மதம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 1:
[[:w:மதம்|மதம்]] என்பது கடவுளை அறிவதற்கான வழியில் மனித ஆன்மா கடந்து செல்லும் வழியாகும்.
 
==[[காரல் மார்க்சு]]==
==மேற்கோள்கள்==
* மதம் ஒடுக்கப்பட்ட மக்களின் ஏக்கப் பெருமூச்சாகவும் இதயமற்ற உலகின் இதயமாகவும், ஆன்மா இல்லாத நிலைமைகளின் ஆன்மாகவும் உள்ளது. மதம் மக்களுக்கு அபினி -கார்ல் மார்க்ஸ்.
*மதம் இதயமற்ற உலகின் இதயம்; (துன்பப்படும்) மக்களுக்குத் தேவையான அத்தியாவசியமான போதை - கார்ல் மார்க்ஸ்.
 
===[[காந்தி]]===
வரிசை 33:
*இந்து மதத்தில் கல்வித் தெய்வமும், செல்வத் தெய்வமும், வீரத்தெய்வமும் பெண் தெய்வங்களாய் இருந்தும், இந்துமதக் கொள்கைப்படி
== [[ஜவகர்லால் நேரு]] ==
* மதமானது அநேகமாக எப்போதுமே குருட்டு நம்பிக்கை, பிற்போக்கு, வறட்டுக் கோட்பாடு, வெறியுணர்ச்சி, முடநம்பிக்கை, சுரண்டல், உடமையாளர்களின் நலன்களைப் பாதுகாத்தல் ஆகியவற்றை ஆதரிப்பதாகத் தோன்றுகிறது. [[ஜவகர்லால் நேரு]]<ref>ஜவகர்லால் நேரு போராட்டகாலச் சிந்தனைகள், அர்ஜுன் தேவ், தமிழில் நா. தர்மராஜன், நேஷனல் புக்டிரஸ்ட், இந்தியா, பதிப்பு 2010, பக்கம் 225</ref>
* மதமானது தெளிவான சிந்தனைக்கு எதிரியாக எனக்குத் தோன்றுகிறது. ஏனெனில் அது மாற்றப்பட முடியாத சில தத்துவங்களையும் கோட்பாடுகளையும் மறுப்பில்லாமல் ஏற்றுக்கொள்வதை அடிப்படையாகக் கொண்டிருக்கிறது.<ref>ஜவகர்லால் நேரு போராட்டகாலச் சிந்தனைகள், அர்ஜுன் தேவ், தமிழில் நா. தர்மராஜன், நேஷனல் புக்டிரஸ்ட், இந்தியா, பதிப்பு 2010, பக்கம் 226</ref>
* மதத்திலிருந்துதான் எதேசதிகாரம் பிறக்கிறது, மக்கள் அடிமைகளாக்கப்படுகின்றனர். <ref>ஜவகர்லால் நேரு போராட்டகாலச் சிந்தனைகள், அர்ஜுன் தேவ், தமிழில் நா. தர்மராஜன், நேஷனல் புக்டிரஸ்ட், இந்தியா, பதிப்பு 2010, பக்கம் 88</ref>
* மதம் மனிதனுடைய சுதந்திர தாகத்தைக் குறைக்கின்ற அபீனாக கடந்த காலத்தில் அதிகமாகப் பயன்படுத்தப்பட்டது.<ref>மேற்படி</ref>
== [[லியோ டால்ஸ்டாய்]] ==
* சமயத்தைப் பற்றிச் சிந்தியாதவன், தான் பிறந்த சமயமே உண்மைச் சமயம் என்று எண்ணிக் கொள்கிறான்.
== பிறர் ==
* நூறு விதமாய்க் கூறினாலும் மதம் ஒன்று தான் உண்டு. '''பெர்னார்ட் ஷா'''
* உலகமே என் தேசம், நன்மை செய்வதே என் சமயம். -'''தாமஸ் பெய்ன்'''
* மனிதர் அனைவருக்கும் மதமாகிய கடிவாளம் தேவை. 'மரணத்திற்குப்பின் யாதோ?’ என்னும் பயமே மதம். -'''ஜார்ஜ் எலியட்'''
* அவனியிலுள்ள சமயங்களில் அறத்தாறு உய்ப்பது ஒன்றே உண்மைச் சமயம். -'''ஸவனரோலா'''
* நம்மிடம் பகைப்பதற்குப் போதுமான சமய உணர்ச்சி உளது. ஆனால் அன்பு செய்வதற்குப் போதுமான அளவு இல்லை. -'''ஸ்விப்ட்'''
* ஞானிகள் அனைவர்க்கும் ஒரே மதமே. அவர்கள் தத்தம் மதத்தை வெளியே கூறுவதில்லை. -'''லார்ட் ஷாப்ட்ஸ்பரி'''
* பண விஷமாய் நம்பத் துணியாத இடத்தில் ஆன்ம விஷயமாய் நம்பத்துணிவது எவ்வளவு விபரீதம்! மதாசாரியர் காலணா கொடுத்தால் அது செல்லுமோ செல்லாதோ என்று சந்தேகிப்போம். ஆனால் அவர்கள் கூறும் மதத்தை ஆராயாது சரி என்று அங்கீகரித்து விடுகிறோம். என்னே மனிதர் மடமை! - '''பென்'''
* சரியாக அறியாத சமயமே நம்மை அழகுக்கு அந்நியமாக்கும். சமயம் அழகைக் கண்டு ஆனந்திக்கும்படி செய்யுமானால், அப்பொழுது சமயம் உண்மை, சரியாக அறிந்திருக்கிறோம் என்று தெரிந்துகொள்ளலாம். -'''லெஸ்ஸிங்'''
* எல்லாச் சமயங்களுக்கும் ஒரே நோக்கம்தான். விலக்க முடியாததை ஏற்றுக் கொள்ளச் செய்வதே அந்த நோக்கம். -'''கதே'''
* எந்தக் காலமும் எனக்குத் துணையாய் நிற்க இறைவனிடம் ஏற்பதாயிருந்தால், முதலில் வேண்டுவது சமய சாந்தி, இரண்டாவது கல்வியில் சுவை. -'''ஹெர்ஷல்'''
* சமய அனுஷ்டானத்துக்கு இன்றியமையாது வேண்டப்படுவது மனித ஜாதியிடம் அன்பும் மரியாதையும் செய்தலே. - '''அனடோல் பிரான்ஸ்'''
* மனிதர்கள், இம்மைக்காக மறுமையையும், மறுமைக்காக இம்மையையும், ஒருபொழுதும் முழுவதும் வேண்டாம் என்று விட்டுவிட மாட்டார்கள். -'''ஸாமுவேல் பட்லர்'''
* சமயம் மாறுபவன் தலை போன பின் இன்ன தெனத்திரும்பிப் பார்க்கும் ஈயை ஒப்பான். -'''பட்லர்'''
* அற உணர்ச்சி அளிக்காத சடங்குகள் அனைத்தும் அழிக்கத் தக்கவைகளே. -'''ஸவனரோலா'''
* கிறிஸ்து, மதநூல் எதுவும் எழுதவில்லை. நன்மையான காரியங்களைச் செய்வதிலேயே கருத்தாயிருந்தார். -'''ஹொரேஸ் மான்'''
* கிறிஸ்து தர்க்க சாஸ்திரம் எதுவும் தந்து போகவில்லை. அவர் தந்திருப்பது சில எளிய உண்மைகளே. -'''ஹெடன்'''
* கிறிஸ்துவ மதம் அயலானுக்கு அன்பு செய்யப்போதிக்கும், ஆனால் தற்கால சமூகமோ அயலான் ஒருவன் உண்டு என்பதையே ஒப்புக்கொள்வதில்லை. -'''டிஸ்ரேலி'''
* தன் மதம் அடிமைத்தனம் என்று உணர்பவன் அதை இன்னும் அறிய ஆரம்பியாதவன். -'''ஜே.ஈ. ஹாலண்டு'''
* அறிவில்லாத சமயவாதிகள் சமயக் கொள்கைகளுக்காகச் சண்டையிடட்டும். ஆனால் தர்ம வழியில் நடப்பவன் ஒருநாளும் தவறியவனாகான். -'''போப்'''
* புனிதமான விஷயங்களை உணர்ச்சியின்றிக் கையாளும் வேஷதாரிகளே பெரிய நாஸ்திகர். அவர்களுக்கு இறுதியில் சூடு போடுதல் அவசியம். -'''பேக்கன்'''
* தொல்லையில்லாமல் இருப்பதற்காகவே ஜனங்கள், 'நாங்கள் எல்லோரும் ஒரே மதத்தினர்' என்று கூறிக் கொள்கின்றனர். ஆனால் விஷயத்தை நன்கு ஆராய்ந்தால், எல்லா விஷயங்களிலும் ஒரே மதத்தையுடைய மூன்று பேரைக்கூட எங்கும் காண முடியாது. - '''ஸெல்டன்'''
* மதப் பிடிவாதி, ஆப்பிரிக்க எருமை போல் இருப்பவன். நேரேதான் பார்ப்பான்- பக்கங்களில் திரும்பான். -'''பாஸ்டர்'''
* ஜனங்கள் சமயத்திற்காகச் சண்டையிடுவர், வாதம் புரிவர், வசை பகர்வர், அயலாரைத் துன்புறுத்துவர், அனலிலும் இடுவர், உயிரைத் துறக்கவும் செய்வர்- சமயத்திற்காக எல்லாம் செய்வர். ஆனால், சமய வாழ்வு வாழ மட்டும் செய்யார். சிலரேனும் வாழ முயலவாவது வேண்டாமோ? அதுகூடக் கிடையாது. -'''பிரிஸ்வெல்'''
* விக்கிரகங்கள் சந்தேகத்திற்கு இடமாயும், வணங்குவோர் இதயத்திற்கு எல்லாவித நல்லுணர்ச்சியும் தரச் சக்தியற்ற சர்வ சூனியமாயும் ஆகும்பொழுது தான் விக்கிரக ஆராதனை தவறாகும். -'''கார்லைல்'''
* நட்பு விஷயத்திற் போலவே மத விஷயத்திலும் யார் அதிகப் பற்றுடையவர்களாகக் கூறிக் கொள்கிறார்களோ, அவர்களே அந்த அளவிற்கு உண்மை நம்பிக்கை குறைந்தவர்களாவர். -'''ஷெரிடன்'''
* மதப்பிடிவாதமுடையவர் அவர்கள் வாழ்நாளில் மட்டுமே மதியுடையவராய் மதிக்கப்படுவர். -'''தாமஸ் வில்ஸன்'''
* நாம் உண்மை என்று நம்புவதை ஒப்புக்கொள்ள மறுப்பவரை நாஸ்திகர் என்று கருதுவது பெருந்தவறு. இழிவான நோக்கங்கொண்டு உண்மைக்குச் செவிசாய்க்க மறுப்பவரே நாஸ்திகர். சமயக் கோட்பாடுகளை எல்லாம் நம்புவதாய்க் கூறிக்கொண்டு சமய ஒழுக்கம் இல்லாதவன் நாஸ்திகரில் நாஸ்திகன். -'''ஹெச்.ஏ.'''
* மதப் பிடிவாதியின் மனம் கண்ணை ஒக்கும், அதிக ஒளி பட்டால் அதிகமாக இடுக்கும். -'''ஹோம்ஸ்'''
* மதப் பிடிவாதம், மதத்தைக் கொன்று, அதன் ஆவியைக் காட்டி மூடர்களைப் பயமுறுத்தும். -'''கோல்டன்'''
* மதப் பிடிவாதத்துக்கு மூளையில்லை, அதனால் யோசிக்க முடியாது; இதயமில்லை, அதனால் உணர முடியாது. -'''ஒகானல்'''
 
 
==சான்றுகள்==
"https://ta.wikiquote.org/wiki/மதம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது