காரல் மார்க்சு: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
கூடுதல் மேற்கோள்கள் இணைக்கப்பட்டுள்ளது
வரிசை 19:
* உழைப்பு என்பது மனிதனும் இயற்கையும் இணைந்து பங்கேற்கிற ஒரு இயக்கம்.
* மனிதர்களின் வாழ்நிலையை நிர்ணயிப்பது அவர்களின் உணர்வு அல்ல. மாறாக,, அவர்களது சமூக வாழ்நிலையே அவர்களது உணர்வை நிர்ணயிக்கிறது.
* வாழ்வதற்கும் எழுதுவதற்கும் எழுத்தாளன் சம்பாதிக்க வேண்டும் என்பது உண்மையே… ஆனால் சம்பாதிப்பதற்காகவே அவன் வாழவோ எழுதவோ கூடாது. எழுத்தாளனுக்கு அவனது எழுத்து ஒரு கருவி அல்ல. அது தன்னளவிலேயே முடிந்த ஒரு இலக்கு, தேவைப்பட்டால் எழுத்து உயிர்பெற்றிருக்க தனது உயிரையும் அவன் தியாகம் செய்வான். (பத்திரிகை சுதந்திரம் குறித்து ஒரு அரசியல் விவாதத்திற்கு மார்க்ஸ் எழுதியது)
 
=== கம்யூனிஸ்ட் கட்சி அறிக்கை ===
* இதுவரையிலான சமுதாயம் அனைத்தின் வரலாறும் வர்க்க போராட்டங்களின் வரலாறாகவே இருந்துள்ளது.
* சமுதாய உற்பத்திப் பொருள்களை தன்வயமாக்கிக் கொள்ளும் ஆற்றலைக் கம்யூனிசயம் எவரிடமிருந்தும் பறிக்கவில்லை. உற்பத்திப் பொருள்களை தன்வயமாக்கிக் கொள்வதன் மூலம் பிறரது உழைப்பை அடிமைப்படுத்தும் ஆற்றலைத்தான் அவரிடமிருந்து பறிக்கிறது.
 
===கூலியுழைப்பும் மூலதனமும் ===
* முதலாளித்துவ உற்பத்தி தொழில்நுட்பத்தை வளர்த்தெடுக்கிறது. இதனை உற்பத்தியின் மற்ற அம்சங்களுடன் இணைத்து சமூகத்தின் ஒட்டு மொத்த தன்மையை உருவாக்குகிறது. ஆனால் இந்த நிகழ்வு போக்கில் செல்வத்தின் ஆதாரங்களாக விளங்குகின்ற மண்ணையும் உழைப்பாளியையும் முதலாளித்துவம் சீரழிக்கிறது.
* முதலாளித்துவ அமைப்பு முறை தானாக நொறுங்கி வீழாது. தொழிலாளி வர்க்கத்தின் விடாப்பிடியான போராட்டங்களின் மூலமாகத்தான் அதனை வீழ்த்திட முடியும்.
* கூலியானது தொழிலாளி உற்பத்தி செய்யும் பண்டத்தில் அவருக்குரிய பங்கு அல்ல. ஏற்கெனவே இருந்துவரும் பண்டங்களில் எப்பகுதியைக் கொண்டு முதலாளி உற்பத்தித் திறனுள்ள ஒரு குறிப்பிட்ட அளவு உழைப்புச் சக்தியை வாங்குகிறாரோ, அப்பகுதியே கூலியாகும்.
== பெண் ==
"https://ta.wikiquote.org/wiki/காரல்_மார்க்சு" இலிருந்து மீள்விக்கப்பட்டது