சிவாஜி (பேரரசர்): திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

மராத்தியப் பேரரசைத் தோற்றுவித்தவர் (ஆட்சி. 1674-1680)
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"பொதுவாக '''சத்திரபதி சிவா..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
(வேறுபாடு ஏதுமில்லை)

07:47, 22 பெப்பிரவரி 2020 இல் நிலவும் திருத்தம்

பொதுவாக சத்திரபதி சிவாஜி மகாராஜ் என்று அறியப்படும் சிவாஜி ராஜே போன்சலே (பிப்ரவரி 19, 1627 - ஏப்ரல் 3, 1680) மராட்டியப் பேரரசுக்கு அடித்தளம் அமைத்தவராவார். போன்சலே மராத்திய குலத்தவரான சாகாஜிபோன்ஸ்லே மற்றும் ஜிஜாபாய் ஆகியோருக்குப் பிறந்த இரண்டு புதல்வர்களில், சிவாஜி இளைய மகனாவார். தக்காண சுல்தான்கள் மற்றும் தில்லி மொகலாயர்களுக்கு எதிராக பல்வேறு காலங்களில் இராணுவ சேவைகளை அளித்த அவர் தந்தை சாகாஜி, ஒரு மராட்டிய தளபதியாக விளங்கியவர்.

மேற்கோள்கள்

இவர்பற்றி பிறர் கூறியவை

  • சிவாஜி ஒரு சமயத்தில் ஒரு முகம்மதிய அரசரைத் தோற் கடித்தபோது, ஒரு இளம்பெண் கைதியாகப் பிடித்துக் கொண்டு வரப்பட்டாள். அப்போது அருகிலிருந்தவர்கள் அந்தப் பெண்ணைக் கல்யாணம் செய்து கொள்ளும்படி சிவாஜியிடம் கூறினர். அவரோ அவ்விதம் செய்வது ஒரு வீரனுக்கு அழகல்ல, ஆகவே, அவளை அவளது பெற்றேரிடம் கொண்டுபோய் ஒப்புவித்து விடுங்கள் என்றாராம். அவர் பிற பெண்களைத் தம் தாயைப்போல் பாவித்தவர். இந்த உத்தம எண்ணம் நம் ஒவ்வொருவரிடமும் ஏற்பட வேண்டும். —சர். ஏ. ராமசாமி முதலியார் (3-5-1927) (சென்னையில், சிவாஜி 300-வது வருடக் கொண்டாட்ட விழாவில்)

சான்றுகள்

"https://ta.wikiquote.org/w/index.php?title=சிவாஜி_(பேரரசர்)&oldid=17818" இலிருந்து மீள்விக்கப்பட்டது