கமல்ஹாசன்: திருத்தங்களுக்கு இடையிலான வேறுபாடு

இந்திய அரசியல்வாதி, நடிகர், நடனர், பாடகர், இயக்குநர்
உள்ளடக்கம் நீக்கப்பட்டது உள்ளடக்கம் சேர்க்கப்பட்டது
தொடக்கம் (edited with ProveIt)
(வேறுபாடு ஏதுமில்லை)

11:55, 26 மே 2016 இல் நிலவும் திருத்தம்

கமல்ஹாசன் (பிறப்பு - நவம்பர் 7, 1954, இராமநாதபுரம்), புகழ்பெற்ற இந்தியத் திரைப்பட நடிகர் ஆவார். இவர் சில திரைப்படங்களை இயக்கியும் உள்ளார். இவரின் மாறுபட்ட வேடங்களைக் கொண்ட நடிப்பிற்காக பரவலாக அறியப்படுகிறார்.[1][2][3]

மேற்கோள்கள்

  • ‘தேவர் மகன்’ படத்தில் ‘விதை நான் போட்டது’ என்ற வசனத்தை எழுதியிருப்பேன். அதை சிவாஜி கணேசன் பேசியிருப்பார். அந்த விதைகளில் ஒன்றுதான் நான். [4]
  • ‘தேவர் மகன்' படத்தில் சிவாஜிக்கு போய் எப்படி வசனம் சொல்லிக் கொடுப் பது என பயந்தது உண்டு. வசனம் என்றால் என்ன என்று தெரிந்து கொண்டதே அவரிடம்தான். ஆனால், அவரை விட பணிவான நடிகரை இதுவரை நான் பார்த்ததில்லை. பார்க்க கம்பீரமாக இருந்தாலும், பூனைக் குட்டியாக மாறி விடுவார். வசனம் நன்றாக இருந்தால், ‘‘அதை எப்படி சொல்ல வேண்டும் என்று சொல்லுப்பா’’ எனக் கேட்பார். அந்த ஊக்கம் ‘தேவர் மகன்' படம் முழுவதும் வியாபித்தது.[4]
  • சிவாஜி கணேசன் பற்றி கமல்
  • ஒரு கனவு நனவாகி விட்ட நிலையில் நாம் காண வேண்டியது இன்னொரு கனவு.[5]
  • ஒரு குடிகாரனைப் பற்றி படமெடுத்தால் தான் மதுவிலக்கு பற்றி எடுக்க முடியும். என்ன சொல்ல வருகிறோம் என்று தெரியாமல் ஜாதிப் பெயர் இருக்கிறதே என்றால், முதலில் ஜாதிப் பெயரை தெருவில் இருந்து எடுங்கள். பெயருக்கு முன்னாள் இருந்து ஜாதிப் பெயரை எடுங்கள். நான் எடுத்துவிட்டேன்.[6]
  • நட்சத்திரம் என்று சொல்லி அந்நியப்படுத்த வேண்டாம். என்னை எப்போதும் தொழிலாளியாக ஏற்றுக் கொள்ளுங்கள்.[7]
  • தென்னிந்திய நடிகர் சங்க கூட்டத்தில் கூறியது.

சான்றுகள்

"https://ta.wikiquote.org/w/index.php?title=கமல்ஹாசன்&oldid=12627" இலிருந்து மீள்விக்கப்பட்டது