விநாயகம்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
No edit summary
வரிசை 8:
== தமிழக வடக்கெல்லை மீட்புக்கு ஆதரவு ==
ஆந்திர அரசு தமிழ்நாட்டின் பல பகுதிகளில் மீதும் உரிமை கொண்டாடத் தொடங்கியிருக்கிறது. ஓசூர், கிருட்டினகிரி, குடியாத்தாம், பொன்னேரி, திருவள்ளூர். எத்தகைய ஆதாரமும் இல்லாமல் ஆந்திர அரசு இவ்வாறு உரிமை கொண்டாடுவதற்கு ஆழ்ந்த உள்நோக்கம் இருக்கிறது. திருத்தணி தாலுகாவைப் பொறுத்தவரையில் 73% தமிழர்கள் அங்கு வாழ்கிறார்கள். சித்தூர் மாவட்டத்தைப் பொறுத்தவரையில் அங்கும் பெரும்பாண்மை தமிழர்களே இருக்கிறார்கள். தெலுங்கர்களை விட தமிழர்களின் எண்ணிக்கை 4000 அதிகம் ஆகும்.
 
== தமிழக தெற்கெல்லை மீட்புக்கு ஆதரவு ===
மாநில புணரமைப்புக் கமிசனின் தலைவர் சர். பசல் அலி பீகாரைச் சார்ந்தவர். அவருடைய சொந்த மாநிலமான பீகார் பற்றிய விவாதம் நடைபெற்ற போது அவர் அதில் கலந்துகொள்ளாமல் வெளியேறி விட்டார். அவருடைய இந்த நேர்மையான நடவடிக்கையை நான் பாராட்டுகிறேன். ஆனால் கமிசனின் மற்றொரு உறுப்பினரான கே. எம். பணிக்கரிடம் இத்தகைய நேர்மையில்லை. தமிழ்நாடு, கேரளம் ஆகியவை பற்றிய பிரச்சினை விவாதிக்கப்படும் போது மலையாளியான அவர் இந்த கமிசன் கூட்டத்தில் கலந்து கொண்டிருக்கக் கூடாது. குறிப்பாக தேவிகுளம், பீர்மேடு தாலுகாக்களை பற்றிய பிரச்சினைகளில் அவர் அளவு கடந்து அக்கரை காட்டி இந்த தாலுக்கா கேரளத்துடனேயே இணைக்க வேண்டும் என்று கமிசனுக்குள்ளேயும், வெளியேயும் வாதாடி வருகிறார்.
 
=== ஆரணியாற்றுப் படுகை தொடர்பான பேச்சு ===
ஆரணி ஆற்றுப் பாசனத்தில் உள்ள பெரும்பகுதியான நிலங்கள் தமிழகத்தில் உள்ளன. இப்போது கிராமங்களைப் பிரித்த பிறகு ஆரணியாறு அணை இருக்கக் கூடிய இடம் ஆந்திராவிறகுப் போய் விட்டது. இதன் விளைவாக தமிழ்நாட்டில் இருக்கக்கூடிய 22 கிராமங்களில் உள்ள 13,000 ஏக்கர் நிலம் பாதிக்கப்டுகிறது. நீர்ப்பாசன வசதிகளைப் பிரித்து வைக்கக்கூடாது என்பதை மாநில அரசுகளும் மத்திய அரசும் ஒப்புக்கொண்டு இருக்கின்றன. ஆந்திராவில் உள்ள 13 கிராமங்களில் வசதிக்காக ஆரணி அணைப்பகுதி அளிக்கப்பட்டது. ஆரணியாறு அணைப்பகுதியையும் 35 கிராமங்களையும் தமிழ்நாட்டுடன் தான் இணைத்து இருக்க வேண்டும். கிராமத்தை அடிப்படையாக வைத்துக் கொண்டால்தான் ஆரணி ஆற்றுப் பகுதி ஆந்திராவிற்குப் போய் விட்டது. பிர்க்காவை அடிப்படையாகக் கொண்டு பிரிவினை செய்திருந்தால் இந்தப் பகுதி தமிழ்நாட்டுக்கு வந்திருக்கும். சித்தூர், திருத்தணி, நகரி, சத்தியமேடு ஆகிய பிர்க்காக்கள் தமிழ்நாட்டிற்கும் கிடைத்திருக்கும். பிர்க்காவை அடிப்படையாக வைத்து பிரிவினை செய்யக்கூடாது என ஆந்திரக் கம்யூனிஸ்டுகளும், கிளர்ச்சி செய்தார்கள். அதை மத்திய காங்கிரசு ஆட்சி ஏற்றுக்கொண்டது. இதன் விளைவாக தமிழ்நாட்டிற்கு பாதகம் ஏற்ப்பட்டது.
"https://ta.wikiquote.org/wiki/விநாயகம்" இலிருந்து மீள்விக்கப்பட்டது