அச்சம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி வி. ப. மூலம் பகுப்பு:உணர்வுகள் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 13:
 
* தீமையிலிருந்து நம்மைக் காக்கவே நம்முன் அச்சம் அமைக்கப்பட்டிருக்கிறது. ஆனால், அது அறிவுக்கு உதவியாயிருக்க வேண்டுமேயன்றி, அதை அடக்கிவிடக் கூடாது. கற்பனையான பயங்கரங்களைத் தோற்றுவிக்கவோ, வாழ்க்கைப் பாதையில் எண்ணற்ற கஷ்டங்களை உண்டாக் கவோ அதை அனுமதிக்கக்கூடாது. - '''ஜான்ஸன்'''<ref name=அசீரணம்/>
 
* நாம் வெறுக்கின்ற விஷயங்களைக் கண்டு அஞ்சுவதாகப் பாவனை செய்கிறோம். உண்மையில் நாம் அஞ்சுபவைகளை வெறுப்பதற்காகவும் பாவனை செய்கிறோம். - '''கோல்டன்'''
 
* நன்றியைக்காட்டிலும் கடமையைச் செய்ய அச்சமே தூண்டுகின்றது. ஒழுக்கத்தை விரும்பியோ, எல்லாப் பொருள்களையும் அளித்துள்ள ஈசனுக்கு நன்றி செலுத்தவோ நேர்மையாக நடப்பவன் ஒருவன் என்றால், தண்டனைக்கு அஞ்சி நேர்மையாக நடப்பவர்கள் ஆயிரக்கணக்கில் இருக்கிறார்கள். -'''கோல்டுஸ்மித்'''
 
* நாம் அடிக்கடி அஞ்சுவதையே சில சமயங்களில் வெறுக்கிறோம். - [[வில்லியம் ஷேக்ஸ்பியர்|ஷேக்ஸ்பியர்]]
 
* குற்றத்தையும். இருள் நிறைந்த செயல்களையும் தொடர்ந்து அச்சம் வரும்: நேர்மையான உள்ளத்திற்கு அச்ச்மே தெரியாது. - '''ஹாவர்டு'''
 
* அச்சமே. வருவதை அறிவுறுத்தும் தாய். - '''டெய்லர்'''
 
* உண்மை வீரத்திற்கு மரணத்தினால் வரும் வேதனையைவிட கோழைத்தனத்திற்கு அச்சத்தால் அதிக வேதனை ஏற்படுகின்றது. -'''சர். பி. ஸிட்னி'''
 
* ஆதாரமில்லாமல் தோன்றும் பயங்கரங்களையெல்லாம் விரட்டிவிட்டால், மனித சமூகம் அதிக இன்பமடையும்.
- '''ஜான்ஸன்'''
 
* நல்ல மனிதர்களுக்கு அச்சங்கள் குறைவு. - '''போவி'''
 
* தன்னை எதிரி வென்றுவிடுவானோ என்று அஞ்சுபவன் நிச்சயமாய்த் தோல்வியுறுவான். - [[நெப்போலியன் பொனபார்ட்|நெப்போலியன்]]
 
* பயத்தை வெளிக்காட்டினால் அபாயத்தை எதிர்கொண்டு அழைப்பதாகும். -'''செஸ்டர்ஃபீல்டு'''
 
== மேற்கோள்கள் ==
"https://ta.wikiquote.org/wiki/அச்சம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது