உறுதி மொழிகளை எப்போதும் நிதானித்து அளியுங்கள்; அவசரப்பட்டுக் கூறி பிறகு அவதிக்குள்ளாகாதீர்கள்.<ref name="rationalist_diary" />
*நாம் பிறருக்கு உதவும் போது ஏற்படும் இன்பம்தான் நமது மனிதநேயத்தினை அளக்கும் கருவி.<ref name="rationalist_diary" />
*நல்ல நூல்களை நாள்தோறும் படிப்பவர்களின் மனம் விசாலப் பார்வையால் விரியும், அகண்டமான அந்த அறிவினால் உலகை விழுங்க முடியும்.<ref name="rationalist_diary" />
*எப்போதும் மவுனம் தேவையில்லை; தேவைப்படும்போது மவுனம் சிறந்த ஆயுதம்.<ref name="rationalist_diary" />
*எளியதைச் செய்ய எவராலும் முடியும். எதிர்கொள்ள பலரும் அஞ்சும் பணியை செய்ய என்னால் முடியும் என்று துணிவு கொள்க.<ref name="rationalist_diary" />
*காதல் என்பது துள்ளும் இளமைப் பருவத்தில் விளைவுகளைப் பற்றி யோசிக்காமல் கவர்ச்சியால் ஈர்க்கப்படுதல்.<ref name="rationalist_diary" />
*நாம் மந்தைகள் அல்ல ஒரே பக்கம் ஓடிச்செல்ல, மனிதர்கள்! நாட்டுக்கு நாடு மட்டுமல்ல; வீட்டுக்கு வீடு மனிதர்களின் எண்ண ஓட்டங்கள் மாறுபடுகின்றன, வேறுபடுகின்றன.<ref name="rationalist_diary" />
*கையில் ஒரு மனிதனுக்குக் காசில்லா நிலை ஏற்பட்டாலும், மனதில் மாசில்லா நிலையிலிருந்து அவன் மாறக்கூடாது.<ref name="rationalist_diary" />
*நோய்களில் கொடிய நோய் மூடநம்பிக்கை என்ற நோய்தான்.<ref name="rationalist_diary" />
*கடமை, உரிமை இரண்டையும் புரிந்து, ஒன்றுக்காக மற்றொன்றை விட்டுக் கொடுக்காத மன உறுதி வேண்டும்.<ref name="rationalist_diary" />
*ஒருவரது தவறைச் சுட்டுவது தவறல்ல; பலர்முன் சுட்டிக் காட்டி மிகக் கேவலமாக மற்றவர் நினைக்கும்படி செய்வது தவறு.<ref name="rationalist_diary" />
*இளைய பருவத்திலேயே புத்தகம் படிக்கும் பழக்கத்தை விளையாட்டைப் போலவே மிகுந்த ஈடுபாட்டுடன் பெருக்கி கொள்வது மிக நல்லதாகும்.
*நம்முடைய மனம் என்னும் காட்டுக் குதிரையை அடக்கிக் குறிப்பிட்ட சரியான வழியில் அதனை நடைபோட வைப்பதே பகுத்தறிவு.
"https://ta.wikiquote.org/wiki/கி._வீரமணி" இலிருந்து மீள்விக்கப்பட்டது