ஆசை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 6:
* எந்தப் பொருளின் மீது ஆசை இல்லையோ அவற்றினால் துன்பம் இல்லை. - '''[[ஔவையார்]]'''
* ஆசையின் வேட்கையை அடக்கவும் முடியாது. தீர்த்து வைக்கவும் முடியாது. - '''ஸீஸெரோ'''
* ஆசைகளைக் குறைத்துக்கொள்வதிலேயே அமைதி இருக்கின்றது. அவைகளைத் திருப்தி செய்வதிலன்று-'''.ஹீபர்'''
இருக்கின்றது. அவைகளைத் திருப்தி செய்வதிலன்று-'''.ஹீபர்'''
* ஒரு மனிதனுடைய ஆசைகள் எல்லையற்றவைகளாக இருந்தால், அவனுடைய முயற்சிகளும் எல்லையற்றவைகளாக ஆகிவிடும். - '''பால்கி'''
#* நம்முடைய தற்போதைய நிலைக்குத் தக்கபடி நாம் நம் ஆசைகளைச் சுருக்கிக் கொள்ள வேண்டும். இது வாழ்க்கையின் அவசியமான ஒரு விதியாகும். எதிர்பார்ப்பவைகள் எப்படியிருப்பினும் நம்மிடம் உள்ளவைகளுக்குத் தக்கபடி நாம் வாழ்ந்து வர வேண்டும். -'''அடிஸன்'''
* முறையற்ற ஆசைகள் பூர்த்தியான பிறகு தண்டனைை அனுபவிக்கிறோம். நிறைவேற முடியாத ஆசைகள் தோன்றுபோதே தண்டனையும் வந்துவிடுகின்றது. - '''ஸவிப்ர் ஃயிஸிட்ஸ்'''
* நாம் எவ்வளவு செல்வம் பெற்றிருப்பினும், எவ்வளவு உயர்ந் பதவியிலிருப்பினும், குறைவாகத் தோன்றும் நம் செல்வத்தை நிறைவுபடுத்தப் பெயரில்லாத ஏதோ ஒன்று மேலும் தேவையாகத் தோன்றுகின்றது. -'''ஹொரேவி'''
* ஆசைகளும் உணர்ச்சிகளும் ஒரு கயிற்றின் இரண்டு பிரிகளைப் போல, ஒன்றோடு ஒன்று பின்னிக்கொண்டு இதயத்தைச் சுற்றி இறுக்கமாகப் பிணைந்துகொள்கின்றன நாம் அவைகளை நிதானமாகப் பயன்படுத்திக்கொண்டால் நன்மை விளையும், அளவுக்கு அதிகமானால் அழிவு நிச்சயமாகிவிடும். -'''பர்டன்'''
* ஆசைகளை அறவே அவித்துவிட்டால், மனமும் அவிந்துவிடும். உணர்ச்சிகளே இல்லாத மனிதன் செயலுக்குரிய தூண்டுகோலோ, தத்துவமோ இல்லாமல் போய் விடுவான். - '''ஹெல்விடியா'''
* நம் ஆசைகளை வெட்டிக் குறைத்துக்கொண்டு. நடுநிலையான முறைகளால், சில ஆசைகளை மட்டும் நிறைவேற்றி கொள்ளல் என்பது, செருப்புகள் தேவை என்பதற்காகக்காக, பாதங்களையே வெட்டிவிடுவது போலாகும். -'''ஸ்விஃப்'''
* அவசியம் என்பது முடிவடையும் பொழுது. ஆசையும் மேலும் அறியவேண்டுமென்ற துடிப்பும் தொடங்குகின்றன. இயற்கையின் தேவையை அனுசரித்து நமக்கு வேண்டியன யாவும் கிடைத்துவிட்ட பிறகு, என்னென்ன வேண்டும் என்ற செயற்கையாக ஆசைகளை வளர்த்துக் கொள்கிறோம். -'''ஜான்ஸ்'''
 
== பழமொழிகள் ==
=== தமிழ் பழமொழிகள் ===
"https://ta.wikiquote.org/wiki/ஆசை" இலிருந்து மீள்விக்கப்பட்டது