பாலை (திரைப்படம்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"{{விக்கிப்பீடியா|பாலை (தி..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

10:03, 7 சூலை 2013 இல் நிலவும் திருத்தம்

Wikipedia
Wikipedia
விக்கிப்பீடியாவில் கீழ் காணும் தலைப்பில் ஒரு கட்டுரை உள்ளது:


முன்கதைச் சுருக்கம்

கிமு. 3ஆம் நூற்றாண்டில் படம் தொடங்குகிறது. முதலில் ஆயர் என்னும் சங்ககால தமிழ் மக்களில் ஒரு குழுவினர் ஆய்க்குடி என்னும் வளமான ஊரில் வாழ்கின்றனர். வேற்று மொழி பேசும் வந்தேறி கூட்டமொன்று அவ்வூரில் உள்ள ஆயர்களில் பலரைக்கொன்று மீண்டவர்களை ஊரை விட்டு வெளியேற்றுகின்றனர். தப்பித்த ஆயர்கள் தங்களுக்கென முல்லைக்கொடி என்ற ஊரை உருவாக்கி வாழ்கின்றனர். அந்த ஊரில் பாலை என்னும் நில வறட்சிக்காலம் வரப்போவதாக அந்த ஊரைச்சேர்ந்த முதியவரும் கணியருமான பாலை முதுவன் கூறுகிறார். அந்த நில வறட்சிக்காலம் வந்தால் வேட்டையாடுதல், ஆநிரை மேய்த்தல், உழவு செய்தல், மீன் பிடித்தல் என நால்வகை திணைத்தொழில்களையும் செய்யாமல் பாலை நில மக்கள் செய்யும் களவு வேலை செய்தே பிழைக்க வேண்டும் என்று அவ்வூர் மக்களையும் தலைவனையும் எச்சரிக்கிறார் முதுவன். வரட்சி வருமோ என்று பயந்து முல்லைக்கொடி மக்கள் சிலர் ஆயக்குடியில் உள்ள வந்தேறி மக்களின் வணிகச்சாத்தனை கொல்கின்றனர். இது முல்லைக்கொடி தலைவனுக்கு தெரிய வர ஆயக்குடி வந்தேறிகளின் வணிகச்சாத்தனை கொன்றவர்களை கண்டித்ததுடன் வணிகச்சாத்தனின் பிணத்தை ஆயக்குடி வந்தேறிகளின் தலைவனிடம் அனுப்பி மன்னிப்பு கோருகிறார் முல்லைக்கொடித் தலைவன் விருத்திரன். மன்னித்து விட்டதாகக் கூறி நாடகமாடி இணக்கம் பேச வேறொரு இடத்துக்கு வருமாறு அழைத்து வணிகச்சாத்தனின் மீது வேலெறிந்து கொன்றவனை வணிகச்சாத்தனின் இணையாள் மூலமாகவே கொல்கிறான் வந்தேறிகளின் தலைவன் அரிமாவன். அதோடு நில்லாது முல்லைக்கொடியில் முக்கியமானவனான வளன் என்பவனை கடத்திக் கொடுமையும் செய்கிறான். தப்பித்த மற்றவர்கள் முல்லைக்கொடிக்கு செல்கின்றனர். வலனை மீட்பதற்கு விருத்திரன் தம் மக்களிடம் ஆய்க்குடி வந்தேறிகள் மீது போர் தொடுக்குமாறு கூறுகிறார். ஆனால் அவர்களை எதிர்க்க சில சூதான வழிகளை கையாள வேண்டும் என்கிறார் முன்னாள் முல்லைக்கொடி தலைவரும் விருத்திரனின் தந்தையுமான பாலை முதுவன். வலனை அவர்கள் கடத்தியதற்கு விருத்திரனின் கவனக் குறைவு தான் காரணம் என்கிறார் பாலை முதுவன். இதை பொருக்காத விருத்திரனின் துணைவியார் பாலை முதுவனிடம் கேள்வியை கேட்க அப்போது பேசப்படும் வசனம் தான் பின் வருவது.

விருத்திரனின் தலைவி - புடுங்கி வாழாம உழைத்து வாழ வேண்டும் என என் தலைவர் சொல்றார். அதில் என்ன குத்தத்த கண்டீங்க.
பாலை முதுவன் - என் பெயர் வெறும் முதுவன் அல்ல. பாலை முதுவன். பாலை முதுவன். ஏனென்றால் நான் பலையப் பார்த்தவன். நானும் என் தலைவி ஆதிமந்தியும் கூடிச் சிரித்து உடன்போக்கு சென்று க
"https://ta.wikiquote.org/w/index.php?title=பாலை_(திரைப்படம்)&oldid=6908" இலிருந்து மீள்விக்கப்பட்டது