தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
Neyakkoo (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎ப
Neyakkoo (பேச்சு | பங்களிப்புகள்)
சி →‎ப
வரிசை 12,411:
* பட்சிக்குப் பசித்தாலும் எட்டியைத் தின்னாது.
* படை முகத்திலும் அறிமுகம் வேண்டும்.
* பணக்காரனுக்குப் பச்சிலை மருந்து சொல்லாதே.
* பணக்காரனுடன் பந்தயம் போடலாமா?
* பணக்காரனும் தூங்கமாட்டான், பைத்தியக்காரனும் தூங்கமாட்டான்.
* பணக்கேடு ஆனாலும் குணக்கேடு ஆகாது.
* பணத்துக்கு ஓர் அம்பு கொண்டு பாழில் எய்கிறது போல.
* பணத்துக்குப் பயறு பத்துப்படி; உறவுக்குப் பயறு ஒன்பது படி.
* பணத்துக்குப் பெயர் ஆட்கொல்லி.
* பணத்தைக் கொடுக்கச் சொல்லி உயிரை வாங்குகிறது.
* பணத்தைக் கொடுத்தானாம்; காட்டைக் கேட்டானாம்.
* பணத்தைக் கொடுத்துப் பணியாரத்தை வாங்கிப் பற்றைக்குள்ளே இருந்து தின்ன வேண்டுமோ?
* பணத்தைக் கொடுத்துப் பழந் தொழி வாங்கு.
* பணத்தைப் பார்க்கிறதா? பழமையைப் பார்க்கிறதா?
* பணந்தான் குலம்; பசிதான் கறி,
* பணம் அற்றால் உறவு இல்லை; பசி அற்றால் ருசி இல்லை.
* பணம் இருக்க வேணும்; இல்லா விட்டால் பத்து ஜனம் இருக்க வேணும்.
* பணம் இருந்தால் பாட்சா; இல்லா விட்டால் பக்கிரி.
* பணம் இல்லாதவன் பிணம்.
* பணக்காரன் பின்னே பத்துப் பேர்; பரதேசி பின்னே பத்துப் பேர்.
* பணக்காரனுக்குத் தகுந்த பருப்புருண்டை; ஏழைக்குத் தகுந்த எள்ளுருண்டை.
"https://ta.wikiquote.org/wiki/தமிழ்ப்_பழமொழிகளும்_சொலவடைகளும்" இலிருந்து மீள்விக்கப்பட்டது