வெ. சாமிநாத சர்மா: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
"'''வெ. சாமிநாத சர்மா''' (17 செப..."-இப்பெயரில் புதிய பக்கம் உருவாக்கப்பட்டுள்ளது
 
No edit summary
வரிசை 1:
'''வெ. சாமிநாத சர்மா''' (17 செப்டம்பர் 1895 - 1 சூலை 1978) தமிழறிஞர், அறிவியல் தமிழின் முன்னோடி, பன்மொழி அறிஞர் எனப் பல ஆளுமை கொண்டவர். "பிளாட்டோவின் அரசியல்", "சமுதாய ஒப்பந்தம்", கார்ல் மார்க்ஸ், "புதிய சீனா", ”பிரபஞ்ச தத்துவம்” என்று அரசறிவியல் தலைப்புகளில் விரிவாக எழுதியுள்ளார்.
== இவரது மேற்கோள்கள் ==
* வாழ்க்கை வசதிகளை ஓரளவு பெற்றிருப்பவர்கள், நிரந்தர வருவாயுள்ளவர்கள், இப்படிபட்டவர்களுக்குத்தான் அதைரியமும், அவநம்பிக்கையும் உண்டாகின்றன. உடலை ஓடித்து அன்றாட ஜீவனத்தை நடத்துபவர்கள், இப்படி அதைரியமோ, அவநம்பிக்கையோ கொள்வதில்லை.<ref>{{cite book | title=எனது பர்மா வழி நடைப் பயணம் | publisher=மகாகவி பதிப்பகம் | author=வெ. சாமிநாத சர்மா | authorlink=விமானத்திலும் கால்நடையாகவும் | year=2006 செப்டம்பர் 19 | location=சென்னை | pages=60}}</ref>
 
* இந்தியர்களில் பெரும்பாலோருக்குச் சுத்த உணர்ச்சி என்பது மிகவும் குறைவு என மேனாட்டார் சிலர் குறை கூறுவார்களானால் அதை நான் வெட்கத்துடன் ஏற்றுக் கொள்ளத்தான் வேண்டும். தம்மைப் பொறுத்தமட்டில் சுத்தமாயிருக்க வேண்டும் மென்று நினைகிகறார்களே தவிர, சுற்றுப்புறத்தையும் சுத்தமாக வைத்திருக்க வேண்டும் என்று நினைப்பதில்லை. குடிதண்ணீரில் கால் கழுவுவதும், கண்ட இடத்தில் எச்சில் துப்புவதும், குப்பைக் கூளங்களை அக்கம் பக்கத்திலேயே வீசியெறிவதும் அநேகருக்கு சர்வ சாதாரணப் பழக்கங்களாயிருக்கின்றன. இதில் தென்னாட்டவரைக் காட்டிலும் வட நாட்டவரைப் பெரிய குற்றிவாளிகளென்று சொல்ல வேண்டும்.<ref>{{cite book | title=எனது பர்மா வழி நடைப் பயணம் | publisher=மகாகவி பதிப்பகம் | author=வெ. சாமிநாத சர்மா | authorlink=கலோவாவுக்கு... | year=2006 செப்டம்பர் 19 | location=சென்னை | pages=90}}</ref>
== இவரைக் குறித்து பிறர் ==
* உலகத்து அறிவையெல்லாம் ஒன்று திரட்டி தமிழனின் மூளையில் ஏற்றி, உன்னதமான தமிழர்களை உற்பத்தி செய்ய இதுவரை யாராவது முயன்று இருக்கிறார்களா? எனக்கு அன்றும் இன்றும் ஒரே பெயர்தான் ஞாபகத்தில் நிற்கிறது. அதுதான் திரு. வெ. சாமிநாத சர்மா. நான் பெற்ற பொது அறிவியல் இருபது சதவீதம் திரு. சாமிநாத சர்மாவின் நூல்கள் தந்தவையே. [[கண்ணதாசன்]]
== சான்றுகள் ==
== சான்று ==
{{Reflist}}
"https://ta.wikiquote.org/wiki/வெ._சாமிநாத_சர்மா" இலிருந்து மீள்விக்கப்பட்டது