தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Neyakkoo (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎ப
Neyakkoo (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎ப
வரிசை 12,410:
==ப==
* பட்சிக்குப் பசித்தாலும் எட்டியைத் தின்னாது.
* பணம் போனால் சம்பாதிக்கலாம்; குணம் போனால் வராது.
* பணம் போனாலும் குணம் போகாது.
* பணம் வேண்டும்; அல்லது பத்துச் சனம் வேண்டும்.
* பணமும் பத்தாய் இருக்க வேண்டும்; பெண்ணும் முத்தாய் இருக்க வேண்டும்.
* பணி செய்வோன் வாயும் சங்குப் பின்னுமாய்ப் பேசுகிறான்.
* பணியாரம் தின்னச் சொன்னார்களா? பொத்த லை எண்ணச் சொன்னார்களா?
* பணியாரமோ கிலுகிலுப்போ?
* பக்தங்கி கல்யாணம் பகலோடே.
* படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
* பணக்காரனுக்குப் பச்சிலை மருந்து சொல்லாதே.
* பணம் உண்டானால் படையையும் வெல்வான்.
* பணம் உண்டானால் மணம் உண்டு.
* பணம் என்றால் பிணமும் கை தூக்கும்.
* பணம் என்றால் பிணமும் வாய் திறக்கும.
* பணம் என்றால் பேயாய்ப் பறக்கிறான்.
* பணம் என்ன செய்யும்? பத்து விதம் செய்யும்.
* பணம் என்ன பாஷாணம்; குணம் ஒன்றே போதும்.
* பணம் கண்ட தேவடியாள் பாயிலே படுக்க மாட்டாள்.
* பணம் குணம் ஆகும்; பசி கறி ஆகும்.
* பணம் செல்லா விட்டால் அரிசிக்காரிக்கு என்ன?
* பணம் பசியைப் போக்காது
* பணம் பணந்தோடே சேரும்; இனம் இனத்தோடே சேரும்,
* பணம் பந்தியிலே; குலம் குப்பையிலே,
* பணம் பாதாளம் மட்டும் பாயும்.
* பணம் பார்த்துப் பண்டம் கொள்; குணம் *பார்த்துப் பெண்ணைக் கொள்.
* பணம் பாஷாணம்.
* பணம் பெரிதா? குணம் பெரிதா?
* பணம் பெரிதோ? பழமை பெரிதோ?
* பணம் பெருத்தது நீலகிரி.
* பணக்காரனுடன் பந்தயம் போடலாமா?
* பணக்காரனும் தூங்கமாட்டான், பைத்தியக்காரனும் தூங்கமாட்டான்.
"https://ta.wikiquote.org/wiki/தமிழ்ப்_பழமொழிகளும்_சொலவடைகளும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது