நூல்கள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
சி Arularasan. G பக்கம் நூல் என்பதை நூல்கள் என்பதற்கு நகர்த்தினார்
No edit summary
வரிசை 1:
'''நூல்நூல்கள்''' அல்லது '''புத்தகம்''' (''book'') என்பது எண்ணப் பதிவாகிய கருத்துகளை எழுத்து உருவில் காட்டும் ஒரு கருவி. இக்காலத்தில் அச்சிட்ட புத்தகங்களை உணர்த்த இச்சொல் பயன்படுத்தப்படுகிறது. காகிதம் உருவாக்கப்படுவதற்கு முன்னர் நூல் பனையோலையில் எழுதப்பட்ட பதிவாக இருந்தது. எழுதப்பட்ட பனையோலைகளைப் துளையிட்டு நூல்கயிற்றில் கோத்து வைத்தனர். பொத்துக் கோத்து வைத்த சுவடிகளைப் பொத்தகம் என்றனர். நாளடைவில் பொத்தகம் என்னும் சொல் புத்தகம் என மருவி வழங்கப்படுகிறது.
 
== மேற்கோள்கள் ==
 
* ஒரு பொழுது கூடத் திறக்காவிடினும் சரி, ஒரு மொழிகூடப் படிக்காவிடினும் சரி, நூல்களைப் போல வீட்டை அலங்கரிக்கும் அழகான பொருள்கள் வேறு கிடையா. -'''ஸிட்னி ஸ்மித்'''<ref name=நூல்கள்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%B5%E0%AF%81%E0%AE%95%E0%AF%8D_%E0%AE%95%E0%AE%A9%E0%AE%BF%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%A8%E0%AF%82%E0%AE%B2%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D| title=அறிவுக் கனிகள்/கவிதை
| publisher=காந்தி நிலையம் | work=நூல்கள் | date=1959 | accessdate=13 மே 2019 | author=பொ. திருகூடசுந்தரம் | pages=163-168}}</ref>
 
* நூலை உண்டாக்கியவருடைய ஆன்மாவைப் போலவே நூலும் உயிராற்றல் உடையதாகும். -'''மில்டன்'''<ref name=நூல்கள்/>
 
* நல்ல புஸ்தகமே தலை சிறந்த நண்பன் இன்று போலவே என்றும். -'''மார்டின் டப்பர்'''<ref name=நூல்கள்/>
 
* உண்மையிலேயே நல்ல நூல்கள் காட்டில் மலரும் பூக்களைப்போல இயற்கையானதும், எதிர்பாராத அழகானதும், காரணம் கூற முடியாத பூரணமானதுமான வஸ்துக்கள் ஆகும். -'''தோரோ'''<ref name=நூல்கள்/>
 
* தன் பெயரை அச்சில் காண்பது சகலர்க்கும் சந்தோஷமே! புஸ்தகத்தில் விஷயம் ஒன்றுமில்லாவிடினும் புஸ்தகத்தைப் புஸ்தகமில்லை என்று யார் கூறுவர்! -'''பைரன்'''<ref name=நூல்கள்/>
 
*வாசிக்கத் தகுந்த நூல் வாங்கவும் தகுந்ததே. -'''ரஸ்கின்'''<ref name=நூல்கள்/>
 
* மருந்தைப் போலவே நூல்களையும் விஷயமறிந்தோர் யோசனை கேட்டு உபயோகிக்க வேண்டுமேயன்றி விளம்பரத்தைப் பார்த்தன்று. -'''ஸ்கிரன்'''<ref name=நூல்கள்/>
* எந்தச் சந்தர்ப்பத்திலும் உதவியாயும், எப்பொழுதும் இன்பம் தருவதாயும், இன்னல்களுக்கு ஒரு கேடயமாயும் உள்ள ஒரு சுவையை வேண்டிப் பிரார்த்திப்பதானால்—“நூல் கற்கும் சுவை” யையே வேண்டுவேன். இந்தச் சுவையும் அதை அனுபவிப்பதற்கு வேண்டிய சாதனங்களும் பெற்றுவிட்டால் ஆனந்தத்திற்கு ஒரு நாளும் குறை வராது. -'''ஹெர்ஷல்'''<ref name=நூல்கள்/>
 
* இக்காலத்தும் அற்புதங்கள் நிகழ்வதில்லையோ? நூல்கள் மக்கள் மனத்தை வயப்படுத்துகின்றனவே. -'''கார்லைல்'''<ref name=நூல்கள்/>
 
* என்னையா ஏழை என்று கூறுகிறாய்? என்னிடமுள்ள நூல்கள் இராஜ்யத்திலும் உயர்ந்தன அல்லவோ? _'''[[வில்லியம் ஷேக்ஸ்பியர்|ஷேக்ஸ்பியர்]]'''<ref name=நூல்கள்/>
 
* தான் படிக்கக்கூடிய அளவு நூல்களை வாங்க முடியாதவன் தரித்திரம் மிஞ்சியவனாகவே இருக்க வேண்டும். -'''ஆவ்பரி'''<ref name=நூல்கள்/>

* இதயத்திலிருந்து உதிக்கும் நூலே இதர இதயங்களையும் கவர வல்லது. அது முடியுமானால் வேறு கலைத்திறமை எதுவும் அவசியமில்லை. _'''கார்லைல்'''<ref name=நூல்கள்/>
 
* ஒருமுறை படிக்கத் தகுந்த அநேக நூல்கள் இருமுறை படிக்கத் தகுந்தவைகளாகவும் இருக்கும். -'''மார்லி'''<ref name=நூல்கள்/>
 
* தீமையோடு நம்மைப் பழக்கப்படுத்தும் நூல்கள் எல்லாம் தீயவைகளே. -'''ஆவ்பரி'''<ref name=நூல்கள்/>
 
* சாத்தானுடைய நட்பைத் தரும் நூல்களைப் படிக்காதிருப்பது சாலவும் நன்று. -'''நீபூர்'''<ref name=நூல்கள்/>
 
* நண்பரைப் போலவே நூல்களும் தேர்ந்தெடுத்த சிலவே தேவை. -'''ஜயினரியான'''<ref name=நூல்கள்/>
 
* சாதாரணமாக நூல்கள் என்பன நம்முடைய தவறுகளுக்குப் பெயரிடுவதைத் தவிர வேறொன்றும் செய்வதில்லை. -'''கதே'''<ref name=நூல்கள்/>
 
* புஸ்தகங்கள் எவ்வளவு நல்லவையாயினும் எப்பொழுதுமே சந்தோஷம் தந்து கொண்டிரா. அறிவு எப்பொழுதும் ஆகாரத்தில் தேடக் கூடியதாக இருப்பதில்லை. -'''க்ராப்'''<ref name=நூல்கள்/>
 
* சில நூல்களைச் சுவைத்தால் போதும், சில நூல்கள் விழுங்கவும் வேண்டும். ஆனால், வெகு சில நூல்களே மென்று ஜீரணிக்கத் தகுந்தவை. -'''பேக்கன்'''<ref name=நூல்கள்/>
 
* அறிஞனாகவும் சான்றோனாகவும் செய்வது பல நூல்களைப் படிப்பதன்று, சில நூல்களை முறையாகக் கற்பதே யாகும். -'''பாக்ஸ்டர்'''<ref name=நூல்கள்/>
 
* மனிதனைக் கொல்பவன் அறிவுள்ள பிராணியை—ஆண்டவன் பிம்பத்தைக் கொல்கிறான். ஆனால் புஸ்தகத்தைக் கொல்பவனோ அறிவை—ஆண்டவன் பிம்பத்தின் கண்ணைக் குத்திக் கொல்பவனாகிறான். -'''மில்டன்'''<ref name=நூல்கள்/>
 
* அவன் சாமர்த்தியசாலியாக இருக்கலாம் ஆனால் நான் அறிந்தமட்டில் அவன் மூளை வேலை செய்ய முடியாத அளவு அநேக புஸ்தகங்களைத் தலையில் ஏற்றிவிட்டான். -'''ராபர்ட் ஹால்'''<ref name=நூல்கள்/>
 
* என் மனத்துக்குகந்த நூல்களை மட்டும் கொடுத்து என்னை என் வாழ்வு முழுவதும் சிறையிட்டாலும் நான் கஷ்டப்படமாட்டேன். -'''மாஜினி'''<ref name=நூல்கள்/>
 
* சான்றோர்களுடைய நூல்களுடனேயே பழகு, சால்பின்றி சாமர்த்தியம் மட்டும் உடையவர்களுடைய நூல்களைக் கையால் தொடக்கூடச் செய்யாதே. -'''மெல்வில்'''<ref name=நூல்கள்/>

* ஆண்டவனுக்கு வந்தனம் உணவு உண்ணுமுன் கூறுவதினும், புது நூலொன்று வெளிவந்ததும் கூறுவதே பொருந்தும். -'''லாம்'''<ref name=நூல்கள்/>
 
* படிப்பில் பிரியமில்லாத அரசனா யிருப்பதைவிட ஏராளமான நூல்களுடைய ஏழையாயிருப்பதையே விரும்புவேன். -'''மக்காலே'''<ref name=நூல்கள்/>
== குறிப்புகள் ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/நூல்கள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது