கடமை: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
அடையாளங்கள்: கைபேசியில் செய்யப்பட்டத் தொகுப்பு கைபேசி வலைத்தளத்தில் செய்யப்பட்டத் தொகுப்பு
No edit summary
வரிசை 2:
 
== மேற்கோள்கள் ==
* கடமை உணர்ச்சியே உங்கள் நேர்மையான வாழ்வுக்கு சூத்திரம். - '''ஃகென்றி ஃபோர்ட்'''
* செய்யாமல் விட்ட ஒவ்வொரு கடமையும் புதிதாக ஏழு கடமைகளுடன் திரும்ப வரும். - '''இங்க்ஃசுவே'''
* கடமை தெளிவாக இருக்கிறபோது தாமதம் செய்வது அறிவீனம் மட்டுமல்ல, ஆபத்தும் கூட ; கடமை தெளிவாக இல்லாதபோது தாமதம் செய்வது விவேகம் மட்டுமல்ல, பாதுகாப்பானதும் கூட. - '''த்ரையன் எட்வார்ட்ஸ்'''
* கடமைக்கான அடிப்படைக் கொள்கை சரியாக இல்லாவிட்டால் செயலும் சரியானதாக இருக்க முடியாது. - '''டி.எட்வர்ட்ஸ்'''
கடமையைச் செய்துவிட்டேன்; அதற்காகக் கடவுளைத் துதிக்கிறேன். -'''செல்ஸன்'''
 
*உன் கடமையைச்செய்ய முயல்க; அப்பொழுது உன் தகுதியை உடனே அறிந்துகொள்வாய். -'''கதே'''
== பழமொழிகள் ==கடமை
* கடமையை நிறைவேற்ற அன்பு, தைரியம் என்று இரண்டு வழிக்காட்டிகள் உள. இரண்டும் ஒன்று கூடிவிட்டால் ஒருநாளும் வழி தவறுவதில்லை. -'''அனடோல் பிரான்ஸ்'''
* சாந்தம், குதூகலம்-இவையே அறங்களின் முன்னணியில் நிற்பன. இவையே பரிபூர்ணமான கடமைகள் ஆவன. - '''ஆர். எல். ஸ்டீவன்ஸன்'''
* பிறர்க்கு நான் செய்ய வேண்டிய கடமை யாது? அவரை நல்லவராக்குவதா? நான் ஒருவனைத்தான் நல்லவனாக்க வேண்டும். அவன் நானே. பிறர்க்குச் சந்தோஷம் அளிப்பதே அவர்க்கு நான் செய்யக்கூடிய கடமையாகும். - '''ஆர். எல். ஸ்டீவன்ஸன்'''
* நல்லவனும் ஞானியும் சில சமயங்களில் உலகத்தைக் கோபிக்கலாம், சில சமயங்களில் அதற்காக வருந்தலாம். ஆனால் உலகில் தன் கடமையைச் செய்பவன் எவனும் அதனிடம் ஒருபொழுதும் அதிருப்தி கொள்வதில்லை என்பது மட்டும் நிச்சயம். - '''ஸ்தே'''
* செய்ய இயலாததில் சினங்கொள்வது ஏன்? செய்ய இயன்றதைச் செய்வோமாக. -'''ரொமெய்ன் ரோலண்டு'''
* உலக அரங்கில், 'இன்ன வேஷதாரியாகத்தான் நடிப்போம்' என்று கூற இயலாது. கொடுத்தவேலையைத் திறம்படச்செய்து முடிப்பதே நமது கடன். -'''எபிக்டெட்டஸ்'''
* செய்ய வேண்டியதைச் செய்ய முயல்க; முயன்றால் செய்யவேண்டியது இது என்பதில் சந்தேகம் ஏற்படாது. -'''ஆவ்பரி'''
* கெட்ட காலம் வந்தால் எப்படிச் சகிப்பது என்பது குறித்து, நல்ல காலத்தில் சிந்தனை செய்வது மாந்தர் கடன். -'''டெரன்ஸ்'''
* இன்று உன்னால் கூடியமட்டும் நன்றாய்ச் செய், நாளை அதனினும் நன்றாய்ச் செய்யும் ஆற்றல் நீ பெறக் கூடும். -'''நியூட்டன்'''
* அறமே ஆற்றல் என்று நம்புவோமாக. அந்த நம்பிக்கையுடன் நாம் அறிந்த கடமையை ஆற்றத் துணிவோமாக. -'''[[ஆபிரகாம் லிங்கன்]]'''
* உன் கடமையைத் தைரியமாய்ச் செய்துவிட்டால் நீ அடையும் பலன் யாது? அதைச் செய்ததையே பலனாய் அடைவாய். செயலே பலனாகும். -'''ஸெனீக்கா'''
* சுயநலத்திலுள்ள நன்மை யாது? மனிதர் கடமையைக் கடனாகவும், உரிமையை வரவாகவும் ஆக்கிவிட்டனர்; வியாபாரம் என்றும் வியாபாரமே!<br> கடனின்றி வாழ விரும்பினால் உரிமைகளைத் துறக்க வேண்டும். -'''பால் ரிச்சர்டு'''
* ஒருபொழுதும் தவறு செய்யாதவன் ஒன்றும் செய்யமாட்டான். -'''ஆவ்பரி'''
* ஒன்றும் செய்யாது காத்திருப்பவரும் ஊழியம் செய்பவரே -'''மீல்டன்'''
* உனக்குத் தெரிந்தவற்றை யெல்லாம் நன்றாக அனுஷ்டிக்க முயல்க. அங்ங்ணம் செய்தால் நீ அறிய விரும்பும் மறைபொருள்களை யெல்லாம் சரியான காலத்தில் தெரிந்து கொள்வாய். -'''செம்பிராண்ட்'''
* தானே செய்யக்கூடியது எதையும் பிறர் செய்ய விடலாகாது. -'''இப்ஸன்'''
 
== வெளியிணைப்புக்கள் ==
"https://ta.wikiquote.org/wiki/கடமை" இலிருந்து மீள்விக்கப்பட்டது