காதல்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
விவிலியம்
வரிசை 4:
* காதல், நெஞ்சில் ஒரு பொறியாகத்தான் இருக்கிறது; ஆனால் நாவிலோ அது பெரும் காவியமாய் இருக்கிறது. - [[லாங்க்பெல்லொ]]
* காதலே! உலகத்தில் உள்ள இன்பங்களும் உனக்கு ஈடாகாது என்பதை ஒப்புக் கொள்கிறேன். நீயும் நீ தரும் துன்பங்களுக்கு எல்லையே இல்லை என்பதை ஒப்புக் கொள். -[[சார்லவால்]]
* உங்கள் இதயத்தில் என்னை முத்திரையாகப் பதியுங்கள். உங்கள் கையில் என்னை முத்திரையாகக் குத்துங்கள். அன்பு, மரணத்தைப் போல் வலிமையானது. இணைபிரியாத நேசம், கல்லறையைப் போல் விடாப்பிடியானது. அன்பின் ஜுவாலை கொழுந்துவிட்டு எரிகிற தீ ஜுவாலை, அது “யா”வின் ஜுவாலை. பாய்ந்து வரும் வெள்ளம்கூட அன்பின் ஜுவாலையை அணைக்க முடியாது. ஓடிவரும் நதிகள்கூட அன்பை அடித்துச் செல்ல முடியாது. ஒருவன் அன்பை விலைக்கு வாங்க தன் செல்வத்தைக் கொட்டிக் கொடுத்தாலும், அந்தச் செல்வம் அடியோடு ஒதுக்கித்தள்ளப்படும். -[[விவிலியம் உன்னதப்பாட்டு 8:6, 7]]
* வாழ்க்கை என்பது ஒரு மலர்; காதல் என்பது அதிலே ஊறும் தேன். -[[விக்டர் ஹியூகோ]]
* உண்மையைச் சொன்னால் காதலுக்கும் நியாயத்திற்கும் இப்பொழுதெல்லாம் உறவு அதிகமில்லை. -[[சேக்சுபியர்]]
* இந்த உலகத்தில் நான் யாரோ ஒருவன் என நினைக்காதே யாரோ ஒருத்திக்கு நீயே உலகமாக இருக்க முடியும். -[[பில் வில்சன்]]
* அன்பு பொறுமையும் கருணையும் உள்ளது. அன்பு பொறாமைப்படாது, பெருமையடிக்காது, தலைக்கனம் அடையாது, கேவலமாக நடந்துகொள்ளாது, சுயநலமாக நடந்துகொள்ளாது, எரிச்சல் அடையாது, தீங்கை கணக்கு வைக்காது, அநீதியைக் குறித்து சந்தோஷப்படாமல் உண்மையைக் குறித்து சந்தோஷப்படும். எல்லாவற்றையும் தாங்கிக்கொள்ளும், எல்லாவற்றையும் நம்பும், எல்லாவற்றையும் நம்பிக்கையோடு எதிர்பார்க்கும், எல்லாவற்றையும் சகித்துக்கொள்ளும். அன்பு ஒருபோதும் ஒழியாது. -[[விவிலியம் 1 கொரிந்தியர் 13:4-8]]
* காதல், இருமல், புகை இவற்றை மூடி மறைப்பது கஷ்டம். - [[பெஞ்சமின் பிராங்க்ளின்]]
* காதல், சாளரம் வழியாகப் புகுந்து, கதவு வழியாக வெளியே செல்லும். -வில்லியம் கேம்டன்
"https://ta.wikiquote.org/wiki/காதல்" இலிருந்து மீள்விக்கப்பட்டது