குறிக்கோள்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
No edit summary
வரிசை 2:
 
* இலட்சியம் இல்லாத மனிதன் திசையறி கருவி இல்லாத கப்பலை யொப்பான். - '''ஆவ்பரி'''<ref name=இலட்சியம்>{{cite web | url=https://ta.wikisource.org/wiki/%E0%AE%89%E0%AE%B2%E0%AE%95_%E0%AE%85%E0%AE%B1%E0%AE%BF%E0%AE%9E%E0%AE%B0%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AE%BF%E0%AE%A9%E0%AF%8D_%E0%AE%A8%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AE%E0%AF%88_%E0%AE%AE%E0%AF%87%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%9F%E0%AF%81%E0%AE%A4%E0%AF%8D%E0%AE%A4%E0%AF%81%E0%AE%AE%E0%AF%8D_%E0%AE%8E%E0%AE%A3%E0%AF%8D%E0%AE%A3%E0%AE%99%E0%AF%8D%E0%AE%95%E0%AE%B3%E0%AF%8D/%E0%AE%87%E0%AE%B2%E0%AE%9F%E0%AF%8D%E0%AE%9A%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%AE%E0%AF%8D | title=உலக அறிஞர்களின் நம்மை மேம்படுத்தும் எண்ணங்கள்/இலட்சியம் | publisher=மெய்யம்மை நிலையம் | work=நூல் | date=திசம்பர் 2000 | accessdate=13 மே 2019 | author=என். வி. கலைமணி | pages=46- 50}}</ref>
* மேல் நோக்காதவன் கீழேயே நோக்குவான். உயரப் பறக்கத் துணியாத ஆன்மா ஒருவேளை தரையில் புரளவே விதிக்கப்பட்டிருக்கும். -'''பீக்கன்ஸ்பீல்டு'''<ref name=இலட்சியம்/>
* தாழ்ந்த இலட்சியத்தில் ஜெயம் பெறுவதைவிட உயர்ந்த இலட்சியத்தில் தோல்வியுறுவதே சிலாக்கியம். - '''[[ராபர்ட் பிரௌனிங்]]'''<ref name=இலட்சியம்/>
* எவ்விதம் இறந்தான் என்பதன்று கேள்வி- எவ்விதம் வாழ்ந்தான் என்பதே கேள்வி. -'''டாக்டர் ஜான்ஸன்'''<ref name=இலட்சியம்/>
* தன் சக்திகளிலிருந்து சாத்தியமான அளவு சாறு பிழியவே ஒவ்வொரு மனிதனுடைய வாழ்க்கை இலட்சியமாயிருத்தல் அவசியம். -'''ரிக்டர்'''<ref name=இலட்சியம்/>
* உழைப்பு, துக்கம், மகிழ்ச்சி-இம்மூன்றையும் மனிதன் அநுபவிக்கப் பிறந்தவன். இந்த மூன்றுமில்லாத வாழ்வு சரியான வாழ்வாகாது. -'''பழமொழி'''<ref name=இலட்சியம்/>
* மானிட உள்ளத்தின் தலைசிறந்த சிருஷ்டிகள் கூடப் பரிபூரணத்தில் மிகக் குறைந்தவை என்பது முற்றிலும் நியாயம்.-'''வாவனார்கூஸ்'''<ref name=இலட்சியம்/>
* ஒருவனுடைய லட்சியம் இதுவென்று அறிந்து விட்டால், பின் அவனைப் பற்றி அறிந்துகொள்ளுதல் கஷ்டமான காரியம் அன்று. -'''ஹோம்ஸ்'''<ref name=இலட்சியம்/>
* எந்த மனிதனையும் முற்றச் சோதிப்பது, இவனுக்கு எது பிரியம்? என்னும் கேள்வியே. - '''[[ஜான் ரஸ்கின்|ரஸ்கின்]]'''<ref name=இலட்சியம்/>
* ஆட்டு மந்தை போல் நடவாமையே அனைத்திலும் முக்கியமான விஷயம். பிறர்போகும் இடத்தைவிட்டு நாம் போகவேண்டிய இடத்தை அறிவதே கடன். -'''ஸெனீகா'''<ref name=இலட்சியம்/>
* வாழ்வின் இலட்சியத்தை அடைய முயல்வோனுடைய வாழ்வே நீண்டதாகும். யங் இறுதியில் லட்சியத்தை அடைவிக்குங் காரியங்களைச் செய்தால் மட்டும் போதாது. செய்யும் ஒவ்வொரு காரியமுமே ஒரு இலட்சியமாயிருத்தல் வேண்டும். -'''கதே'''<ref name=இலட்சியம்/>
* மனிதனுடைய உயர்ந்த விஷயங்கள் அவன் அருகிலேயே உள. அவன் பாதங்களின் அடியிலேயே அமையும். -'''ஹாட்டன் பிரபு'''<ref name=இலட்சியம்/>
* இன்பங்களைப்பெற முயல்வதிலும் இலட்சியங்களைப் பெருக்க முயல்வதே நலம். -'''ஆவ்பரி'''<ref name=இலட்சியம்/>
* லெளகீக வாழ்வினின்று விடுதலை பெற இரண்டு வழிகள் உள. ஒன்று இலட்சிய வாழ்விலும், மற்றொன்று மரணத்திலும் சேர்க்கும். -'''ஷில்லர்'''<ref name=இலட்சியம்/>
* முடிவில் பிரதானமானது நாம் எண்ணுவது எது, அறிவது எது, நம்புவது எது என்பதல்ல. நாம் செய்வது எது என்பதொன்றே பிரதானமான தாகும். -'''[[ஜான் ரஸ்கின்|ரஸ்கின்]]'''<ref name=இலட்சியம்/>
* ஒருவன் பிறர் லட்சியத்திற்காக இறக்க முடியும். ஆனால் அவன் வாழ்வதானால் தன் லட்சியத்திற்காகவே வாழ வேண்டும்.-'''[[ஹென்ரிக் இப்சன்|இப்ஸன்]]'''<ref name=இலட்சியம்/>
* தன் சக்தி எவ்வளவு உயர்ந்ததாயும் எவ்வளவு அளவொத்ததாயும் அபிவிருத்தியடைய முடியுமோ அவ்வளவு அபிவிருத்தியும் அடைவதே ஒவ்வொருவனுடைய லட்சியமாயிருக்கவேண்டும். -'''ஹம்போல்ட்'''<ref name=இலட்சியம்/>
* மனிதர் அவசியம் கவனிக்க வேண்டிய உண்மையான, நியாயமான, கெளரவமான விஷயம் தங்களைச் சுற்றியுள்ளவர், தங்களுக்குப் பின் வாழப் போகிறவர் இவர்களுடைய நன்மையை நாடுவதே. -'''ஹாரியட் மார்ட்டினோ'''<ref name=இலட்சியம்/>
* இவ்வுலகத்தை நன்கு பயன்படுத்தியே அவ்வுலகத்தை அடைதல் இயலும் நம் இயல்பைப் பூரணமாக்கும் வழி அதை அழித்து விடுவதன்று. அதற்கு அதிகமாக அதோடு சேர்ப்பதும், அதன் லட்சியத்திலும் உயர்ந்த லட்சியத்தை நாடச் செய்வதுமே.-'''நியூமன்'''<ref name=இலட்சியம்/>
* வாழ்வில் ஏற்படும் கஷ்டங்களைக் குறைக்க ஒருவெருக்கொருவர் உதவி செய்துகொள்வதற்கன்றி வேறெதற்காக நாம் உயிர் வாழ்கின்றோம்? -'''[[ஜார்ஜ் எலியட்]]'''<ref name=இலட்சியம்/>
* நீண்ட காலம் வாழவேண்டுமென்பது அநேகமாக ஒவ்வொருவருடைய ஆசையுமாகும். ஆனால் நன்றாய் வாழ விரும்புபவர் வெகுசிலரே. -'''ஹீஜிஸ்'''<ref name=இலட்சியம்/>
* நாளுக்கு நாள் ஏற்றம் பெற்றுவரும் லட்சியம் ஒன்று ஊழிகளை ஊடுருவி ஓடுகின்றதென்பதும், வருஷங்கள் ஆக ஆக மனிதர் கருத்துக்களும் விரிவடைகின்றன என்பதும் மெய். -'''டெனிஸன்'''<ref name=இலட்சியம்/>
== குறிப்புகள் ==
 
{{Reflist}}
[[பகுப்பு:உளவியல்]]
"https://ta.wikiquote.org/wiki/குறிக்கோள்" இலிருந்து மீள்விக்கப்பட்டது