எசுப்பானிய பழமொழிகள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
விரிவாக்கம்
விரிவாக்கம்
வரிசை 4:
* அழகுக்கும் கற்புக்கும் இடைவிடாத போர் இருந்தே வரும்.
* ஆடவர் அழகை ஒரு குணமாகப் பார்க்கின்றனர்; பெண்கள் குணத்தை அழகாகப் பார்க்கின்றனர்.
* ஒரு காதல் மற்றொன்றை வெளியேற்றிவிடும்.
* ஒரு பெண் அழகாயிருப்பதாக நாம் ஒரு முறை சொன்னால், அதையே சயித்தான் அவளிடம் பத்து முறை சொல்வான்.
* ஒரு பெண்ணின் காதல் கூடையிலுள்ள தண்ணீர் போன்றது.
* கடலில் உப்பைத்தான் பெறலாம், பெண்ணிடம் தீமையைத் தான் பெறலாம்.
* கற்புடைய கன்னியும், நொண்டியும் வீட்டிலேயேயிருப்பது மேல்.
* காதலர் மற்றவர் கண்களெல்லாம் அவிந்து விட்டது போல எண்ணுவர்.
* காதலின் பார்வையில் செம்பு தங்கமாயிருக்கும், ஏழைமை செல்வமாகும்.
* காதல் சுளுக்குப் போன்றது, இரண்டாம் தடவை அது எளிதில் வந்துவிடும்.
* காதல் வெட்கப்பட்டால், அது உண்மையானதன்று.
* கூவுகிற கோழியும், லத்தீன் படித்த பெண்ணும் நல்ல முடிவை அடைய மாட்டார்கள்.
* கெட்ட ஸ்திரீகளைக் காவல் காப்பது வீண் வேலை.
* சாளரக் கம்பிகளின் இடைவழியாகவே காதலுக்கு உயிர் வருகிறது.
* 'சூப்'பிலும் காதலிலும் முதலாவது தான் சிறந்தது.
* செயல்களே காதல், இனிமையான சொற்களல்ல.
* சேவல் தன் குப்பை மேட்டிலிருந்துதான் கூவும், கோழி ஊரெங்கும் சுற்றிக் கூவி வரும்.
* தன் முகத்தைப் பற்றியே பெருமைப்படும் பெண்ணால் வீடு பாழாகும்.
* தன்னையே அதிகமாய்ப் பார்த்துக் கொண்டிருக்கும் பெண் வீட்டை நாசாமாக்குவாள்.
* தேர்ந்தெடுப்பது என்பது காதலில் இல்லை
* நன்றாக உடையணியும் ஒரு பெண் தன் கணவன் வேறு பெண்ணை நாடாமல் காத்துக் கொள்ளமுடியும்.
* நன்றியுள்ள மனிதன் எது சொன்னாலும் நம்பலாம். ஏனெனில், அவன் துரோகம் செய்ய மாட்டான்.
* நெருப்புக்குக் காற்று எப்படியோ, அப்படிக் காதலுக்குக் பிரிவு.
* பெண்கள் கிடைத்ததை மதிக்கமாட்டார்கள், மறுத்ததையே விரும்பி வாடுவார்கள்.
* மூன்று பெண்களும், ஒரு தாயும்- ஆகத் தந்தைக்கு நான்கு சயித்தான்கள்.
"https://ta.wikiquote.org/wiki/எசுப்பானிய_பழமொழிகள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது