"தமிழ்ப் பழமொழிகளும் சொலவடைகளும்" பக்கத்தின் திருத்தங்களுக்கிடையேயான வேறுபாடு

869 பைட்டுகள் சேர்க்கப்பட்டது ,  16 ஆண்டுகளுக்கு முன்
தொகுப்பு சுருக்கம் இல்லை
* அழுகிற பிள்ளைதான் பால் குடிக்கும்.
* அழுதும் பிள்ளை அவளே பெறவேண்டும்.
* அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு.
* அற்பருக்குப் பவிசு வந்தால் அர்த்த ராத்திரியில் குடை பிடிப்பர்.
* அற நனைந்தவனுக்குக் குளிரென்ன கூதலென்ன.
* கண்களை விற்றுச் சித்திரம் வாங்குதல் போல்.
* கரும்பு தின்னக் கைக்கூலி வேண்டுமா?
* கலங்கிய குட்டையில் மீன் பிடிப்பது போல.
* கழுதை அறியுமா கற்பூர வாசனை?
* காக்கைக்கும் தன் குஞ்சு பொன் குஞ்சு.
* குடிகாரன் பேச்சு விடிஞ்சாலே போச்சு.
* குண்டுச் சட்டியில் குதிரை ஓடுவது போல்.
* குரங்குப் புண்ணுக்கு அருமை காட்டினால் கொப்பிலே கொப்பிலே தாவுமாம்.
* குரைக்கிற நாய் கடிக்காது.
* கெட்டாலும் செட்டி கிழிந்தாலும் பட்டு.
* கைப் புண்ணுக்குக் கண்ணாடி வேண்டாம்.
* கையில் வெண்ணெயை வைத்துக்கொண்டு நெய்க்கு அலைவது போல்.
* சந்திரனைப் பார்த்து நாய் குரைப்பது போல.
* சிறு பிள்லைபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது.
* சுவரிருந்தால்தான் சித்திரம் வரையலாம்.
* தடியெடுத்தவன் தண்டக்காரன்.
* தம்பியுள்ளான் படைக்கஞ்சான்.
* தயிர் திரையும் போது தாழி உடைவது போல்.
* தன் வினை தன்னைச் சுடும்.
* தனிமரம் தோப்பாகாது.
* பாம்பைக் கண்டால் படையும் நடுங்கும்.
* பிச்சை எடுத்ததாம் பெருமாள் அதையும் பறித்ததாம் அனுமார்.
* பிள்ளையையும் கிள்ளித் தொட்டிலையும் ஆட்டுவது போல்.
* புதுமைக்கு வண்ணான் கரைகட்டி வெழுப்பான்.
* பொறுத்தார் அரசாள்வார் பொங்கினார் காடாள்வார்.
* போதுமென்ற மனமே பொன் செய்யும் மருந்து.
* மருண்டவன் கண்ணுக்கு இருண்டதெல்லாம் பேய்.
* மாமியார் உடைத்தால் மண்குடம் மருமகள் உடைத்தால் பொன் குடம்.
* முடக் குதிரைக்குச் சறுக்கினது சாட்டு.
* முள்ளை முள்ளால் எடுக்கவேண்டும்.
* மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடிச்சுப் போடுவது போல்.
* யானை இருந்தாலும் ஆயிரம் பொன் இறந்தாலும் ஆயிரம் பொன்.
* யானை வரும் பின்னே மணியோசை வரும் முன்னே.
30

தொகுப்புகள்

"https://ta.wikiquote.org/wiki/சிறப்பு:MobileDiff/15" இருந்து மீள்விக்கப்பட்டது