"தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

711 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  16 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
* அடிமேல் அடியடித்தால் அம்மியும் நகரும்.
* அடியாத மாடு படியாது.
* அடியைப் போல அண்ணன் தம்பி உதவாது.
* அரசன் அன்று கொல்வான் தெய்வம் நின்று கொல்லும்.
* அழுகிற பிள்ளைதான் பால் குடிக்கும்.
* ஆசை அறுபது நாள் மோகம் முப்பது நாள்.
* ஆடத் தெரியாதவள் மேடை பிழையென்றாளாம்.
* ஆடிக் காற்றுக்கு அம்மியும் பறக்கும்.
* ஆடுற மாட்டை ஆடிக் கற, பாடுற மாட்டைப் பாடிக் கற.
* ஆத்திரக்காரனுக்குப் புத்தி மட்டு.
* கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.
* கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
* கல்லானாலும் கணவன் புல்லானாலும் புருஷன்.
* கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.
* கழுதை அறியுமா கற்பூர வாசனை?
* காய்த்த மரம்தான் கல்லடிபடும்.
* காவோலை விழக் குருத்தோலை சிரிப்பது போல்.
* காற்றுள்ளபோதே தூற்றிக்கொள்.
* கிணற்றுத் தவளைக்கு நாட்டு வளப்பமேன்?
* குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.
* குரைக்கிற நாய் கடிக்காது.
* கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.
* கோழி மிதித்துக் குஞ்சு சாகாது.
* கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.
* கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவது போல்.
* பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.
* புதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெழுப்பான்.
* புலி பசித்தாலும் புல்லுத் தின்னாது.
* பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.
* போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
* யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
* விடிய விடிய ராமாயணம் விடிந்த பிறகு சீதைக்கு ராமன் என்ன முறை.
* விரலுக்குத் தக்கதே வீக்கம்.
* விளையும் பயிரை முளையிலே தெரியும்.
* வெளுத்ததெல்லாம் பாலல்ல.
* வைக்கோற் போர் நாய் போல.
30

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/17" இருந்து மீள்விக்கப்பட்டது