அரசியல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 30:
* இரசாயன நிபுணனாயிருக்க வேண்டுமானால் நீ இரசாயன சாத்திரத்தைக் கற்க வேண்டும், வக்கீலாயிருக்கச் சட்டம் பயிலவேண்டும் வைத்தியனாயிருக்க மருத்துவம் பயில வேண்டும். ஆனால், அரசியல்வாதியாவதற்கு, உனக்குத் தேவையான நலன்களை மட்டும் அறிந்துகொண்டால் போதும். - '''மாக்ஸ் ஓ'ரெல்'''
* பாவத்தை நான் வெறுப்பது போலவே, குளறுபடி செய்வதை, அதிலும் அரசியலில் குளறுபடி செய்வதையும் நான் வெறுக்கிறேன். அந்தத் தவற்றினால் ஆயிரக்கணக்கான, இலட்சக்கணக்கான மக்களுக்குத் துயரமும் அழிவும் ஏற்படு கின்றன. - '''கதே'''
* அரசாங்க விஷயத்தில் தனிமனிதர் தலையிடக்கூடாது என்று யாரோ சொல்லியிருக்கின்றனர். துணிந்து கூறப்பட்டிருப்பினும், இது ஒழுங்கீனமானது. இதை ஒரு கொடுங்கோலனோ, அடிமையோதான் சொல்லியிருக்க முடியும். தனிமனிதர் அரசாங்க விஷயத்தில் தலையிடக்கூடாது என்று சொல்வது. அவர்கள் தங்கள் சொந்த நன்மை தீமைகளில் தலையிடக் கூடாது என்றும், தாங்கள் நிர்வாணமாயிருக்க வேண்டுமா அல்லது உடைகள் கிடைக்குமா என்றும், தங்களுக்கு உணவு கிடைக்குமா அல்லது பட்டினியாய்க் கிடக்கவேண்டுமா என்றும். தங்களை ஏமாற்றுகிறார்களா அல்லது உண்மையான விஷயங்களைத் தெரிவிக்கிறார்களா என்றும், தங்களுக்குப் பாதுகாப்பு உண்டா அல்லது தாங்கள் அழியவேண்டியதுஅழியவேண்டியதுதானா என்றும் அவர்கள் கவனிக்கக்கூடாது என்றும் கூறுவதாகும். -'''கேட்டோ'''
* உண்மையான அரசியல் பிரச்சினைகளைக் கட்சித் தலைவர்கள் உற்பத்தி செய்ய முடியாது. அவைகளை ஒதுக்கவும் முடியாது. அவை லெளிப்பட்டே தீரும். பொது ஜன அபிப்பிராயம் என்ற ஆழ்ந்த கடலிலிருந்து அவை மேலெழுந்து வருகின்றன. -'''கார்ஃபீல்டு'''
* அரசியல்வாதி அடுத்த தேர்தலையே எண்ணுகிறான் அtசியல் நிபுணன் அடுத்த தலைமுறையையே எண்ணுகிறான் அரசியல்வாதி தன் கட்சியின் நன்மையை நாடுகிறான் அரசியல் நிபுணன் தன் நாட்டின் நன்மையை நாடுகிறான் அரசியல் நிபுணன் கப்பலை ஓட்ட விரும்புகிறான்; அரசியல்வாதி கப்பல் தானாக எங்கு வேண்டுமானாலும் செல்லட்டும் என்று திருப்தியுடன் இருக்கிறான். '''ஜே. எப். கிளார்க்'''
 
== குறிப்புகள் ==
"https://ta.wikiquote.org/wiki/அரசியல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது