பிரார்த்தனை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''பிரார்த்தனை''' என்பது ஒர..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது |
(வேறுபாடு ஏதுமில்லை)
|
00:09, 24 அக்டோபர் 2020 இல் நிலவும் திருத்தம்
பிரார்த்தனை என்பது ஒரு வேண்டுகோள் செயலாகும். இது வழிபாட்டு இலக்குடன் தொடர்பு கொண்டு ஒரு பரஸ்பர நம்பிக்கை மற்றும் புரிதலை செயல்படுத்த முற்படுகிறது.
மேற்கோள்கள்
- சில சிந்தனைகளே பிரார்த்தனைகளாகிவிடும். உடல் எந்த நிலையில் இருந்தாலும் ஆன்மா முழங்கால் பணிந்து வணங்கும் நேரமும் உண்டு. - விக்டர் ஹியூகோ
- பிரார்த்தனை என்பது சொற்களை அடுக்குவது அன்று. மனப்பூர்வமானது ஆதரவற்ற நிலையை விளக்குவது அன்று. அதை உணர்வது பேச்சுத்திறன் அன்று. ஆனால், ஆன்மாவின் அந்தரங்க விசுவாசமாகும். - எச மோ
- பிரார்த்தனை என்பதைச் சுருக்கமாக விளக்கினால், அது நமது விருப்பத்தைக் கடவுள் பக்கமாகத் திருப்புவதாகும். பி புருக்ஸ்
- நம்முடைய பிரார்த்தனைகள் பொதுவான ஆசிகளை வேண்டியிருக்க வேண்டும். ஏனெனில், நமக்கு எவை நன்மையானவை என்பதைக் கடவுளே அறிவார். சாக்ரடீஸ்
- நாம் கடவுளிடம் எதை வேண்டிக்கொண்டாலும், நாமும் அதற்காக உழைப்போம். - ஜெரிமி டெய்லர்
- கடவுள் நம்மிடமிருந்து தொலைவில் இருக்கிறார். ஆனால் பிரார்த்தனை. அவரை நம்முடைய பூமிக்குக் கொண்டுவந்து நம் முயற்சிகளோடு இணைத்துவிடுகின்றது. - திருமதி டி. காஸ்பரின்
- சொற்கள் குறைந்துள்ள பிரார்த்தனை மேலானது. - லூதர்
- காலையில் கடவுளைவிட்டு ஓடியவன் அன்று முழுவதும் அவரைக் கண்டுபிடிக்கமாட்டான். - பனியன்
- நம் பிரார்த்தனைகள் காலையும் மாலையும் மேலே எழவேண்டும். நமது நாள்கள் கடவுளில் ஆரம்பித்துக் கடவுளிலே முடியவேண்டும். - சானிங்
- பொறுமைதான் மிக உயர்ந்த பிரார்த்தனை. - புத்தர்
- ஆன்மா பிரார்த்தனை என்ற சிறகைக் கொண்டு வானுலகுக்குப் பறந்து செல்கின்றது. தியானந்தான் நாம் கடவுளைக் காணும் கண். - அம்ப்ரோஸ்
- பிரார்த்தனையில் சொற்களில்லாத இதயம். இதயமில்லாத சொற்களைவிட மேலானது. பனியன்
- உங்களுடைய வேலைகளைத் தொடங்கு முன்னால் அவைகளை வெற்றிகரமாக முடிப்பதற்காக ஆண்டவனைப் பிரார்த்தனை செய்யுங்கள். - ஸெனஃபோன்