அச்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 14:
* தீமையிலிருந்து நம்மைக் காக்கவே நம்முன் அச்சம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அது அறிவுக்கு உதவியாயிருக்க வேண்டுமேயன்றி, அதை அடக்கிவிடக் கூடாது. கற்பனையான பயங்கரங்களைத் தோற்றுவிக்கவோ, வாழ்க்கைப் பாதையில் எண்ணற்ற கஷ்டங்களை உண்டாக் கவோ அதை அனுமதிக்கக்கூடாது. - '''ஜான்ஸன்'''<ref name=அசீரணம்/>
 
* நாம் வெறுக்கின்ற விஷயங்களைக் கண்டு அஞ்சுவதாகப் பாவனை செய்கிறோம். உண்மையில் நாம் அஞ்சுபவைகளை வெறுப்பதற்காகவும் பாவனை செய்கிறோம். - '''கோல்டன்'''<ref name=அச்சம்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%AA%E0%AE%95%E0%AF%8D%E0%AE%95%E0%AE%AE%E0%AF%8D:%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D_%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%A8%E0%AF%8D%E0%AE%A4%E0%AE%A9%E0%AF%88%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%B3%E0%AE%9E%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D.pdf/11| title=உலக அறிஞர் சிந்தனைக் களஞ்சியம் | publisher=நாதன் பதிப்பகம் | work=நூல் | date=2004 | accessdate=14 ஏப்ரல் 2020 | author=ப. ராமசாமி | pages=11-12}}</ref>
 
* நன்றியைக்காட்டிலும் கடமையைச் செய்ய அச்சமே தூண்டுகின்றது. ஒழுக்கத்தை விரும்பியோ, எல்லாப் பொருள்களையும் அளித்துள்ள ஈசனுக்கு நன்றி செலுத்தவோ நேர்மையாக நடப்பவன் ஒருவன் என்றால், தண்டனைக்கு அஞ்சி நேர்மையாக நடப்பவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். -'''கோல்டுஸ்மித்'''<ref name=அச்சம்/>
வரிசை 34:
* பயத்தை வெளிக்காட்டினால் அபாயத்தை எதிர்கொண்டு அழைப்பதாகும். -'''செஸ்டர்ஃபீல்டு'''<ref name=அச்சம்/>
 
* கவலையோ, பயமோ இல்லாமல் வாழ்க்கையை நடத்துவதில் மிகுந்த அழகு இருக்கின்றது. நம்முடைய அச்சங்களில் பாதி ஆதாரமற்றவை மறுபாதி நம்பத்தகாதவை. - '''போவீ'''<ref name=அச்சம்/>
 
* ஒருவன் எந்த மனிதனுக்கு அஞ்சுகிறானோ அவனை நேசிப்பதில்லை. - '''அரிஸ்டாட்டல்'''<ref name=அச்சம்/>
 
* ஒழுக்கத்தில், எது அச்சத்தில் தொடங்குகின்றதோ, அது அயோக்கியதையில் முடிகின்றது: மதத்தில், அச்சத்தில் தொடங்குவது வழக்கமாக வெறியிலே போய் முடிகின்றது. அச்சத்தை ஒரு தத்துவமாகவோ, தூண்டுதலாகவோ கொண்டால், அதுவே எல்லாத் தீமைகளுக்கும் ஆரம்பமாகும். - '''திருமதி. ஜேம்ஸன்'''<ref name=அச்சம்/>
 
* ஒருவன் கொண்டுள்ள நன்னம்பிக்கை காரணமாக ஏற்படும் அச்சம் நேர்மையானது; ஐயத்தினாலும் அவநம்பிக்கையினாலும் ஏற்படும் அச்சம் தீமையானது. முதலாவது அச்சம் கடவுளை நம்பி நன்மையைப் பெறலாம் என்ற நம்பிக்கையளிப்பது. பிந்திய அச்சம் கடவுளிடம் நம்பிக்கையில்லாத ஏக்கத்தை உண்டாக்குவது முதல் கூட்டத்தார் இறைவனை, இழந்துவிடக்கூடாதே என்று அஞ்சுகின்றனர். இரண்டாவது கூட்டத்தார் இறைவனைக் கண்டுகொள்ளக்கூடாதே என்று அஞ்சுகின்றனர். - '''பாஸ்கல்'''
 
* தீயவை தீய பயத்தலால் தீயவை<br>தீயினும் அஞ்சப் படும். - '''[[திருவள்ளுவர்]]''' <ref name=அச்சம்/>
 
* அஞ்சுவது அஞ்சாமை பேதைமை அஞ்சுவது<br>அஞ்சல் அறிவார் தொழில். - '''[[திருவள்ளுவர்]]'''<ref name=அச்சம்/>
== மேற்கோள்கள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/அச்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது