அதிகாரத்துவம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 3:
* அதிகாரத்தை வைத்திருப்பவர்களைக் கட்டாயப்படுத்தாவிட்டால் அவர்கள் ஒருபோதும் அதிகாரத்தை விட்டுக்கொடுக்க மாட்டார்கள். - '''[[ஜவகர்லால் நேரு]]'''<ref name=இளைஞர் கடமை/>
 
* சட்டம், ஒழுங்கு என்பது பிற்போக்குவாதியின், கொடுங்கோல் அரசனின், அதிகாரத்தை வைத்துக்கொண்டு அதை விட்டுக்கோடுக்க மறுப்பனின் கடைசி புகலிடம்; சுதந்திரம் கிடைக்கும்வரை சட்டமும் ஒழுங்கும் இருக்க முடியாது. '''ஜவகர்லால் நேரு'''
** (1928 திசம்பர் 12ஆம் நாள் பூனாவில் நடைபெற்ற பம்பாய் மாகாண இளைஞர் மாநாட்டுத் தலைமை உரையிலிருந்து.)<ref name=இளைஞர் கடமை>{{cite book | title=ஜவகர்லால் நேரு போராட்டகாலச் சிந்தனைகள் | publisher=நேஷனல் புக்டிரஸ்ட், இந்தியா, | author=அர்ஜுன் தேவ், தமிழில் நா. தர்மராஜன், | authorlink=இளைஞர் கடமை | year=2010 | location=புதுதில்லி | pages=83-91 | isbn=ISBN 978-81-237-3332-6}}</ref>
 
* மனிதன், ஆணவமுள்ள மனிதன்! சொற்ப அதிகாரத்தை அணிந்துகொண்டு. அவன் இறைவனின் முன்னிலையில், கற்பனைக்கு அடங்காத தந்திரங்களை யெல்லாம் செய்கிறான். அதைக் கண்டு தேவர்களும் கண்ணீர் வடிக்கின்றனர். - [[வில்லியம் ஷேக்ஸ்பியர்]]
 
* அதிகாரத்தில் நிலையாக அமர்ந்துள்ள ஒருவன். முன்னேற்றத்தைவிட அதை நிலைநிறுத்திக்கொள்வதே தலைசிறந்த இராஜதந்திரம் என்று தெரிந்துகொள்கிறான். - '''லோவெல்'''
 
* அதிகாரத்தை அடிக்கடி பயன்படுத்துவதும், ஆராயாமல் உபயோகிப்பதும் அதிகாரத்திற்கே குழி தோண்டுவதாகும். இடைவிடாமல் இடி இடித்து வந்தால், ஏதோ ஓர் ஆலையின் ஓசையைப்போல், அதிலே பயம் தெளிந்துவிடும்.
 
* அரசன் ஓர் அதிகாரத்தைப் படைத்தால், அதை விலை கொடுத்து வாங்க இறைவன் உடனே ஒரு மூடனைப் படைக்கிறான். -கோல்டெர்ட்
 
* சுதந்தரமான நம் ஜனங்களோ இந்த அரசாங்கமோ எப்பொழுதாவது ஒழுக்கத்தில் நிலைகுலைந்தால். அதற்குக் காரணம், பதவிக்காக இடைவிடாமல் நடக்கும் போட்டியும் போராட்டமுமேயாகும். பதவி என்பது வேலை செய்யாமலே வாழ்க்கையை நடத்துவதாகும். - [[ஆபிரகாம் லிங்கன்]]
 
* உயர்ந்த உத்தியோகம் ஒரு கோபுரம் போன்றது. இரண்டு வகையான ஜந்துக்களே அதன் உச்சியை அடைய முடியும். அவை பாம்புகளும் கழுகுகளுமேயாம். - டி. அலெம்பர்ட்
 
* புனிதமற்ற மனிதர்கள் அதிகாரம் செலுத்தும்பொழுது கெளரவமான பதவி தனி உடைமையாகிவிடுகின்றது.
- [[வில்லியம் ஷேக்ஸ்பியர்]]
 
== அதிகாரத்துவம் குறித்த பழமொழிகள் ==
 
* முறைமைக்கு மூப்பு இளமையில். - பழமொழி
 
* உடைப்பெரும் செல்வத்து உயர்ந்த பெருமை அடக்கமில் உள்ளத்த னாகி - நடக்கையின்
ஒள்ளியன் அல்லான்மேல் வைத்தல் குரங்கின்கைக் கொள்ளி கொடுத்து விடல். * பழமொழி
== குறிப்புகள் ==
[[பகுப்பு:சட்டமும் அரசாங்கமும்]]
"https://ta.wikiquote.org/wiki/அதிகாரத்துவம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது