அறம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 42:
* நன்றாய் எழுதப்பட்ட ஜீவிய சரிதம் நன்றாய் வாழப்பட்ட ஜீவியத்தைப் போலவே அரியதாகும். '''-[[தாமஸ் கார்லைல்]] '''<ref name=அறம்/>
* மனிதனைப் பூரணமாக்க வேண்டிய குணங்கள் எவை? கலங்காத அறிவு, அன்பு நிறைந்த நெஞ்சு, நீதியான தீர்மானம், ஆரோக்கிய உடல், கலங்காத அறிவு இல்லாவிடில் அவசரமாய் முடிவு செய்துவிடுவோம். அன்பு நிறைந்த நெஞ்சு இல்லாவிடில் சுயநலமுள்ளவராயிருப்போம். நல்லெண்ணம் இருப்பினும் நீதியான தீர்மானம் இல்லாவிடில் நன்மை உண்டாவதினும் தீமையே உண்டாகும். உடற்சுகம் இல்லாவிடில் ஒன்றும் செய்யமுடியாது. '''-ஆவ்பரி '''<ref name=அறம்/>
* ஆன்மாவில் உலகின் கறை படியாமல் உனது நற்குணத்தால் தூய்மையாக வைத்துக்கொள்ளவும். -'''பெய்லி'''
* ஆரோக்கியமில்லாமல் நீ சுகமாக வாழ முடியுமானால் ஒழுக்கமில்லாமல் இன்பமாக வாழவும் முடியும். -'''பார்'''
* நல்லொழுக்கம் மட்டுமே புயலுக்கு அசையாமல், உறுதியாய் நிற்கும் என்பது இறைவனின் சட்டம். - '''பிதாகோரஸ்'''
* நல்லொழுக்கம் என்பது போர்நிலை, அதில் வசிப்பதற்கு நா நம்மையே எதிர்த்துப் போராடிக்கொண்டேயிருக்க வேண்டும். - '''ரூஸோ'''
* அறம் எனப்படுவது நாம் நமக்கும். நம்முடன் வாழும் மக்களுக்கும், இறைவனுக்கும். அவர்களுடன் கொண்டுள்ள உறவுகளுக்குத் தக்கபடி நம் கடமையைச் செய்வதாகும், அக்கடமை நமது பகுத்தறிவாலும் இறைவனுடைய வெளிப் பாடுகளாலும், இறைவனாலும் நமக்கு அறிவுறுத்தப் படுகின்றன. -'''ஏ. அலெக்சாண்டர்'''
* ஒரு மனிதனுடைய பண்பை அவனுடைய அசாதாரண முயற்சிகளைக்கொண்டு அளவிட வேண்டாம். அவனுடைய தினசரி நடத்தையைக்கொண்டே பார்க்க வேண்டும். - '''பாஸ்கள்'''
* எல்லோரும் தர்மத்திற்குத் தலை வணங்குவார்கள். ஆனால் பிறகு விலகிப் போய்விடுவார்கள். -'''டிஃபினோட்''''
*நல்லவன் நிச்சயமாக மேலும் நல்லவனாவான். தீயவன் அவ்வாறே மேலும் தீயவனாவான்; ஏனெனில், பண்பு. தீமை காலம் ஆகிய மூன்றும் ஒரு பொழுதும் அமைதியா நிற்பதில்லை. -'''கோல்ட்டன்'''
* எந்த மனிதனும் அறவினையைச் செய்ய விரும்பும் போதுதான் அவன் விருப்பப்படி செய்யலாம், மற்ற விஷயங்களில் அவனுடைய இஸ்டிடப்படி நடக்க உரிமை கிடையாது. - '''ஸி. சிம்மன்ஸ்'''
* நன்மை என்பது செயலில் காணும் அன்பு. - '''ஜே. ஹாமில்டன்'''
* ஏதாவது ஒரு கொள்கைக்காக வாழுங்கள். நன்மையைச் செய்யுங்கள்: காலத்தின் புயல்கள் அழிக்க முடியாத நினைவுச் சின்னங்களை உங்களுக்குப் பின்னால் விட்டுச் செல்லுங்கள். - '''சால்மர்ஸ்'''
* உன் செயல்கள் மாய்ந்து ஒழிந்து போவதில்லை. நல்ல செயல் எதுவும் நித்தியமான வாழ்வுக்குரிய விதையாகும். - '''பெர்னார்டு'''
* மனிதர்களுக்கு நன்மையைச் செய்வதில் மனிதர்கள் அநேகமாகத் தெய்வங்களுக்கு நிகராக ஆகின்றனர். வேறு எதிலும் இப்படி ஆக முடியாது. - '''ஸிஸெரோ'''
* பணக்காரனாயிருந்து தர்மம் செய்யாதவன் அயோக்கியன், அவன் மூடன் என்பதையும் எளிதில் நிரூபித்துவிடலாம். - '''ஃபீல்டிங்'''
* நாம் சேர்த்து வைக்கும் உண்மையான சொத்துகள் நம்முடைய தர்மங்கள்தாம். நாம் எவ்வளவு கொடுக்கிறோமோ அந்த
அளவுக்கே ஆதாயம் பெறுகிறோம். - '''ஸிம்ஸ்'''
* நல்ல செயல் ஒவ்வொன்றும் தர்மமாகும். உன் சகோதரனைக் கண்டால் புன்னகை செய்தல் தர்மம்; உன்னுடன் வாழ்பவன் ஒருவனை நற்செயல்கள் புரியும்படி தூண்டுதல் தானம் செய்வதற்கு ஈடாகும் வழிதவறியவனை நீ வழியில் கொண்டு சேர்த்தல் தர்மம். குருடர்களுக்கு நீ செய்யும் உதவி தர்மம், சாலையில் கிடக்கும் கற்களையும், முட்களையும் நீ நீக்குதல் தர்மம். தாகமுள்ளவருக்குத் தண்ணீர் அளித்தல் தர்மம். மறுமையில் ஒரு மனிதனுக்கு உண்மையான செல்வம், இவ்வுலகில் அவன் தன் சகோதர மனிதனுக்குச் செய்யும் நன்மைதான். அவன் இறந்த பிறகு அவன் என்ன சொத்து வைத்துவிட்டுப் போயிருக்கிறான்? என்று மக்கள்
 
== குறிப்புகள் ==
"https://ta.wikiquote.org/wiki/அறம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது