யுத்தம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 36:
* எவன் யுத்தம் உண்டாக்குவதையே தன் தொழிலாகக் கொண்டிருக்கிறானோ, அவன் பாபி என்பதைத் தவிர வேறு எதுவாகவும் இருக்க முடியாது. - யுத்தம், திருடர்களை உண்டாக்குகிறது. சமாதானம் அவர்களைத் தூக்கு மேடைக்கு கொண்டு வருகிறது. -'''நிக்கோலோ மாக்கியவெல்லி'''<ref name=மாக்கியவெல்லியின்/>
 
* உண்மையான தேசப்பற்று என்பது முதலில் ஒட்டுமொத்த தேசத்தின் ஆரோக்கியத்தை காப்பதில் பெருமை கொள்வதே ஆகும். அதன்பின்தான் பொருளாதாரமும், பாதுகாப்புத் துறையும் இருக்க வேண்டும். உடல்நலத்திலும், சுகாதாரத்திலும் அக்கறை இல்லாத [[நாடு]], நமது ராணுவத்தின் வீரத்தையும், ஆற்றலையும் காட்டி போருக்கு தயார் என்று அறை கூவுவது [[கொலை]] குற்றத்துக்கு சமம். -[[கமல்ஹாசன்]]
** [[கொரோனாவைரசு|கரோனா]] ஊரடங்கின்போது 2020 ஏப்ரலில் கமல் வெளியிட்ட அறிக்கை<ref name=கரோனா>{{cite web | url=https://www.hindutamil.in/news/tamilnadu/550403-new-india-after-coronavirus-pandemic-1.html | title=கரோனா வைரஸ் தொற்றை முறியடித்த பின்னர் இந்தியாவை புனரமைப்பது எப்படி? | date=20 ஏப்ரல் 2020 | accessdate=20 ஏபரல் 2020}}</ref>
 
** [[கொரோனாவைரசு|கரோனா]] ஊரடங்கின்போது கமல் வெளியிட்ட அறிக்கை
* யுத்தங்களிலே ஒருகாலும் நல்ல யுத்தம் என்பதே கிடையாது. அதே போலத் தீமையான அமைதி என்பதும் கிடையாது. - '''ஃபிராங்க்லின்'''
 
* தவறானதைத் திருத்துவதற்கு யுத்தம் சிறிதும் ஏற்ற கருவியாயில்லை; அது நஷ்டங்களுக்கு ஈடு பெறுவதற்குப் பதிலாகப் பல மடங்கு நஷ்டங்களைப் பெருக்குகின்றது. - '''ஜெஃப்பர்ஸன்'''
 
* இராணுவ மயமாக்கும் கொள்கையும், யுத்தமும் குழந்தைத் தனமாக இருக்கின்றன. அதைவிடப் பயங்கரமானவையாகவும் இருக்கின்றன. அவை பழங்கால விஷயங்களாக மறைந்து விட
வேண்டும். - '''எச். ஜி. வெல்ஸ்'''
 
* இரகசியமானாலும் சரி. வெளிப்படையானாலும் சரி. யுத்தம் காட்டுமிராண்டித்தனமான முறையாகும். - '''மகாத்மா காந்தி'''
 
* மாஷினோ அரண்தான் சீக்ஃபிரீட் அரணுக்கு அவசியத்தை உண்டாக்கியது. - '''மகாத்மா காந்தி'''
 
( இரண்டாவது உலகப் போரில் மாஷினோ அரண் பிரான்ஸ் நாட்டின் கீழ் எல்லையில் அமைந்திருந்தது. அதற்குப் போட்டியாக ஜெர்மனி தன் மேல் எல்லையில் சீக்ஃபிரீட் அரணைக் கட்டியது)
 
* பலாத்காரத்தையே நம்பி உபயோகிப்பவன், செக்கு மாட்டினைப் போல, வட்டமாகச் சுற்றிக்கொண்டேயிருப்பான். - '''மகாத்மா காந்தி'''
 
* அச்சமே முதன்மையான தீமையென்று நான் கருதுகிறேன். ஏனெனில், அச்சத்திலிருந்து பூசலும், பலாத்காரமும் தோன்றுகின்றன. பலாத்காரம் பயத்தின் விளைவு அது போலவேதான் பொய்யும். - '''ஜவஹர்லால் நேரு'''
 
* மனிதன் திருந்துவதால் உலக சமாதானம் வரும் என்பதில்லை. ஆனால், புதிய சூழ்நிலைகள், புதிய விஞ்ஞானம். புதிய பொருளாதார அவசியங்கள் ஆகியவை அமைதியை நிலை நாட்டுபவை. - '''அனடோல் ஃபிரான்ஸ்'''
 
* போர் திருடர்களை உண்டாக்குகின்றது. அமைதி அவர்களைத் தூக்கில் ஏற்றுகின்றது. - '''மாக்கிய வில்லி'''
 
* யுத்தங்கள் வரும் பொழுது. அவை பொருளுற்பத்தி செய்யும் பெருவாரியான தொழிலாளர் வகுப்பினர்மீது பாய்கின்றன. அவர்களே துயரத்திற்குள்ளாகின்றனர். - '''யு. எஸ். கிரான்ட்'''
 
* யுத்தம், காட்டுமிராண்டிகளின் தொழில். - '''நெப்போலியன்'''
 
* விளையாட்டுக்கான பொம்மைச் சிப்பாய்களையும் ஒழித்துவிட வேண்டும். குழந்தைகள் வளர்ப்பு நிலையத்திலிருந்து முதலில் ஆயுதங்களை அப்புறப்படுத்துவோம்! - '''டாக்டர் பாலினா லூய்ஸி'''
 
* யுத்த தளவாடங்களைப் பெருக்க வேண்டுமென்று கூறுவோர்களுக்கு இரக்கப்பட்டு, நாம் அவர்களை மன்னிப்போம். ஏனெனில், அவர்கள் தாங்கள் என்ன செய்கிறோம். என்பதை அறியார்கள்: - '''ஆண்ட்ரூ கார்னிஜி'''
 
* மூளையால் வேலை செய்யும் அறிவாளி. சமூகத்தில் செய்ய வேண்டிய வேலை ஏதாவது இருந்தால், அது இதுதான் அவர் பாரபட்சமின்றி, தாமும் உணர்ச்சி வெறி கொள்ளும்படி ஏற்படும் தூண்டுதலை விலக்கிவிட்டு, அமைதியான மனநிலையுடன் இருக்க வேண்டும். போர் நடக்கும் பொழுது, சிக்கனம், பொது சுறுசுறுப்பு. நன்மைக்கு உழைத்தல் போன்ற சாதாரணப் பண்புகள் கூட போரில் அழிவுவேலைகளைப் பெருக்கி, இருகட்சியினரும் ஒருவரையொருவர் வதைத்துக்கொள்ள அதிக ஆற்றலை உண்டாக்கப் பயன்படுத்தப்பெற்றன. - '''பெர்ட்ரான்ட் ரஸ்லல்'''
 
* ஒரே ஒரு நல்ல பண்புதான் உளது. அதுதான் போர் வெறி; ஒரே ஒரு கெட்ட பண்புதான் உளது. அதுதான் சாந்தியை விரும்புதல், இந்த நிலைதான் போருக்குத் தேவையானது. - '''பெர்னாட்ஷா'''
 
* போர்கள், போர்களை வழிக்க முடியாது என்பது எனக்கு இப்பொழுது தெரியும். - '''ஹென்றி.ஃபோர்டு'''
 
* ஐந்து விஷயங்களை எதிர்த்துத்தான் மனிதன் போர் செய்ய வேண்டியது அவசியம்: உடலின் பிணிகளையும், மனத்தின் அறியாமையையும். புலன்களின் உணர்ச்சிகளையும், நகரிலுள்ள அரசாங்கத் துவேஷத்தையும், குடும்பங்களிலுள்ள பிணக்குகளையுமே எதிர்க்க வேண்டியிருக்கின்றது. - '''யாரோ'''
==குறிப்புகள்==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/யுத்தம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது