செய்ந்நன்றி: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 6:
* ஆண்டவனுக்கு இரண்டு உறைவிடங்கள் உண்டு. ஒன்று சொர்க்கம்; மற்றொன்று நன்றியுள்ள மனிதனின் இதயம். - [[ஐசக் வால்டன்]]
* நன்றி செய்தாயா - அதைப் பற்றி பேசற்க; நன்றி பெற்றாயா - அதைப் பற்றி பேசுக. - [[செனேகா]]
நன்றியறிதல்
 
* நன்மை செய்தவர்க்கு நன்மை செய்யாதிருப்பது மனித குணத்திற்கு விரோதம். நன்மை செய்தவர்க்குத் தீமை செய்வது பேய்க் குணமாகும். -'''ஸெனீக்கா'''
* செய்நன்றி செலுத்த அதிகமாய் ஆத்திரப்படுவதும் செய்நன்றியைக் கொலை செய்வதில் ஒருவகையாகும். -'''ரோஷிவக்கல்டு'''
* நன்றி செய்தாயா-அதைப்பற்றிப் பேசற்க. நன்றி பெற்றாயா- அதைப்பற்றிப் பேசுக. -'''ஸெனீக்கா'''
* பெற்ற நன்றியை மறப்பவனும், பிறரிடம் மறைப்பவனும், கைம்மாறு செய்யாதவனும் செய்நன்றி கொல்லும் பாதகர்கள் இவர்களில் பெரிய பாதகன் நன்றியை மறப்பவன். - '''ஸிஸரோ'''
* நன்றியறியாமையில் சகல இழிதகைமைகளும் அடங்கும். இதர துர்க் குணங்களோடன்றி அது ஒரு பொழுதும் தனியாகக் காணப்படுவதுமில்லை. - '''புல்லர்'''
* நன்றியறியாமை ஒருவித பலவீனமே. பல முடையவர் நன்றியறியாதிருக்க நான் பார்த்ததில்லை. - '''கதே'''
* நன்றியறிதலைப் போன்ற இன்பகரமான மனோதர்மம் வேறொன்றுமில்லை. இதர அறங்களை அனுஷ்டிப்பதில் கஷ்டம் உண்டு. இதிலோ அணுவளவு கஷ்டமும் கிடையாது. -'''அடிஸன்'''
* நண்பர்களின் உதவியை நாம் மிகைப்படுத்திக் கூறுவதற்குக் காரணம் நம்முடைய நன்றியறிவுடைமையன்று. நம்முடைய தகுதியைப் பிறர்க்கு அறிவிக்க வேண்டுமென்ற ஆசையேயாகும். -'''ரோஷிவக்கல்டு'''
* சரியாய் மெச்சக் கற்றுக்கொள். வாழ்வின் பேரின்பம் அதுவே. பெரியோர் மெச்சுபவைகளைக்கவனி; அவர்கள் பெரிய விஷயங்களையே மெச்சுவர் தாழ்ந்தோரே இழிவான விஷயங்களை மெச்சவும் வணங்கவும் செய்வர். -'''தாக்கரே'''
* வீசு, குளிர்காற்றே! வீசு. மனிதனுடைய நன்றியறியாமைப் போல நீ அவ்வளவு அன்பற்றவன் அல்ல; உன் மூச்சு சீறினாலும் உன் பற்கள் கூரியதாயில்லை. -'''[[வில்லியம் ஷேக்ஸ்பியர்|ஷேக்ஸ்பியர்]]'''
* நன்றியறிதல் என்பது அதிக கவனமாய் உண்டாக்க வேண்டிய பயிராகும். அதைக் கீழோரிடைக் காண முடியாது. -'''ஜான்சன்'''
== பழமொழிகள் ==
 
* உப்பிட்டவரை உள்ளளவும் நினை. - தமிழ் பழமொழி
* நன்றியுள்ள மனிதன் எது சொன்னாலும் நம்பலாம். அவன் துரோகம் செய்யமாட்டான். - ஸ்பெயின் பழமொழி
* நன்றியறிதல் அறங்களில் குறைந்தது. நன்றியறியாமை மறங்களில் கொடியது.
 
 
== வெளியிணைப்புக்கள் ==
"https://ta.wikiquote.org/wiki/செய்ந்நன்றி" இலிருந்து மீள்விக்கப்பட்டது