"தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

1,481 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  16 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
* ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.
* ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.
* ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.
* ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
* ஆழம் தெரியாமல் காலை விடாதே.
* உயரப் பறந்தாலும் ஊர்க்குருவி பருந்தாகாது.
* உரலில் அகப்பட்டது உலக்கைக்குத் தப்புமா?
* எரிகிற வீட்டில் பிடுங்கினது லாபம்.
* எறும்பூரக் கல்லும் தேயும்.
* ஏறச்சொன்னால் எருதுக்குக் கோபம் இறங்கச் சொன்னால் முடவனுக்குக் கோபம்.
* ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம்.
* கடுகு சிறிதானாலும் காரம் பெரிது.
* காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
* காய்த்த மரம்தான் கல்லடிபடும்.
* காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.
* கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?
* குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.
* குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.
* குரங்குப் புண்ணுக்கு அருமை காட்டினால் கொப்பிலே கொப்பிலே தாவுமாம்
* குரைக்கிற நாய் கடிக்காது.
* கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.
* கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.
* சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.
* சிறு பிள்லை வேளாண்மை வீடு வந்து சேராது.
* சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.
* தடியெடுத்தவன் தண்டக்காரன்.
* தம்பியுள்ளான் படைக்கஞ்சான்.
* தன் வினை தன்னைச் சுடும்.
* தலைக்கு மேலே வெள்ளம் போனால் சாணென்ன முழமென்ன.
* தினை விதைத்தவன் தினையறுப்பான் வினை விதைத்தவன் வினையறுப்பான்.
* தெய்வம் வரங் கொடுத்தாலும் பூசாரி விடாதது போல்.
* நக்கிற நாய்க்குச் செக்கென்ன சிவலிங்கமென்ன?
* நடுக்கடலுக்குப் போனாலும் நாய்க்கு நக்குத் தண்ணீர்தான்.
* நல்ல மாட்டுக்கு ஒரு சூடு.
* நிலவுக்கு அஞ்சிப் பரதேசம் போவது போல்.
* நிழலின் அருமை வெய்யிலில் தெரியும்.
* நிறைகுடம் தளம்பாது.
* படிக்கிறது தேவாரம் இடிக்கிறது சிவன் கோயில்.
* பந்திக்கு முந்து படைக்குப் பிந்து.
* பனங்காட்டு நரி சலசலப்புக்கு அஞ்சாது.
* பனை மரத்தடியில் பால் குடித்தாலும் பிழை.
* பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.
* பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார்.
* புதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெழுப்பான்.
* பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.
* மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
* மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.
* முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.
* யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
* யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
* விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.
* விளையும் பயிரை முளையிலே தெரியும்.
30

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/4" இருந்து மீள்விக்கப்பட்டது